ஆய்வுக் கட்டுரை: புத்தம் பெரியாரியம் இந்துத்துவம்

தஞ்சை பெ. மருதவாணன் இந்துத்துவ மூலவர்கள் 1. இந்து மகாசபை மூலவரான மூஞ்சே என்பவர் வன்முறையில் நம்பிக்கையுள்ள ஓர் இந்துமத வெறியர். இந்து மகாசபையை எப்படி நடத்தவேண்டும் என்று இத்தாலிய சர்வாதிகாரி முசோலினியைக் கண்டு ராணுவ ஆலோசனை பெற்றவர். பார்ப்பனர்கள் மாமிசம் சாப்பிட வேண்டும். அப்போதுதான் இந்துமத எதிரிகளைப் போராடி வீழ்த்த முடியும் என்று கூறியவர். இவர் தமிழ்நாட்டுக்கு வந்தபோது 1944இல் தந்தை பெரியாரைத் திருச்சியில் சந்தித்து (29.9.1944) உரையாடியதும் உண்டு. 2. “ஃபிரன்ட் லைன்’’ (Front […]

மேலும்....

புதன் கருப்பாக இருக்கக் காரணம் ஏன்?

சூரியக் குடும்பத்தின் முதல் கிரகம் புதனாகும். இது நிலவைப் போல பாறைகளால் ஆனது. சூரிய வெளிச்சத்தை நிலவு பிரதிபலிப்பதைப் போல் புதன் பிரதிபலிப்பதில்லை. இதற்கான காரணத்தை விஞ்ஞானிகள் ஆராய்ந்து கொண்டிருந்தபோது, அமெரிக்கா அனுப்பிய மெசஞ்சர் விண்கலம் இதற்கான காரணத்தை நமக்குத் தெரிவித்துள்ளது. பென்சிலில் இருக்கும் கிராஃபைட் போன்ற கார்பன் பொருளால் புதன் போர்த்தப்பட்டுள்ளது. எனவேதான் அது கருப்பு நிறத்தில் காட்சி தருகிறது. ஒரு காலத்தில் புதனின் மேற்பரப்பில் கடல் போல் இருந்த எரிமலைக் குழப்பில் கிராஃபைட் மிதந்து […]

மேலும்....

கவிதை: திராவிட ஒளிச்சுடர்

தீந்தமிழ்போல் வாழ்க! முனைவர் கடவூர் மணிமாறன் அய்யா பெரியார் செதுக்கிய சிற்பம் மெய்யாய்த் தமிழர் மேன்மைக் குழைப்பவர்! அருங்குணச் சான்றோர்; ஆற்றல் சுரங்கம்; பெருமைக் குரிய தமிழர் தலைவர் பெயருக் கேற்ப வீரம் மிக்கவர்! அயர்வே இல்லா அஞ்சா நெஞ்சினர்; ஓடும் குருதியில் உணர்வில் செயலில் பீடுறு திராவிடம் பிறங்கும் ஒளிச்சுடர்! பெரியார் பள்ளியில் பிழையறப் பயின்றவர் அரிய திறமெலாம் அவரிடம் கற்றவர்; சட்டம் பயின்றவர்; சால்பு மிக்கவர்; பெட்புற மனத்தில் பெரியார் கொள்கை இருத்திய அரிமா; […]

மேலும்....

வரலாற்றுச் சுவடுகள்

தமிழ்நாடும் பார்ப்பனரும் ஸ்ரீமான் கி.அனந்தாச்சாரியார் (சேலம் வழக்கறிஞர்) தமிழ் நாட்டிலுள்ள பார்ப்பன வகுப்பினர் ஆரிய நாட்டிலிருந்து ஈண்டுக் குடியேறினவ-ரென்றும், அவர்களுடைய பழய நாகரிகமும் மதமும் கல்வியும் பயிற்சியும் தமிழ்நாட்டில் கலந்துபோய் இப்பொழுது ஒன்றினின்றும் மற்றொன்றைப் பிரித்துச் சொல்லவியலா மலிருந்தபோதிலும், ஆரியர்களுடைய தரும சாஸ்திரங்களென்று சொல்லப்படுகிற ஸ்மிருதி நூல்களும் அவர்களுடைய சமூகக்கட்டுப்பாடுகளும் இந்நாட்டிலுள்ள பார்ப்பனரல்லாத மக்களுக்குச் சிறிதும் பொருந்தாவென்றும் கருதப்பட்டு வருகின்றன. இக்கொள்கை ஆராய்ச்சி அளவில் சரியானதென்று ஏற்கப்பட்டு வருவதாகும். ஆரியர்களுடைய பண்டை நூல்களிலும் பிற்றைப் புராணங்களிலும் ஆரியா […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

தனியார் மயத்தால் ஒடுக்கப்பட்டோருக்கு வேலை வாய்ப்பிழப்பு கே : காசி தமிழ்ச்சங்கம் நிகழ்வில், இச்சங்கமத்தின் மூலம் தி.மு.க.வை வீழ்த்துவோம் என்று பி.ஜே.பி.யினர் பேசியுள்ளது, அவர்களின் நோக்கம் அதுதான் என்பதை வெளிப்படுத்துகிறதல்லவா? ப : முழுக்க முழுக்க ஆர்.எஸ்.எஸ். -_பா.ஜ.க.வின் ஏற்பாடு மற்றொருவகை காவிக்கொள்கை பரப்பு விழா. தமிழ்ப் போர்வை போர்த்தப்பட்டு அரசு செலவில் நடத்தப்படும் ‘காசி யாத்திரை’ கூத்து எதற்கு என்பது அதன்மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது பார்த்தீர்களா? பூனைக்குட்டி சாக்குப் பையிலிருந்து வெளியே வந்துவிட்டது என்பது இப்போது […]

மேலும்....