சிந்தனைக் களம் : தந்தை பெரியாரும் இங்கர்சாலும்…

முனைவர் வா.நேரு தந்தை பெரியார் கரடு முரடாயிருந்த சமூகக் காட்டைச் சீரமைப்பதற்காக தன்னையே நம்பி புறப்பட்டவர். ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் மண்டிக் கிடந்த மூட நம்பிக்கைகளை ஒழிப்பதற்காகப் புறப்பட்ட அவர், தன் கருத்தினை ஒத்திருக்கும் வேற்று நாட்டு அறிஞர்களின் கருத்துகளையும் மக்கள் மத்தியில் பரப்பினார். அத்தகைய அறிஞர்களுள் ஒருவர் கர்னல் ராபர்ட் கிரீன் இங்கர்சால் ஆவார். பகுத்தறிவுக் கருத்துகளை 19-ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் விதைத்தவர் இங்கர்சால் ஆவார். அவர் 1833-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் நாள் பிறந்தார். […]

மேலும்....

கவிதை : திராவிடரும் ஆரியரும்!

முனைவர் கடவூர் மணிமாறன் திண்ணிய மனமும், மரபும் தெளிந்தநல் லறிவும் மிக்கார்! தொன்மொழி தமிழைக் காக்கும் தொண்டறம் தோய்வார்; தமிழர் நன்னெறி மரபை, மாண்பைப் பொன்னெனப் போற்றிக் காப்பர் மன்பதை உய்ய உயர நாளுமே உழைப்போர் திராவிடர்! ஆரியர் நஞ்சை நெஞ்சில் அமிழ்தென ஏற்கும் தீயர் வீரியம் இழந்த போதும் வெந்துயர் இழைப்பர்: நம்மோர் வேரினைப் பறிக்க எண்ணும் வெஞ்சினம், கயமை மிக்கார்; சீரினை அழிக்க எண்ணும் சிறுமதி படைத்தோர் ஆவர்! முடக்கிடுவர் நம் பகுத்தறிவை முழுநெஞ்சும் […]

மேலும்....

செஞ்சி ப.க. மாநாடு

செஞ்சி ப.க. மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியரின் தலைமையுரை செஞ்சியில் 19.6.2022 அன்று நடைபெற்ற பகுத்தறிவாளர் கழக பொன்விழா நிறைவு மாநாட்டில் ஆசிரியர் அவர்கள் ஆற்றிய நிறைவுரையிலிருந்து… தந்தை பெரியார் அவர்கள் உரையைத் தொடங்கும்பொழுதும், கடைசியாக உரையை முடிக்கும்பொழுதும், “நான் சொல்கிறேன் என்பதற்காக நம்பாதீர்கள்!’’ என்று சொல்வார். இப்படிச் சொல்கிற தலைவர் உலகத்தில் வேறு எங்காவது உண்டா? நான் சொல்வதை நம்பாதீர்கள்; என் அறிவுக்குச் சரி என்று பட்டதைச் சொன்னேன்; உங்கள் அறிவுக்குச் சரி என்று பட்டால் […]

மேலும்....

மூடநம்பிக்கை : நாடி ஜோதிடம் உண்மையா?

ஒளிமதி ஜோதிடத்தையும் நம்பி, கடவுள், விதி, பிறவி இவற்றையும் நம்புவது முரண்பட்ட நிலையாகும். இப்படிச் சொன்னால், சிலர் சாமர்த்தியமாக, கடவுள் பூர்வஜென்ம பலனுக்கு ஏற்ப நம் விதியை அமைத்து அதற்கேற்ற கிரகச் சூழ்நிலையில் நம்மைப் பிறக்கச் செய்கிறான்; அந்த விதியை நம் கையில் ரேகையாகப் பதித்து வைத்திருக்கிறான் என்று கூறி, கடவுள் நம்பிக்கையோடு ஜோதிட நம்பிக்கையையும் இணைத்து முடிச்சுப் போட்டுப் பேசுவர். மதுரை ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அவ்வாறு கூறியும் உள்ளார். […]

மேலும்....

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (105)

மகப்பேறு (PRAGNANCY) மரு.இரா.கவுதமன் பிராக்ஸ்டன் ஹிக்ஸ் (மருத்துவம் விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (105) கருப்பைச் சுருங்கல்: முதல் மூன்று மாதப் பருவத்திலும், மூன்றாம் மூன்று மாதப் பருவத்திலும் கருப்பையின் தசைநார்கள் லேசாகச் சுருங்கும். ஆனால், பெரும்பான்மை-யான பெண்களுக்கு இந்த நிலை இரண்டாம் மூன்று மாதப் பருவத்தில் உண்டாகும். சில பெண்கள் இந்த மாற்றத்தை உணராமலும் இருப்பர். இந்தச் சுருங்கல் அடிவயிற்றில் லேசான வலியை உண்டாக்கும். தசைப்பிடிப்பு ஏற்பட்டதுபோல் (Cranps) உணர்வு பெண்-களுக்குத் தெரியும். […]

மேலும்....