ஆசிரியர் பதில்கள்

போராடி ஒழிக்க வேண்டும்! 1. கே : ஆங்கிலேயர்களை எதிர்த்து “வெள்ளையனே வெளியேறு’’ என்று காந்தியடிகள் போராட்டம் நடத்தியதைப் போல “பார்ப்பனர்களே இநதியாவை விட்டு வெளியேறுங்கள்’’ என்று இந்திய மக்கள் போராட ஆரம்பித்துவிட்டால், இந்த பார்ப்பனர்களின் கதி என்னவாகும்? – வ.க. கருப்பையா, பஞ்சம்பட்டி. ப : வருங்காலத்தில் இப்படி ஒரு நிலைமை வரக்கூடாது என்று எச்சரித்தே தந்தை பெரியாரும் திராவிடர் இயக்கமும் ஆரியத்திற்கு அறிவுரை கூறி அனை வருக்கும் அனைத்தும் என்றும் உணர்த்தினர். ஆனால், அதையெல்லாம் எதிர்பார்த்தோ, […]

மேலும்....

தென்னாட்டின் தியாகத் தீ  சிதம்பரனார்!

…  முனைவர் கடவூர் மணிமாறன் …  விடுதலைப்போ ராட்டத்தில் நாட்டம் கொண்டே வெகுண்டெழுந்த சிதம்பரனார் வாழ்நாள் எல்லாம் நடுங்காத மறவன்போல் களத்தில் நின்றார்! நாட்டாண்மை செய்திட்ட ஆங்கி லேயர் ஒடுங்கிடவும் ஓடிடவும் துணிந்து, கப்பல் ஓரிரண்டை அந்நாளில் வாங்கிக் கொண்டார்! மிடுக்குறவே சொற்பொழிவால் மக்கள் நெஞ்சில் மேன்மைமிகு நாட்டுணர்வை விதைக்க லானார்! வந்தேறிக் கூட்டத்தார் சிறையில் தள்ளி வன்மமுடன் செக்கிழுக்கச் செய்தார்! உள்ளம் நொந்திடவே கல்லுடைக்கச் செய்த போதும் நுவலரிய விடுதலையை மூச்சாய்க் கொண்டே வெந்தணலை நெஞ்சுள்ளே […]

மேலும்....

மும்பை இரத்தினம் அம்மையாரின் நீங்கா நினைவுகள்..!

நேர்காணல்  … வி.சி.வில்வம் … இந்தியாவில் தமிழ்நாட்டிற்கு அடுத்து பெரியாரியல் கொள்கைகளைத் தொடர்ச்சியாகச் செயல்படுத்தக் கூடிய மாநிலம் மராத்தியம்! தமிழ்நாட்டில் 1944ஆம் ஆண்டு திராவிடர் கழகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நான்கே ஆண்டுகளில் மராத்திய மாநிலம் மும்பையில் 1948இல் திராவிடர் கழகம் உருவாக்கப்பட்டுவிட்டது! அவ்வளவு சிறப்பு வாய்ந்தது மராத்திய மாநிலமும் மராத்திய வாழ் தோழர்களும்! மராத்திய மாநிலத்தின் வேர்களாக, விழுதுகளாகக் கருதப்படுவோர் மானமிகுவாளர்கள் பொ.தொல்காப்பியன், எம்.மோசஸ், ஜோசப் ஜார்ஜ், பெ.மந்திர மூர்த்தி, திராவிடன், த.மு.ஆரிய சங்காரன், […]

மேலும்....

மாற்றம்!

… ஆறு. கலைச்செல்வன் … கடலூரிலிருந்து திண்டிவனம் வழியாக சென்னை செல்லும் பேருந்து புறப்படத் தயாரானது. மூன்று பேர் உட்காரக்கூடிய இருக்கையில் சன்னல் ஓரமாக உட்கார்ந்தார் சிவக்குமார். அவர் அருகில் சுப்ரமணியன், சேகர் ஆகியோர் உட்கார்ந்தனர். பேருந்து கிளம்பியது. கிளம்பிய அடுத்த நொடியே “கல்யாணம்தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா” என்ற பாடலை பெருத்த ஒலியுடன் இயக்கினார் ஓட்டுநர். சிவக்குமாருக்கு ஒரே எரிச்சலாக வந்தது. காதுகளைப் பொத்திக்கொண்டார். ஆனாலும் இரைச்சலை அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. “பாட்டை நிறுத்து!” என்று பலமாகக் […]

மேலும்....

மனுதர்ம (விஸ்வகர்மா) யோஜனாவிற்கு எதிராய் மக்களுக்கு விழிப்பூட்டிய பரப்புரைப் பயணம்

… மஞ்சை வசந்தன் … குலத்தொழிலை மீண்டும் கொண்டுவர மறைமுகத் திட்டம் ஒன்றை ஒன்றிய பா.ஜ.க. அரசு, “விஸ்வகர்மா யோஜனா” என்னும் பெயரில் கொண்டுவந்துள்ளது. இத்திட்டம் அறிவிக்கப்பட்டவுடனே தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், இதன் பாதிப்பைத் துல்லியமாக உணர்ந்து, அதை எதிர்த்து விழிப்பூட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, அதுபற்றிய கண்டனத்தைத்தெரிவித்து, அதன் தொடர்ச்சியாக அனைத்துக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டமும் நடத்தினார்கள். விஸ்வகர்மா திட்டத்தின் ஆபத்தை மக்களுக்குத் தெளிவூட்ட கீழ்க்கண்டவாறு இரண்டு கட்ட பரப்புரைப் பயணத்தையும் ஆசிரியர் […]

மேலும்....