சிறுகதை : பேய் ஓடிப் போச்சு… – அறிஞர் அண்ணா

அண்ணே! பூசாரி பொன்னனை நான் என்னமோன்னு எண்ணிக்கிட்டுக் கிடந்தேன். இப்பத் தெரியுது. அவன் இலேசுபட்டவனில்லைங்கற விஷயம்.’’ “என்னத்தெடாப்பா, கண்டுட்டே இப்ப?’’ “என் மவளுக்கு, கொஞ்ச நாளா, மயக்கமா இருந்தது பார் அண்ணே! மாமரத்துப் பிசாசு, பிடிச்சுகிட்டு ஆட்டி வைச்சிதேண்ணே…’’ “ஆமா! உம்மவ, செல்லாயியைத்தானே…’’ “ஆமாண்ணே! பூசாரி போட்ட மந்திரத் திலே, பேய் ஓடிப் போச்சண்ணே! இப்ப என் மவ, சவுக்கியமா, சிரிச்சிப் பேசிகிட்டுச் சிங்காரிச்சி பூ முடிச்சிக்கிட்டு இருக்கிறா. என்ன மோண்ணே! மாயம் மந்தரம் இதெல்லாம் தப்புன்னு, […]

மேலும்....

‘வீரமாமுனிவர்’ என்று அழைக்கப்படும் கான்ஸ்டான்டைன் ஷோசப் பெஸ்கி

இத்தாலி நாட்டில் கேசுதிகிலியோன் எனும் இடத்தில் பிறந்தார். பெஸ்கி இத்தாலி நாட்டு கிறித்துவ மத போதகர் ஆவார். இவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார். 23 நூல்களைத் தமிழில் எழுதியுள்ளார். இயேசு கிறித்துவின் வாழ்க்கை தொடர்பான நிகழ்ச்சிகளை விளக்கி, தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப “தேம்பாவணி’’ என்னும் பெருங்காப்பியத்தை இயற்றியுள்ளார். இது இவரின் தமிழ் புலமைக்குச் சான்றாக உள்ளது. சுப்ரதீபக் கவிராயர் மூலம் தமிழில் புலமை பெற்றார். இவர் தமிழ்நாடு வந்த பின் தமிழ் இலக்கண […]

மேலும்....

இமயமலை ஏறி சாதித்த கவுசல்யா

மலையேறுதல் என்பது உடல் மற்றும் சிந்தனை வளர்ச்சியின் ஆரோக்கியம் மற்றும் தன்னம்பிக்கையை வலிமை யாக்கும் சிறந்த பயிற்சி ஆகும். மலை ஏறுதல் ‘டிரக்கிங்’. இதற்கென தனியாக வழித்தடங்கள் உள்ளன. மலை ஏறுவதை பலர் பொழுது போக்காகவும், செய்து வருகின்றனர். சிலர் பயிற்சியாகச் செய்கின்றனர். மலையேறுதலில் பல இடங்களுக்குச் சென்று வருவதைத் தனது வழக்கமாகக் கொண்டுள்ளார் தோழர் கவுசல்யாதேவி. கவுசல்யா ஊட்டி, பெங்களூரு, கருநாடகா பகுதியில் உள்ள முக்கொம்பு, இமாச்சலம் எனப் பல பகுதிகளுக்குச் சென்று அங்கு டிரக்கிங் […]

மேலும்....

ஓமந்தூர் பி. ராமசாமி

விவசாய முதலமைச்சர் என்று அழைக்கப்பட்டவர் – ஓமந்தூர் ராமசாமி. அரசியலில் நேர்மை, உண்மைக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் ஓமந்தூர் ராமசாமி.ஓமந்தூர் பி. ராமசாமி, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஓமந்தூர் என்னும் சிற்றூரில் 1.2.1895இல் பிறந்தார். ஓமந்தூர் ராமசாமி அவர்களின் பெற்றோர் முத்துராம ரெட்டியார், அரங்கநாயகி அம்மாள் ஆவர். 1910ஆம் ஆண்டு சிங்காரத்தம்மாள் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். 1912ஆம் ஆண்டு அரசியல் மற்றும் விடுதலைப் போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கினார். தென் ஆர்க்காடு மாவட்ட காங்கிரஸ் தலைவராகத் தேர்தெடுக்கப்பட்டார். மது […]

மேலும்....

சட்டம் – ஒழுங்கைப் பாதுகாப்பது காவல்துறையா? கருப்பண்ணசாமியா?

– கெ.நா. சாமி நம் சிந்தனையில் இப்படி ஒரு கேள்வியை எழுப்பியிருப்பது 18.1.2023 தேதியிட்ட ஆனந்த விகடனில் ‘இன்பாக்ஸ்’ பகுதியில் வந்துள்ள ஒரு செய்தியே. திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே தங்கம்மாபட்டியில் ‘வண்டிக் கருப்பண்ணசாமி’ கோயில் உள்ளதாகவும், வாகன ஓட்டிகள் விபத்தில்லாமல் வாகனங்கள் ஓட வேண்டும் என்பதற்காக நேர்த்திக் கடனாக ஆடுகள் பலியிடப்பட்டு வழிபாடு நடத்துவது வழக்கமாக உள்ளது என்றும் கூறுகிறது. அதேமுறையில் திண்டுக்கல் காவல்துறை வாகன ஓட்டிகள் ஒன்று சேர்ந்து 20 ஆடுகள் வெட்டி வழிபடுவதை […]

மேலும்....