தலையங்கம் – காவிமயமாக்கத் துடிக்கும் ஆளுநருக்கு எதிராய் கடும் போராட்டம் எழும்!

தமிழ்நாட்டின் ஆளுநராகப் பணிபுரியும் ஆர்.என். ரவி என்ற ஆர்.எஸ்.எஸ்.காரர் தான் பதவி ஏற்கும் போது எடுத்த அரசமைப்புச் சட்டத்தின் 159ஆவது பிரிவின் (கிக்ஷீtவீநீறீமீ) படியான பதவிப் பிரமாணத்திற்கு முற்றிலும் முரணாக, தமிழ்நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட மகத்தான மக்களாட்சியான தி.மு.க. ஆட்சிக்கு எதிராக ஒரு போட்டி அரசினை நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் நடத்தி, அதிகார துஷ்பிரயோகத்தை அப்பட்டமாகச் செய்து – தமிழ்நாட்டு மக்களின் நலத்திற்கும், நல்வாழ்வுக்கும் விரோதமாக நாளும் செயல்பட்டு வருகிறார்! சண்டித்தனம் செய்வதே – வாடிக்கையா? தமிழ்நாடு […]

மேலும்....

அறிஞர் அண்ணா பிறப்பு -15.09.1909

இந்தியாவிலேயே வேறு யாராலும் சாதிக்க முடியாத காரியத்தை அண்ணா அவர்கள் சாதித்துக்காட்டினார். நமக்குத் தெரிந்த வரையில் வேறு யாரும் அந்த அளவுக்குச் சாதிக்கவே இல்லை. ஒரு பகுத்தறிவு அரசாங்கத்தை – கடவுள் வேண்டாம், மதம் வேண்டாம், சாதி வேண்டாம், சாஸ்திரம் வேண்டாம் என்ற ஒரு கொள்கையுடைய பகுத்தறிவு அரசாங்கத்தை – அண்ணா அவர்கள் தோற்றுவித்தார் என்றால் அது சாமானிய காரியமல்ல பிரமாண்டமான சாதனையாகும். நம் மக்களுக்கு இது சரியாகப் புரிகிறதோ இல்லையோ, எதிரிகளுக்கு இது தெளிவாகப் புரியும்.

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா?

தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்ற பெயரை 1969ஆம் ஆண்டில்தான் பேரறிஞர் அண்ணா அவர்களால் சட்டரீதியாக சூட்டப்பட்டது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....