பெர்ட்ரண்ட் ரசல் – பெரியார் சிந்தனைகள் ஒரு கண்ணோட்டம்…

திருமண வாழ்வுக்கு புரிதல் தேவை! காதல் எனும் பெயரால், அறியாமை யால், பாலியல் இனக்கவர்ச்சிக்கு இரையாதல், அதன் தொடர்ச்சியாக, திருமண வாழ்வில் மகிழ்ச்சியற்ற நிலையை எதிர்கொள்ளுதல் ஆகியவற்றுக்கெல்லாம் காரணம் பாலியல் உறவில் முன்அனுபவம் இன்மையே என்பது ரசலின் கருத்தாகும். இதுபற்றி ரசல் அவர்களின் கருத்துக்கள் வருமாறு:- – தஞ்சை பெ. மருதவாணன் அ) 1. மணமாகும் போது ஒரு பெண் கன்னியாக (Virgin) இருக்க வேண்டும் எனும் கட்டாயமிருப்பின் நிலையில்லாத (அற்பமான) பயனற்ற பாலியல் கவர்ச்சிக்கு அவளைப் […]

மேலும்....

தை 2 : திருவள்ளுவர் நாள் திருவள்ளுவர் தமிழர் சொத்து!- செல்வ.மீனாட்சிசுந்தரம்

சொந்தச் சரக்கில் லாதோர் சூதால் திளைத்து வாழ்வார்! சிந்தை கரவை ஏந்தச் சீரைக் கொள்ளார் நெஞ்சில்! மந்தை ஓட்டி வந்தார் மண்ணில் ஆட்சி கொள்ள எந்தை வள்ளுவ னாரைத் தங்கள் தந்தை யென்றார்! மொந்தை குடித்துப் போதை மூழ்கிக் களித்தி ருத்தல் மந்தை நிற்கும் விலங்கை வாட்டிக் கொன்று தின்னல் சிந்தை தன்னில் சாதிச் சீக்கைப் போற்றி நிற்றல் நிந்தை என்று சொன்னார் நெடுவான் குறளில் அய்யன்! ‘சோம பானம்’ உண்டோர் ‘சுரா’வைச் சுவைத்து மொண்டோர் ‘ஓமம்’ […]

மேலும்....

உள்ளத்தால் பேசவேண்டும்!-ஆசிரியர் பதில்கள்

1. கே : மாபெரும் மக்கள் தலைவர்களையெல்லாம் வரலாறு அறியாத அரைகுறைகள் வாய்க்கு வந்தபடி மோசமான வசைச் சொற்களால் பொதுவெளியில் பேசுவதை சட்டரீதியாகத் தடுக்க முடியாதா? இந்நிலை மிக மோசமாக தமிழகத்தில் நீடிப்பதைத் தடுக்க வழியென்ன? – கே.காந்தி, தருமபுரி. ப : சட்டப்படி என்ன நடவடிக்கையோ  அதற்கு உடனடியாக காவல் துறையும், அரசும் விரைந்து  செயல்படவேண்டும். வெறி நாய்களை ஒழிக்க என்ன  சிகிச்சையோ அதனையே மக்கள்  செய்யும் நிலையும் கூட ஏற்படலாம்.  தங்களது கட்சிகளின் பலவீனம்,  […]

மேலும்....

சனாதனம் தகர்க்கவே வள்ளலாரின் ஜோதி வழிபாடு!- மஞ்சை வசந்தன்

வள்ளல் பெருமான் வாழ்வு கொள்கை அடிப்படையில் பரிணாமம் பெற்ற வாழ்வு. அவர் பிறந்த மருதூர் சிதம்பரம் அருகில் உள்ளது. நான் பிறந்த மஞ்சக் கொல்லை மருதூருக்கு மிக அருகில் நடந்தே செல்லக் கூடிய தூரத்தில்தான் உள்ளது. எனவே, அவர் பிறந்த ஊர், வாழ்ந்த கருங்குழி, மேட்டுக்குப்பம், சத்திய ஞானசபை அமைத்த வடலூர் எல்லாம் அருகருகே உள்ள ஊர்கள்தாம். எனவே, கிராமச்சூழலில் எல்லோரையும் போல் பிறந்து வளர்ந்தவர்தான் வள்ளலார். அதனடிப்படையில்தான் அவர் கடவுள் நம்பிக்கைகளும் இருந்தன. ஆனால், வயதும் […]

மேலும்....

மியான்மரில் சுயமரியாதை இயக்க 80ஆம் ஆண்டு விழா !- கி.வீரமணி

பட்டுக்கோட்டை கல்வி வள்ளல், மறைந்த சிங்கப்பூர் கோமள விலாஸ் உரிமையாளர் ஓ.எம்.ராஜு அவர்களது சிலை திறப்பு விழா பட்டுக்கோட்டையில் 12.3.2006 அன்று மாலை நடைபெற்றது. விழாவிற்கு நாம் தலைமை தாங்கினோம். பட்டுக்கோட்டை ஒன்றியப் பெருந்தலைவர் ஓ.எம்.சாம்பசிவம் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். ஏ.ஆர்.மாரிமுத்து(மேனாள் எம்.எல்.ஏ.) முன்னிலை வகித்தார். விழாவில், ஓ.எம்.ராஜு அவர்களின் சிலையினை கல்விக் காவலர் சி.துளசி அய்யா வாண்டையார் அவர்கள் திறந்து வைத்து அவரின் நினைவு மலர் நூலினை வெளியிட்டார். அதன் முதல் பிரதியை நாம் பெற்றுக்கொண்டோம். […]

மேலும்....