க்ளாப் அடிப்போம் – பயாஸ்கோப் பார்த்து விட்டு ! – சோ.சுரேஷ்

வேட்கை உள்ளவன் வென்றே தீருவான் என்பது போல் தான் இந்த பயாஸ்கோப் திரைப்படத்தின் இயக்குநர் சங்ககிரி ராச்குமார். சமூகத்தை நேசிப்பவன் தான் அச்சமூகத்தைப் பாதுகாக்க முயற்சிப்பான் என்று சொல்லும் வகையில் அறியாமையால் ஜாதகம் எனும் நம்பிக்கையால் தற்கொலை செய்துகொள்ளும் தன்னுடைய சித்தப்பா மற்றும் நேசிக்கும் இருவர் ஜாதகத்தினால் பலியாகும் இரண்டையும் ஒற்றைப் புள்ளியில் இணைக்கும் ஜாதகம் எனும் மூடநம்பிக்கையை வெட்ட வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில் தனது முன்னொரு முற்போக்குப் படைப்பான வெங்காயம் எனும் திரைப்படத்தினை எடுத்து […]

மேலும்....

மனமின்றி அமையாது உலகு (13)-ஸ்ட்ரெஸ் – நார்மலா?

ஸ்ட்ரெஸ். இந்தக் காலத்தில் மக்களிடையே அதிகமாகப் புழங்கும் வார்த்தையாகியிருக்கிறது. சின்னக் குழந்தை முதல் பெரியவர்கள் வரை, யாரைக் கேட்டாலும் ஸ்ட்ரெஸ். ஸ்கூலுக்குப் போறதே ரொம்ப ஸ்ட்ரெஸ் சார், எங்க அப்பா, அம்மா கூட இருக்குறது அத விட பெரிய ஸ்ட்ரெஸ் சார் என்று அய்ந்தாம் வகுப்பில் படிக்கும் மாணவன் ஒருவன் அண்மையில் எம்மிடம் சொன்னான். இன்றைய காலத்தில் நமது அனைத்துப் பிரச்சினைகளுக்குமே கூட இந்த ஸ்ட்ரெஸ்தான் காரணமாய்ச் சொல்லப்படுகிறது. அத்தனை பிரச்சினைகளின் விளைவாகவும் ஸ்ட்ரெஸ் தான் இருக்கிறது […]

மேலும்....

அல்லாடும் ஆண்டவன்- அறிஞர் அண்ணா

“கடவுள் சாட்சியாக, நான் சொல்லுவ தெல்லாம் உண்மை என்று சொல்” “நான் ஏங்க, பொய் சொல்லப் போகிறேன்? பொய் சொன்னா, சாமி, கண்ணை அவிச்சிடாதுங்களா” “சரி! உன் பெயர்..” “சாமிக்கண்ணுங்க!” சாமிக்கண்ணு சாட்சி சொல்ல வந்திருக்கிறான், கோர்ட்டுக்கு! கூண்டேறிய அவனை, முதலில் ‘குமாஸ்தா’சத்யம் பண்ணச் சொல்லுகிறார். அவனும், ஆண்டவன் மீது ஆணையிட்டு விட்டே, வாக்குமூலம் தருகிறான்! அவன் தந்த வாக்குமூலம் இது: ”எனக்கு ஊர்க்காவல் வேலைங்க! ராத்திரி, மணி 12 இருக்கும். ராஜவீதி வழியே வந்து கொண்டிருக்கும்போது. […]

மேலும்....

தமிழ்நாடு கல்வித்துறையில் மாபெரும் சாதனை: ஒன்றிய அரசின் ஆய்வு அறிக்கையில் வெளியான தகவல்!– வை.கலையரசன்

அனைவருக்கும் எட்டாமல் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்திற்கு மட்டுமே கிடைத்து வந்த கல்வியை அனைத்துத் தரப்பிற்கும் கொண்டு போய்ச் சேர்த்த பெருமை திராவிட இயக்கத்திற்கு உண்டு. நீதிக் கட்சி காலம் தொடங்கி இந்தப் பணி நடைபெற்று வருகிறது. ராஜகோபாலாச்சாரியார் இரண்டு முறை ஆட்சிக்கு வந்த போதும் மாணவர்களின் கல்விக் கண்ணைப் பறிக்கும் வேலையைச் செய்தார். முதல் முறை தந்தை பெரியாரின் இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தால் ஏற்பட்ட எழுச்சியின் காரணமாக முதலமைச்சர் பதவியில் இருந்து விரட்டியடிக்கப்பட்டார். இரண்டாவது முறை […]

மேலும்....

தந்தை பெரியார் நினைவு நாளில் தமிழர் தலைவர் ஆசிரியர் எழுச்சியுரை!

(சென்ற இதழ் தொடர்ச்சி….) திராவிடம் என்பது மானிடப் பரப்பு! திராவிடம் என்பது ஒரு குறிப்பிட்ட எல்லையைச் சார்ந்தது அல்ல, சிலர் நினைப்பதைப்போல. திராவிடம் என்பது மானிடப் பரப்பு. யாருக்கெல்லாம் சுயமரியாதை தேவையோ, அத்தனை பேருக்கும் சுயமரியாதையைச் சொல்லிக் கொடுக்கின்ற தத்துவத்திற்குப் பெயர்தான் திராவிடம். அந்தத் திராவிடத்தைக் கட்டிக் காக்கின்ற எங்கள் ஆற்றல்மிகு முதலமைச்சர், ஒப்பற்ற முதலமைச்சர் அவர்களே! அமைச்சர் பெருமக்களே! தோழர்களே! வணக்கம் காணொலியில் கண்ட காட்சிகள்! இங்கே நீங்களெல்லாம் பார்த்திருப்பீர்கள், ஏழு நிமிடக் காணொலி நிகழ்வை. […]

மேலும்....