அயோத்திதாச பண்டிதர் – மஞ்சை வசந்தன்

1845 ஆம் ஆண்டு சென்னை தேனாம்பேட்டையில், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் கந்தசாமி என்பவருக்கு மகனாகப் பிறந்த அயோத்திதாசர், தேர்ந்த சிறந்த ஆய்வுநுட்பங் கொண்ட மருத்துவர். தென்னகத்தில் புத்தம் மறுமலர்ச்சியடைய காரணமாய் அமைந்தவர். மனித விரோத ஜாதி, மதம், தீண்டாமை இவற்றிற்கு எதிராய் மிகத் தீவிரமாய்ப் போராடியவர். அவர் நடத்திய போர் அறிவு சார்ந்தது. தனது புலமையினால், ஆய்வு நுட்பத்தினால் உண்மைகளைக் கொண்டு வந்து, எதிரிகளின் சூழ்ச்சியை வீழ்த்தியவர். ஆதிதிராவிடர்கள் தொடக்கத்தில் பவுத்தர்களே என்பதை வரலாற்றுத் தடயங்களோடு உறுதி செய்தவர். […]

மேலும்....

காரல்மார்க்ஸ் பிறப்பு – 5.5.1818

உலக வரலாற்றில் மங்காப்புகழுடன் தலைசிறந்து விளங்குபவர் கார்ல் மார்க்ஸ். 5.5.1818 அன்று ஹெய்ன்ரிச் மார்க்ஸ், ஹென்றியேட்டா பிரஸ்பார்க் ஆகியோர்க்கு மகனாக ஜெர்மனியில் டிரைலர் என்னும் இடத்தில் பிறந்தார். காரல் மார்க்சின் பெற்றோர்கள் ஜெர்மனியில் வழக்குரைஞர்களாகப் பணியாற்றி வந்தனர். காரல் மார்க்ஸுக்கு படிப்பில் ஆர்வம் இருந்தபோதிலும் தத்துவமும் வரலாறும் பிடித்திருந்தது. தனது ஆருயிர் நண்பர் ஃபிரடெரிக் ஏங்கல்சுடன் இணைந்து கம்யூனிசக் கொள்கையைப் பிரகடனம் செய்தார். உலகப் பட்டாளி மக்களுக்கு வழிகாட்டும் (மூலதனம்) தத்துவத்தைத் தந்தவர். தலைசிறந்த புரட்சியாளராக, தொழிலாளி […]

மேலும்....

கடவுள் சிலையைச் சோதித்த கஜினி முகம்மது – ஜோசப் இடமருகு

“சோமநாத் – இந்தியாவிலுள்ள புகழ் பெற்ற இந்த நகரம் கடற்கரையில் அமைந்துள்ளது. அலைகள் அதை தழுவிச் செல்கின்றன. அந்த இடத்திலுள்ள அற்புதங்களில் முக்கியமானது கோயிலில் பிரதிஷ்டை செய்திருந்த சோமநாத் சிலையாகும். கீழிருந்தோ மேலிருந்தோ எவ்விதப் பிடிப்புமில்லாமல் இது கோயிலின் நடுவே அந்தரத்தில் நின்றிருந்தது. இந்த அதிசயத்தின் காரணமாக இந்துக்கள் இதை மிகவும் மதிப்புடன் வணங்கி வந்தனர். காற்றில் மிதந்து நிற்கின்ற இந்தச் சிலையைக் கண்டால் முஸ்லிமோ நாத்திகனோ கூட வியப்படைந்துவிடுவான்-. சந்திரகிரகணத்தின்போது இந்துக்கள் அங்கே தீர்த்த யாத்திரை […]

மேலும்....

மரணத்திற்குப் பின் வாழ்க்கை… – மருத்துவர் இரா. கவுதமன்

மரணம் என்பது ஓர் இயற்கை நிகழ்வு. உயிருள்ள அனைத்தும் ஒரு நாள் மரணமடைந்தே தீரும். உயிருள்ள ஒவ்வொரு உயிரிகளும் மரணமடையாமல் இருக்க முடியாது. ஆத்திகர்கள் நாம் செய்யும் “புண்ணியங்கள்’’ நம்மை வாழ வைக்கும் என்று கூறுவதை பலமுறை நாம் கேட்டிருக்கிறோம் மரணத்திற்குப் பின் நாம் செய்யும் நல்ல செயல்கள் நம்மைப் பற்றிய நினைவுகளை மனங்களில் தங்க வைக்கும் என்பதைத் தவிர, பகுத்தறிவுக்கு ஒவ்வாத எண்ணங்கள்தான் இவை. நம் இதயம் தொடர்ச்சியாகச் செயல்படுகிறது. மூளையும் அவ்வாறே செயல்படுகிறது. இரத்த […]

மேலும்....

“திராவிடர்’’ என்பது ஆரிய பார்ப்பனர்க்குரிய சொல்லா? – மஞ்சை வசந்தன்

தமிழ்த் தேசியம் பேசும் ஆரிய பார்ப்பன கைக்கூலி பேர்வழிகள் சிலர், திராவிடர் என்பதை பார்ப்பனர்க்குரிய சொல்லாகக் கூறுகின்றனர். அதற்குச் சான்றாக ‘திராவிட்’ என்ற பெயர் பார்ப்பனர்க்கு இருப்பதாகக் காட்டுகின்றனர். புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் திராவிட்டை அவர்கள் குறிப்பிட்டு தங்கள் கருத்துச் சரியென்கின்றனர். ஆனால், இவ்வாறு கூறுவது அறியாமையின் அடையாளம். ஆரிய பார்ப்பனர்கள் அயல்நாட்டிலிருந்து வந்து, இந்தியாவிற்குள் நுழைந்து மெல்ல மெல்ல பரவினர். அப்படி வந்தவர்கள் பெண்-களுடன் வரவில்லை. இங்-குள்ள மண்ணின் மக்களின் பெண்களோடு சேர்ந்தே தங்கள் வாரிசுகளைப் […]

மேலும்....