விமர்சனத்திற்கல்ல, விடிவுக்கானது மணமுறிவு !- திருப்பத்தூர் ம. கவிதா

சென்ற இதழ் தொடர்ச்சி… சுயமரியாதைத் திருமண முறையை ஏற்படுத்தி இன்ப துன்பங்களில் சமபங்கு ஏற்கும் சம உரிமை படைத்த உற்ற நண்பர்களாக வாழ்வோம் என்ற உறுதி மொழியைத் தந்த தந்தை பெரியார் தான், திருமணங்களையும் அதன் விளைவுகளையும் பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து இத்தகைய விளக்கங்களைக் கொடுக்கிறார். பெண்கள் நிலையில் மாற்றம்! ஓர் ஆணின் வாழ்க்கையைப் பற்றி எந்தச் சூழ்நிலையிலும் விமர்சனம் செய்யாத இந்தச் சமூகம் ஒரு பெண்ணை, அவள் பிறந்ததி லிருந்து இறப்பு வரை துரத்தி அடித்தது… […]

மேலும்....

விஞ்ஞான உலகில் மூடநம்பிக்கைகளை விலக்க வேண்டும்!- தந்தை பெரியார்

தாய்மார்களே! தோழர்களே! நான் ஒரு பகுத்தறிவுவாதி. எப்படிப்பட்ட விஷயமானாலும் அறிவைக் கொண்டு சிந்திக்க வேண்டும்; அதன் முடிவுப்படி நடந்துகொள்ள வேண்டுமென்கிற பிடிவாதமான பகுத்தறிவுவாதியாவேன். நான் எதையும் தயவு தாட்சண்யமின்றி எடுத்துக் கூறுபவன். அதனால் எனது கருத்துகள் சிலருக்கு ஏற்புடையதாகவும் பலருக்கு மாறுபாடாகவும் இருக்கலாம் என்றாலும், எனக்குத் தோன்றியதை – சரியென்று பட்டதை எடுத்துக் கூறுகிறேன். தோழர்களே! நமது நாட்டிலே பண்டிகைகள் என்பது எந்த நாள் முதல் தெரிய வருகிறதோ அன்று முதல் பெரியவர்கள், அறிஞர்கள், படித்தவர்கள் எல்லோருமே […]

மேலும்....

பொங்கல் நாள் வாழ்த்துரைப்போம்!- முனைவர் கடவூர் மணிமாறன்

தமிழினத்தார் உலகெங்கும் வாழ்கின்றார்! வாழ்வில் தன்மானம் இனமானம் உயிரெனவே காப்பர்! தமிழர்தம் புத்தாண்டின் தொடக்கம்தை முதல்நாள்! தமிழர்க்கு முகவரியும் தமிழ்மொழியே ஆகும்! தமிழரது திருநாளோ பொங்கல்நாள் ஆகும்! தகவார்ந்த உழவர்தம் அறுவடைநற் றிருநாள் தமிழினத்தின் செம்மாந்த மாண்பெல்லாம் காப்போம்! தக்காங்கு தொலைத்திட்ட பண்பாட்டை மீட்போம்! கழனிகளில் விளைந்திட்ட நெல்மணிகள் எல்லாம் களிப்பூட்டச் சோர்வெல்லாம் காணாமல் போகும்! உழக்காலே கடலளக்க முயல்வாரோ நாளும் உறுசெல்வம் ஈட்டுதற்கே உரியவழி நாடும் பழக்கத்தை அதிகாரச் செருக்காலே கொண்டார் பகுத்தறிவுப் பேரொளியைக் கையிரண்டால் […]

மேலும்....

திராவிடர் திருநாளாம் பொங்கலை, புத்தாண்டைக் கொண்டாடுவோம்!- மஞ்சை வசந்தன்

தமிழரின் பண்பாட்டுச் சிறப்புகளை அழிப்பதிலும் திரிப்பதிலும் தங்கள் பண்பாட்டைத் திணிப்பதிலும் ஆரியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில் தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாள் என்பதை மாற்றி, சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்று திரித்து, சமஸ்கிருதப் பெயரைத் தமிழ் ஆண்டின் பெயர் என்று திணித்து, தமிழர் வழக்கை அழித்தனர். நன்றியின்பாற்பட்ட பொங்கல் விழாக்களைப் புராணக் கதைகள் மூலம் மகரசங்கராந்தி, போகி என்று மாற்றியும், திரித்தும் மூட விழாக்களாக ஆக்கினர். இந்தத் திரிபுகளையும், மோசடிகளையும், பண்பாட்டுப் […]

மேலும்....

துணைவேந்தர் நியமனம் குறித்து யு.ஜி.சி. விதிமுறைகளை மாற்றியது சட்டவிரோதம் ! முதல் அமைச்சரின் நிலைப்பாடு சரியானது !

ஒன்றிய அரசாட்சியைப் பிடித்து, கடந்த 10 ஆண்டுகளாக அதிகாரத்தை, தமது ஆர்.எஸ்.எஸ். – சங் பரிவார்க் கொள்கை அடிப்படையில், மனுதர்ம ஆட்சியின் மறுபதிப்பு போலவே, கொஞ்சம் கொஞ்சமாக, ‘ஆக்டோபஸ்’ (எட்டுக்கால் பிராணி) போன்று தனது வன்மையைக்காட்டி, அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள முக்கிய கல்வி உரிமைகளையும் பறித்து வருவதோடு, அரசமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சித் தத்துவத்தைக் குழிதோண்டிப் புதைத்து வருகிறது! இது கொடுமையிலும் கொடுமை! நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் அதன் கொடுங்கரங்கள், அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மாநிலங்களின் அதிகாரங்களை […]

மேலும்....