ஆய்வுக் கட்டுரை : திருக்குறளிலும் பெரியாரியலிலும் உள்ள ஒத்த கருத்துகள் (2)

மஞ்சை வசந்தன் உலகத் திருக்குறள் மய்யம் இணைய மாநாட்டில் வாசிக்கப்பட்டது ஒழுக்கம்: ஒழுக்கம் மனிதனை மனிதனாகக் காட்டுவது. மனிதனை அடையாளப்-படுத்துவது. ஒருவனுடைய உயர்வும், கீழ்மையும் அவனுடைய ஒழுக்கத்தைப் பொறுத்ததே. இதை வள்ளுவர், “ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை யிழுக்கத்தி னெய்துவ ரெய்தாப் பழி” என்றார். (குறள் – 137) வள்ளுவரின் இக்கருத்துக்கு வலுச் சேர்க்கும் வகையில் தந்தை பெரியார், மனிதனுடைய ஒழுக்கம், நாணயம், நேர்மை முதலானவை அவற்றை உடைய மனிதனுக்குப் பெருமை அளிப்பது மாத்திரமல்லாமல் அவனைச் சுற்றியுள்ள எல்லா […]

மேலும்....

கவிதை : தமிழாண்டின் தொடக்கம் ‘தை’ யே!

முனைவர் கடவூர் மணிமாறன் நித்திரையில் கிடக்கின்ற தமிழா! நீயும்                நெடுமரமா? எனப்புரட்சிக் கவிஞர் கேட்டார்; சித்திரையா தமிழர்புத் தாண்டு? ஏனோ                சிந்தனையின் மலடாகிச் சீர்கெட் டாயே! எத்திக்கும் வாழ்கின்ற தமிழர் எல்லாம்                ஏற்றுவிட்ட தைமுதலே தமிழ்ப்புத் தாண்டாம்! பித்தரெனப் பிதற்றுவதில் பெருமை இல்லை;                பீடுமிகு பகுத்தறிவை இழத்தல் நன்றோ?     குறுந்தொகையும் நற்றிணையும் பிறவும் நம்மோர்                கோலமிகு தைத்திங்கள் சிறப்பைப் பாடும்; சிறுமையினை விதைத்திட்ட ஆரியர்கள்                செந்தமிழர் […]

மேலும்....

வரலாற்றுச் சுவடு : தமிழ்த்தாய் வாழ்த்து கலைஞர் தந்த விளக்கம்!

சிறந்த தமிழ்ப் படம், சிறந்த தமிழ்ப்பட இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த எழுத்தாளர், பாடலாசிரியர் என்று பல முனைகளில் திரைப்படத்துறையில் ஒவ்வொர் ஆண்டும் தேர்ந்தெடுக்கப்படுகிறவர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் பரிசுகள் வழங்குகிற நிகழ்ச்சியை அண்ணா அவர்கள் உருவாக்கியதை-யொட்டி 1970-ஆம் ஆண்டு மார்ச் திங்கள் நடைபெற்ற அந்தப் பரிசளிப்பு விழாவின்போது, இனித் தமிழ்நாடு அரசு நிகழ்ச்சிகளில் தொடக்கத்தில் இறை வணக்கம் என்பது தமிழ்த்தாய் வாழ்த்தாக இருக்கு-0மென்றும், “நீராருங் கடலுடுத்த’’ எனும் மனோன்மணீயம் சுந்தரனார் இயற்றிய அந்தப் பாடலே அந்த […]

மேலும்....

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (92)

சிறுநீரகச் செயலிழப்பு (Kidney Failure) மரு.இரா.கவுதமன் நோயின் அறிகுறிகள்: *              தசை வாதம் (Muscle Paralysis) *              அதிக நீர்மம் வெளியேற்ற முடியாத நிலையில் ஏற்படும் குறைபாடுகள். *             கைகள், கால்கள், முகம், கணுக்கால்கள், பாதம் ஆகியவற்றில் நீர் கோத்து விடும். அதனால் அந்த இடங்களில் வீக்கம் ஏற்படும். *              நுரையீரல்களிலும் நீர் கோத்து விடுவதால் மூச்சுத் திணறல் உண்டாகும். *              சிறுநீரக நீர்க்கட்டிகள் (Polycystic kidneys) சேரும். அதிக நீர், கல்லீரலுக்கும் பரவும். *            அதனால் […]

மேலும்....

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (91)

பெண்ணுரிமையும் பாரதியும்! நேயன் பாரதி முரண்பாடுகளின் மொத்தம் என்பதை முன்னமே சொல்லியுள்ளோம். அதிலும் பெண்ணுரிமை குறித்து பாரதி இரண்டு உச்சத்திற்கு சென்றுள்ளார். ஒன்று முற்போக்கின் உச்சம். மற்றது பிற்போக்கின் உச்சம். முரண்பாடு என்பது பரிணாமம் பெற்றிருப்பின் அது ஏற்கப்படக்கூடியது. ஆனால், பாரதி தொடக்க காலத்தில் அதி தீவிரமாகப் பெண்ணுரிமை பேசிவிட்டு, பின் தலைகீழாக மாறி எழுதுகிறார். அதுதான் சந்தர்ப்பவாதம்; அறிவு வயப்படாமல், உணர்ச்சி வசப்பட்டு கருத்துகளைக் கூறும் பக்குவமின்மை. பெரியார், பாரதிதாசன் இவர்களின் தொடக்க காலத்திற்கும், அதன்பின் […]

மேலும்....