விழிப்புணர்வு – மனித உரிமைகள், குடிமக்கள் உரிமைகள் பற்றிய பிரகடனம்

பிரெஞ்சுப் புரட்சி 1789இல் நிகழ்ந்தது. பிரான்சின் பழைய ஆட்சியையும் சர்வாதிகாரத்தையும் முடிவுக்குக் கொண்டு வந்ததன் அடையாளமாக அந்த ஆண்டு ஜூலை 15ஆம் நாள் பாரிஸ் மக்கள் பாஸ்டைல் கோட்டை என்ற அரசாங்கச் சிறைச்சாலையை உடைத்து நொறுக்கிய நிகழ்ச்சி அமைந்தது. ஜூன் மாதம் கூடத் துவங்கிய பிரெஞ்சு தேசிய சபை ஆகஸ்ட் 26 ஆம் நாள் மனித உரிமைகள், குடிமக்கள் உரிமைகள் பற்றிய பிரகடனத்தை நிறைவேற்றியது. தங்கள் நாட்டுக்காக அமைக்கத் துவங்கியிருந்த புதிய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையாக இப்பிரகடனத்தை […]

மேலும்....

மதம் – மடமை – மாசு

… தாமோதர், ஹைதராபாத் … மடமையின் மறுபெயர் மதம். மடமை என்பது அறிவின் இயல்பான ஓட்டத்திற்குத் தடை இடுவது என்று பொருள். மனிதர்கள் பிறப்பால் தடையற்ற, மடையற்ற சிந்தனை ஓட்டம் உடையவர்கள். பிறந்த குழந்தை பேசத் தொடங்கியதும் இயல்பாய் தடையின்றிச் சிந்திக்கிறது. தனக்கு எற்படும் அய்யங்களை அறிய வேண்டியவற்றை வினாக்கள் எழுப்பி தெளிவு பெறவும், விளக்கம் பெறவும் முயற்சிக்கிறது. இதுதான் மனித இயல்பு. இந்த இயல்பிற்கு மடைபோடுகிறது மதம். கேள்வி கேட்காதே! சிந்திக்காதே! அப்படியே நம்பு, அப்படியே […]

மேலும்....

கார்த்திகை தீபம்

… நேயன் … கார்த்திகை தீபப் பண்டிகை ஒரு தெய்வீகம் பொருந்திய சிறந்த நாளாகக் கருதி இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. கார்த்திகை நட்சத்திரத் தினத்தை “சுப்ரமணியன்” என்னும் சாமிக்கு உகந்த நாளாகக் கருதி, பக்தர்கள் என்பவர்கள் பூசைகளும், விரதங்களும் மேற்கொள்கின்றார்கள். இதில் கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகையே மிகவும் சிறந்த பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இந்தச் சமயத்தில் சுப்பிரமணியனின் 6 வகையான ஊர்கள் என்று புராணம் கூறும் ஊர்களுக்கு மக்கள் பிரயாணம் செய்து, ரொக்கப் பணத்தைச் செலவு […]

மேலும்....

உண்மையின் ஒளிச்சிதறல் பெரியார்!

… முனைவர் வா.நேரு … திராவிட இயக்கம் தம் கொள்கைகளை மக்கள் மத்தியில் பரப்ப, உணரச் செய்யப் பயன்படுத்திய கலை நாடகம். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர், சி.பி.சிற்றரசு, தில்லை வில்லாளன், எஸ்.எஸ்.தென்னரசு, கே.ஜி.இராதாமணாளன் எனத் திராவிட இயக்க நாடகப் படைப்பாளர்களின் பட்டியல் மிக நீளும். எதிர்ப்புகள் எத்தனை வந்த போதிலும் உண்மையைப் போதிக்கும் நாடகங்களை தமிழ்நாடு முழுக்க நடத்தினர். “இனி வரப்போகும் நாடக உலகமானது இதுவரை இருந்தது போலவே இல்லாமல், உண்மை […]

மேலும்....

வரிக்கொள்கை (யூதர்கள் இரகசிய அறிக்கை)

நமது திட்டங்களிலேயே தலையாயதும், திட்டத்தின் தலைவிதியை நிர்மாணிக்கக்கூடியதாகவும் பொருளாதாரமே இருக்கிறது. இதில் நுழைவதற்கு முன்னால், ஏற்கனவே மறைமுகமாகக் கூறிய ஒன்றை, உங்களுக்கு மீண்டும் நினைவூட்டுகிறேன். அது என்ன? நம்முடைய ஒவ்வொரு காரியத்தையும் பணத்தைக் கொண்டே சாதிக்கிறோம் என்பதுதான் அது. பணத்தின் மூலம்தான் அனைத்துக் காரியங்களும் செய்து முடிக்கப்படுகின்றன. நாம் ஆட்சிக்கு வந்த பிறகு, நம்முடைய சர்வாதிகார அரசாங்கமானது மக்கள் மீது அதிக வரி சுமத்துவதை விட்டு விலகி நிற்கும். இது நம்முடைய நன்மைக்காக, நாம் வகுத்துக்கொண்ட கொள்கை. […]

மேலும்....