கண்ணியத்தின் உறைவிடம் கலைவாணர்!-முனைவர் கடவூர் மணிமாறன்

நாடறிந்த கலைவாணர் சான்றோர் போற்றும் நற்குணத்தர்; உயர்மனத்தர்! வாழ்நாள் எல்லாம் பீடார்ந்த அறிவியக்கப் பாதை சென்ற பெற்றியராய் எளியோரின் நிழலாய் அன்னோர் கேடெல்லாம் நீங்கிடவே துணையாய் நின்றார்! கேட்போர்க்கு மறுப்பின்றிக் கொடையை நல்கி ஈடற்ற புகழ்குவித்தார்! இழிந்த நெஞ்சர் இடக்கெல்லாம் வீழ்த்திடவே எதிர்த்து வென்றார்! கொஞ்சுதமிழ்ப் படங்களிலே புதுமை சேர்த்தார் குடியரசாம் இதழ்படித்தே பெரியார் கொள்கை நெஞ்சாரப் போற்றுகிற மாண்பைப் பெற்றார்! நினைவெல்லாம் தமிழரது மேன்மை என்றார்! வஞ்சகத்தார் விரித்திட்ட வலையில் வீழா வல்லமையைப் பெறவேண்டி உழைத்தார்! […]

மேலும்....

வலியுறையும் வயநாடு வடுக்கள் ..!- திருப்பத்தூர் ம.கவிதா

ஆலமரத்து ஊஞ்சலிலே ஆடியிருந்த அழகுச் சிட்டு பட்டாம்பூச்சி பிடித்து வந்து பாடிப் பாடி சிரித்த மொட்டு காலையெழுந்து பள்ளி போகும் கனவுகளோடே மாண்டதோ? கண்ணைக் கசக்கி நிற்கையிலே முந்தானையால் முகம் துடைத்து மார்போடு அணைத்த தாயும் மண்ணோடு போனாரோ? தோள் மேலே தூக்கி வைத்து காடு மேடு கழனி காட்டி கைப்பிடித்து வந்த தந்தை கண்மூடிப் போனாரோ? பாட்டி தாத்தா அத்தை மாமன் கூடிப் பிழைத்த பிழைப்பு எல்லாம் கூட்டாய்ச் செத்து மடிந்ததுவோ? ஆக்கி வச்ச சோறு […]

மேலும்....

நமது கடமை- முனைவர் வா.நேரு

சில வெளிநாட்டு அறிஞர்களின் பெயரைக் கேட்டாலே சங்கிகள் பதறுவதுண்டு. அவர்களுக்கு அந்தப் பெயர்களின் பேரில் பெரும் ஒவ்வாமை உண்டு. அவர்களில் ஒருவர் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் தந்த அறிஞர் ராபர்ட் கால்டுவெல் ஆவார். அவருடைய நினைவு நாள் ஆகஸ்ட் 28. அவர் 1891இல் மறைந்தார். அவர் 1814ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி அயர்லாந்து நாட்டில் பிறந்தார். தனது இளம் வயதில், (24 வயதில்) ‘லண்டன் மிஷனரி சொசைட்டி’ என்னும் கிறித்துவ மதக் குழுவுடன் இணைந்து […]

மேலும்....

ராமர் பெயரில் ரியல் எஸ்டேட் கொள்ளை- சரவணா ராஜேந்திரன்

தோல்விக்குப் பிறகு ஏதோ ஒரு திட்டத்தோடு வாங்கிப் போட்ட நிலங்களை என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கும் பா.ஜ.க. பிரமுகர்கள்; அயோத்தியில் கோடிக்கணக்கில் நிலம் வாங்கிப் போட்ட பா.ஜ.கவினர். பைசாபாத் மக்களவைத் தேர்தலில் ஆளும் பா.ஜ.க. தோல்வி அடைந்து, இந்தியா கூட்டணி சார்பில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றார். 2019 ஆம் ஆண்டு ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியது முதல் அயோத்தியின் நிலத்தின் மதிப்பு பல கோடிகளைத் தொட்டது. 2019 நவம்பரில் ராமர் […]

மேலும்....

உடைக்கப்பட்ட கால்களும்; பறிக்கப்பட்ட பதக்கங்களும்- வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி

உலகம் முழுவதும் ஆதிக்கம் நிறைந்திருக்கிறது. ஆதிக்கத்தின் வடிவங்கள்தாம் நாட்டுக்கு நாடு, இடத்திற்கு இடம் மாறுபடுவன. இந்தியாவின் ஆதிக்க வடிவம் வெளிப்படைத் தன்மையற்றது; ஆனால், மிகுந்த வலிமை பொருந்தியது. அத்தகைய ரகசியக் கூட்டாளிகளான பார்ப்பனியமும் பனியாவும் ஒன்றோடு ஒன்று இணைந்த காவி பாசிசம் தான் இன்றைய இந்தியாவின் பேராபத்தான ஆதிக்க நிலை. பார்ப்பனரல்லாத மக்களை கல்வி,வேலைவாய்ப்புகள்,பொருளாதாரம், அரசியல் என்று அனைத்து வகையிலும் அடிமைப்படுத்த பார்ப்பனியம் முயற்சி செய்தபோது அதனை ‘சமூகநீதி’ என்ற குரல் கொண்டு தகர்த்தார், தந்தை பெரியார். […]

மேலும்....