சுயமரியாதை இயக்க நூற்றாண்டில் சமூகநீதிச் சுடரை இந்தியா எங்கும் ஏற்றுவோம் ! – மஞ்சை வசந்தன்

1925 இந்திய வரலாற்றில் ஒரு முதன்மையான ஆண்டு. பலநூறு ஆண்டுகள் வேத, சாஸ்திரங்களின் அடிப்படையில் மக்களை வேறுபடுத்தி, கூறுபடுத்தி, உயர்வு தாழ்வு கற்பித்து, இழிவுபடுத்தி, தீண்டாமையைக் கடைப்பிடித்து வந்த நிலைக்கு எதிராய் புத்தர் காலத்தில் பெரும் எழுச்சி ஏற்பட்டது. அந்த எழுச்சியும் புஷ்யமித்திரன் காலத்தில் முறியடிக்கப்பட்டு, மனுசாஸ்திரம் என்னும் மனித விரோத சாஸ்திரம் ஆரியர்களின் மேன்மைக்கும், ஆதிக்கத்திற்கும் உரிய வகையில் எழுதப்பட்டு அது நடைமுறைப்படுத்தப்பட்டது. இஸ்லாமியர் ஆட்சிக் காலத்திலும், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும் இந்நிலையே நீடித்தது. திருப்பாதிரிப்புலியூர் […]

மேலும்....

இந்தியாவுக்கு ஏற்ற மே தினம் எது ? – தந்தை பெரியார்

மே தினம் என்பது இன்று உலகமெங்கும் ஒவ்வொரு தேசங்களிலும் கொண்டாடப்படுவதனாலும் ஒவ்வொரு தேசத்தில் ஒவ்வொரு விதமாகக் கொண்டாடப்படுகின்றது என்பதில் உண்மை இல்லாமல் இல்லை. ரஷ்யாவில் கொண்டாடப்படுவது போல் இங்கிலாந்தில் கொண்டாடப்பட மாட்டாது. ஸ்பெயினில் கொண்டாடப்படுவது போல் பிரெஞ்சில் கொண்டாடப்பட மாட்டாது. அதுபோலவே தான் மேல் நாடுகளில் அய்ரோப்பா முதலிய இடங்களில் கொண்டாடப்படுவது போல் இந்தியாவில் கொண்டாடத் தக்க நிலைமை இல்லை. ஏனெனில், ஒவ்வொரு தேசத்தின் நிலைமை வெவ்வேறான தன்மையில் இருந்து வருகிறது. எல்லா தேசமும் ஒரே விதமான […]

மேலும்....

இட ஒதுக்கீட்டிற்கு எதிரானவர்கள் நீலிக் கண்ணீர் வடிக்கலாமா ?

நாட்டின் 18ஆவது பொதுத் தேர்தல் – ஏழு கட்டங்களாகத் தேர்தல் ஆணையம் பிரித்து நடத்தும் மக்களவைத் தேர்தலில், பிரதமர் மோடி அவர்கள், தேர்தல் பிரச்சார மேடைகளை, பொய் மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டும் மேடைகளாக்கி, மக்களை, ஏதோ ஒன்றுமே தெரியாதவர்கள் போலக் கருதி, நாளும் ஒருபுறம் பொய் ; மறுபுறம் சட்ட விரோதமாக மதம், ஜாதி இவற்றை நேரிடையாகவே கூச்சநாச்சமின்றி, தாம் உறுதி எடுத்த அரசமைப்புச் சட்டப் பிரமாணத்திற்கு எதிராகவே பேசி வருகிறார் என்பது இந்த நாட்டு அரசியல் […]

மேலும்....

அயோத்திதாச பண்டிதர் நினைவு நாள் : 05.05.1914

தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சுயமரியாதை உணர்வு ஊட்டியவர். ஒடுக்கப்பட்டவர்கள் கல்வி பெறுவதன் மூலமே தம்மை உயர்த்திக் கொள்ள முடியும் என்பதால் அவர்களின் கல்விக்காகப் பள்ளிகளைத் திறக்கவும் அங்கு பகலுணவு இலவசமாக அளிக்கவும் பின்னால் வருபவர்கள் அதனைச் சிறப்பாக, விரைவாகச் செய்யவும் வித்திட்டவர்.

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா ?

குலத்தொழிலைச் செய்யவேண்டிய கீழ்ஜாதிக்காரர்கள் சட்டசபைக்குப் போட்டியிடக்கூடாது என்று பகிரங்கமாகப் பேசியவர்தான் ‘தேசியத் திலகம்’ கோபாலகிருஷ்ண கோகலே என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....