அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (322)

இலண்டனில் பிரபுக்கள் சபையில் பொங்கல் விழா! – கி. வீரமணி லண்டனில் நடக்க இருந்த தந்தை பெரியார் பிறந்த நாள் விழா, ஜி.யு. போப் நினைவுச் சொற்பொழிவு, பொங்கல் விழாக்களில் பங்கேற்க சனவரி 14ஆம் தேதியன்று லண்டன் புறப்பட்டுச் சென்றோம். லண்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றோம். மிக முக்கியமாக சனவரி 18 (2004) அன்று பெரியார் பன்னாட்டு மய்யம் (Periyar International – U.K. Chapter) அமைக்கப்பட்டது குறிப்பிடத் தகுந்ததாகும். இலண்டன் ஆக்ஸ்போர்டு தமிழ்ச் சங்கத்தின் பிரபுக்கள் […]

மேலும்....

கட்டுரை – பக்தி வெறிக்கு பச்சைக் குழந்தையை பலியாக்குவதா?

– சரவண இராஜேந்திரன் பெற்றோர்களின் மூடநம்பிக்கையினால் தீயில் வெந்த பச்சிளங் குழந்தையின் நிலை என்ன? திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே நடந்த ஒரு கோவில் திருவிழாவில், ஒரு முதியவர் தீமிதித்து வேண்டுதலை நிறைவேற்றிக் கொண்டிருந்தபோது, அவர் வைத்திருந்த தனது ஒரு வயது பேத்தி குண்டத்தில் தவறி விழுந்து படுகாயமடைந்தது. திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த அரும்பாக்கம் பகுதியில் வசிப்பவர் ராஜா. இவர் தனது மனைவிக்குச் சொந்தமான தாராட்சி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் தீ மிதித் […]

மேலும்....

நூல் மதிப்புரை – ஆர்.எஸ்.எஸ். இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல்

– பொ. நாகராஜன் நூல் : ‘ஆர்.எஸ்.எஸ் இந்தியாவிற்கு  ஓர் அச்சுறுத்தல்’  ஆசிரியர் : ஏ.ஜி. நூரானி   தமிழில் : ஆர். விஜயசங்கர், – பாரதி புத்தகாலயம்,  முதல் பதிப்பு – 2022   பக்கங்கள் : 820 – விலை: ரூ 800/- கடந்த ஒரு நூற்றாண்டாக இந்தியாவின் மீது சூழ்ந்திருக்கும் இருள் இந்துத்துவம்! இந்துத்துவத்தின் மூலமாக இந்து ராஷ்ட்ரம் அமைக்க வேண்டுமென்ற குறிக்கோளோடு துவக்கப்பட்டது தான் ஆர்.எஸ்.எஸ்! “இந்து ராஜ்யம் என்பது உண்மையாக அமைந்தால் அது […]

மேலும்....

கட்டுரை – பிராமணன் யார்? தம்மபதத்தில் தோலுரிப்பு

– தஞ்சை பெ. மருதவாணன் புத்தர் தனது வாதிடும் முறையைப் பின்பற்றித் தனது படைப்பாகிய தம்மபதம் எனும் அற நூலில் பிராமணன் யார்? என்ற ஒரு வினாவை எழுப்பி அதற்கு விடை, அளிக்கும் வகையில் தனது பிராமண கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார். தம்மபதத்தின் 26 ஆவது அத்தியாயமாகிய பிராமண வர்க்கம் (ப்ராஹ¢மண வக்கோ என்பது பாலிமொழி) என்பதில் இடம்பெற்றுள்ள 41 செய்யுள்களில் முதன்மையான சிலவற்றில் உள்ள புத்தரின் கருத்துகளை இங்குக் காண்போம். 1) மன ஒருமையிலிருந்து, குற்றங்களை நீக்கி […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

முதல்வர் கவனத்திற்கு… 1. கே: ஆளுநரைக் கேள்வி கேட்டது, ஒன்றிய அரசின் ஊழியரின் நடத்தை விதிகளுக்கு எதிரானது. எனவே அவரைப் பணிநீக்கம் செய்ய வேண்டும் என்ற காவிகளின் கோரிக்கை சரியா? – வெங்கடேசன், திருமுல்லைவாயல். ப: முட்டாள்தனம் நிறைந்தது; சட்டத்தின்முன் நிற்காது. ஆளுநரே பெற்றோர்களை வரவழைத்துள்ளபோது,  கருத்துக் கூற ஒரு பெற்றோருக்கு முழு உரிமை உண்டே! பின் எப்படிக் குற்றமாகும்? 2. கே: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகில் ஆத்துப் பாக்கத்தில் நாகரிகமாக வாழ்வதால் மலைக்குறவர் மக்களுக்குப் பழங்குடி  […]

மேலும்....