மிகப்பெரிய வாய்ப்பு– முனைவர் வா.நேரு

உண்மை வாசகர்கள் அனைவருக்கும் 2025 புத்தாண்டு வாழ்த்துகள். காலம் மாற மாற அறிவியல் கண்டுபிடிப்புகள் புதிது புதிதாக வந்து கொண்டே இருக்கின்றன. கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முறையும் மாறிக்கொண்டே இருக்கிறது. இணையம், சமூக ஊடகங்கள் வந்த பின்பு ஒரு கருத்தைப் பரப்புவது என்பது எளிதாக மாறி இருக்கிறது. வாழும் இடம் எங்கெங்கோ இருந்தாலும் கருத்துகளால் இணையத்தின் வழியாக இணைய முடிகிறது. உரையாட முடிகிறது. எவ் வளவு எளிதாகக் கருத்துகள் பரவுகிறதோ அதே அளவிற்கு வதந்திகளும் பரவுகிறது. […]

மேலும்....

கரையான் புற்றில் கருநாகம் !

பொதுவாக ஆரியம் தமக்கு எதிரான பண்பாட்டுக் கூறுகளைச் சாம, பேத, தான, தண்டம் என எல்லா வழிகளையும் பயன்படுத்தி அழித்தொழிக்கும். அப்படி அழித்தொழிக்க முடியாத கூறுகளை ஊடுருவி அழிக்கும். அப்படிதான் தற்போது செம்மொழித் தமிழாய்வு மய்யத்தையும் ஊடுருவி அதன் நோக்கத்தை அழிக்கத் தொடங்கியுள்ளது. தமிழ் மொழி ஆய்விற்கான நிதியைக் குறைப்பது, திருவள்ளுவருக்குக் காவிச் சாயம் பூசுவது, காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையை மறுப்பது, தமிழர்களின் வரலாற்றையும் பண்பாட்டையும் கூறும் கீழடி அகழ்வாய்வை நிறுத்தியது, தொல்லியல் ஆய்வாளரான அமர்நாத் ராமகிருஷ்ணனைக் […]

மேலும்....

மனமின்றி அமையாது உலகு (12) அச்சம், பயம், பதற்றம்

மருத்துவர் சிவபாலன் இளங்கோவன், மனநல மருத்துவர் மனிதனின் பரிணாம வளர்ச்சியில் இன்றைய நிலையை அடைவதற்கு முன் அவன் பல்வேறு படிநிலைகளைக் கடந்து வந்திருக்கிறான். ஆதிமனிதனாக காடுகளில் அலைந்து திரிந்தபோது, கொடிய உடல் வலிமை மிகுந்த விலங்குகளில் இருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்வது அவனுக்கு எளிமையானதாக இருக்கவில்லை. பிழைத்திருப்பது என்பது அப்போது அவனுக்கு அத்தனை பெரிய சவாலான ஒன்றாக இருந்திருக்கிறது. பல்வேறு ஆபத்துகளில் இருந்து தப்பித்து, முப்பது ஆண்டுகள் வாழ்வது என்பதே அப்போது மிகப்பெரிய சாதனை. மனிதனுக்கு மட்டுமல்ல, எல்லா […]

மேலும்....

விழிப்பூட்டும் விடுதலை – 2 திரைப்படம் !- வழக்குரைஞர் துரை.அருண்

“இந்தப் போராட்டம் எங்களால் தொடங்கப்படவுமில்லை, எங்களோடு முடியப்போவதுமில்லை. மனிதனை மனிதன் சுரண்டும் சமூக அமைப்பு மாறும் வரை இப்போராட்டம் தொடரும் பாலுக்கு அழாத குழந்தையும் கல்விக்கு ஏங்காத மாணவனும், வேலைக்கு அலையாத இளைஞனும் உள்ள நாடே என் கனவு இந்தியா” என்றார் பகத்சிங். பகத்சிங் கண்ட கனவு தமிழ்நாட்டில் ஓரளவிற்கு நனவாகியுள்ளது என்றே சொல்லலாம். ‘விடுதலை’ திரைப்படம் முழுக்க முழுக்க கற்பனைக் கதை என்று அதன் இயக்குநர் வெற்றிமாறன் அறிவித்ததாலும், சிலர் மார்க்சியத்தை விடுதலை திரைப்படத்தில் தேட […]

மேலும்....

வரலாறு படைத்த வைக்கம் போராட்டம்!- முனைவர் கடவூர் மணிமாறன்

சாதியில்லாச் சமுதாயம் உலகில் பூத்தால் சமத்துவமும் நல்லறமும் செழிக்கும் எங்கும்! வேதியர்யாம் எனவிளம்பிப் புரட்டும் பொய்யும் வெந்துயரும் பிறர்க்களித்து மகிழக் கற்றார்! தீதியற்றிப் பிழைப்பதுவே நோக்காய்க் கொண்டார்! தெரிந்தேதாம் பெண்ணுரிமை மறுக்க லானார்! பாதியிலே நுழைந்திட்ட பார்ப்ப னர்கள் படுகுழியில் தமிழரையே வீழ்த்தி வென்றார்! வரலாற்றுப் புகழ்பெற்ற பெரியார் அந்நாள் வைக்கத்தில் நடைபெற்ற இழிவைக் கண்டே உரத்தோடு போராட்டக் களத்தில் நின்றார்! ஒறுத்திடவே சிறைப்பட்டார்! மீண்டும் அங்கே தரம்தாழ்ந்து சிலர்யாகம் வளர்த்தார்! மக்கள் தன்மானச் சிறகுகளை முறித்தார்! […]

மேலும்....