பெண்ணால் முடியும்!

ஃபோர்ப்ஸ் தரவரிசைப் பட்டியலில் சிகரம் ஏறும் பெண் தெலங்கானா மாநிலத்தின் பகலா என்னும் ஊரைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளர்-களான தேவிதாஸ், லட்சுமி ஆகியோரின் மகள் பூர்ணாமலாவத். 2013-ஆம் ஆண்டு மலையேற்றப் பயிற்சி தொடங்கியது. போங்கிர் பாறையில் ஏறுவதற்காகப் பயிற்சி மேற்கொண்டபோது பாறையின் உயரத்தைப் பார்த்ததும் அவரது கால் நடுங்க ஆரம்பித்தது. ஆனால், மலை உச்சியை அடைந்ததும் அடைந்த மகிழ்ச்சியில் மலையேற்றம் குறித்த பயம் முற்றிலும் மறைந்து போனதாகச் சொல்லிடும் பூர்ணா கூறுகையில், 2014-ஆம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தில் […]

மேலும்....

சிறுகதை : “பொங்கலுக்கு வாங்க’’

ஆறு.கலைச்செல்வன் நாற்காலியில் அமர்ந்தபடியே ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தார் சந்திரன். எழுபத்தைந்து வயது நிரம்பிய அவர் இன்னமும் சுறுசுறுப்பாகவே இயங்கி வந்தார். நாள்காட்டியை ஏறிட்டு நோக்கினார் சந்திரன். புரட்டாசி மாதம் நிறைவடையும் நிலையில் இருந்தது. நாள்காட்டியை எடுத்து நாள்களைப் புரட்டினார். தீபாவளி வரும் தேதியைப் பார்த்தார். அய்ப்பசி மாதம் 12ஆம் தேதி தீபாவளி எனக் குறிக்கப்பட்டிருந்தது. இன்னும் பதினைந்து நாள்களில் தீபாவளி. சந்திரனின் நினைவுகள் அறுபத்திரண்டு ஆண்டுகளுக்குப் பின்னோக்கிச் சென்றது. தீபாவளிப் பண்டிகைக்கு பத்து நாள்களுக்கு முன்னதாகவே அம்மா […]

மேலும்....

தன்முயற்சி சாமானியனின் சாதனை!

இளம்பகவத்தின் சொந்த கிராமம், சோழன்குடிகாடு. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகில் இருக்கும் சிறிய கிராமம். படித்தது எல்லாம் அரசுப் பள்ளி, தமிழ்வழிக் கல்வி. சென்ற வாரம் வெளியான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளில் இளம்பகவத்தின் அகில இந்திய ரேங்க் 117. ‘இதில் என்ன சிறப்பு இருக்கிறது?’ எனத் தோன்றலாம். இளம்பகவத் ஏன் அய்.ஏ.எஸ் தேர்வு எழுதினார் என்ற காரணம்தான் இதற்கான விடை. இளம்பகவத் ஒரு சாதாரண விவசாயக் குடும்பப் பிள்ளை. இவருடைய அப்பா கந்தசாமி, சோழன்குடிகாடு கிராமத்தின் […]

மேலும்....

முகப்புக் கட்டுரை : அரித்துவாரில் கா(லி)விகளின் காட்டு விலங்குக் கூச்சல்!

கவிஞர் கலி.பூங்குன்றன் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கடந்த டிசம்பர் 17 முதல் 19வரை (2021) “தர்ம சன்சத்’’ என்ற பெயரில் இந்து சாமியார்கள் மாநாடு. முற்றும் துறந்தவர்களைச் சாமியார்கள் என்று நாமகரணம் சூட்டி அழைப்பார்கள். இவர்களோ ஹிந்து சாமியார்கள். மாநாட்டில் இவர்கள் பேசிய பேச்சினைக் கேட்கும் சக்தியிருந்தால் புழுபுழுத்த நாய்கள்கூட ஆற்றில், குளத்தில் விழுந்து தற்கொலை செய்துகொண்டுவிடும். ஹிந்து மதத்தின் யோக்கியதாம்சம் எத்தனை டிகிரி இறக்கக் கோணத்தில் இருக்கிறது என்பதை எளிதில் தெரிந்துகொண்டு விடலாம். யதிர்சிங் ஆனந்த் […]

மேலும்....

முகப்புக் கட்டுரை : நூற்றாண்டு காணும் திராவிடர் இயக்க நாயகர்கள்

மஞ்சை வசந்தன்   இருபெரும் திராவிடர் இயக்க ஆளுமைகள் பேராசிரியர் க.அன்பழகன் அவர்களும், நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர்களும். பெரியார், அண்ணா இருவரிடமும் பயின்றவர்கள். திராவிடர் கழகத்திலும், அதன்பின் தி.மு.கழகத்திலும் முதன்மையானவர்-களாகத் திகழ்ந்தவர்கள். நாவலர் இறுதிக் காலத்தில் கட்சி மாறினாலும், கொள்கை மாறாதவராகவே இருந்தார். ஆனால், பேராசிரியரோ ஒரே கட்சி ஒரேகொள்கை என்பதில் உறுதியுடன் இருந்தார். நாவலர் நகைச்சுவை உணர்வுடன் ஏற்ற இறக்கங்கள் அழுத்தம், இழுத்தல் செய்து பேசவல்லவர். பகுத்தறிவுக் கருத்துகளை அதிகம் பேசிவந்தவர். பேராசிரியர், ஆழமான, கொள்கை […]

மேலும்....