பெரியார் பேசுகிறார் : கலைஞர் செல்லப்பிள்ளை!

தந்தை பெரியார் நண்பர் திரு.கருணாநிதி அவர்களின் படத்தினை திறந்து வைப்பதில் எனக்கு பெருமகிழ்ச்சியே! நான் சமீபத்தில் ஒரு பள்ளிக் கட்டடத் திறப்பு விழாவிற்காக ஒகளூர் சென்றிருந்தேன். அந்த விழாவிற்கு அமைச்சர் கோவிந்தசாமி அவர்களும் வந்திருந்தார்கள். அந்தப் பள்ளியின் நிருவாகிகள் நான் பேசிக் கொண்டிருக்கும்போது இடையில் வந்து இரகசியமாக என் காதில் அண்ணாதுரை அவர்களின் படத்தினைத் திறந்து வைக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள். நான், இதில் என்ன இரகசியம் வேண்டி இருக்கிறது, அண்ணாதுரையின் படத்தினைத் திறந்துவைப்பது எனக்குப் பெருமைதான் […]

மேலும்....

திராவிட இயக்கத்தின் முன்னோடி என்.வி. நடராசன்

இந்தி எதிர்ப்பு உணர்வு இவரைத் திராவிட இயக்கத்தின்பால் ஈர்த்தது. இவரது இணையர் புவனேசுவரி அம்மையார் 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கைக்குழந்தையுடன் (என்.வி.என். சோமுதான், அந்தக் கைக்குழந்தை பிற்காலத்தில் மத்திய இணை அமைச்சராக இருந்தவர்) சிறைக்கோட்டம் சென்றவர். திராவிடன் என்னும் இதழை நடத்தி வந்தார். தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர், தலைமை நிலையச் செயலாளர் என்னும் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நாளும் உழைத்தவர். இந்தி எதிர்ப்பு உள்ளிட்ட பல போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றவர். கலைஞர் ஆட்சியில் பிற்படுத்தப்பட்டோர் […]

மேலும்....

தலையங்கம் : மூடத்தனத்தின் முடைநாற்றம்!

நாட்டில் எல்லாத் திக்குகளிலும் மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரப் பணியை நாம் இனி தீவிரமாக முடுக்கிவிட வேண்டும் எனத் தீரிமானித்துள்ளோம். புதுக்கோட்டை மாவட்டத்தில் தீவிர மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரப் பெரும்பணியை நாமே முன்னின்று துவக்கி வைத்து, அனைத்து ஒன்றியங்களிலும் இந்த மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரப் பெருவிழா, அறிவியல் அறிவுப் பிரச்சாரத் திருவிழாவாக, பெருவிழாவாக நடத்திடத் திட்டமிட்டுள்ளோம். பிறகு பல மாவட்டங்களில் இந்தப் பணி, அரசியல் கலவாத அறிவியல் பரப்புரைப் பயணமாக நடத்தப்படக் கூடும்! பகுத்தறிவுச் சிந்தனையாளர்கள், எக்கட்சி, எம்மதம், […]

மேலும்....

முத்தமிழ் அறிஞர் கலைஞர்

பிறந்த நாள்: 3.6.1924 கலைஞர் செல்வக் குடும்பத்தில் பிறந்தவர் அல்லர். கலைஞர் மொழியில் சொல்ல வேண்டுமானால் மிக மிக என்று எத்தனை மிக வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளக் கூடிய மிகப் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த ஒருவர்! சிகரத்தை எட்டினார் என்றால் அதற்குக் காரணம், மூடக்கருத்துகளை அதன் வேர்வரை சென்று அழிக்கும் கொள்கைக்குச் சொந்தக்காரரான அவரின் வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் ஆழமான அடிப்படை – உழைப்பு! உழைப்பு!! உழைப்பே!!! – கி.வீரமணி

மேலும்....