கவிதை : உன் கொடி பறக்கிறது

– கவிக்கோ அப்துல் ரகுமான்   வைகறைப் பொழுதில் மேலே அடக்கிய இரவின் கருப்பும் கீழே கோபத்தோடு எழுகின்ற சூரிய ஒளியின் சிவப்புமாய் வானத்தில் உன் கொடி ஏறுகிறது.   ஒடுக்கி வைத்திருந்த இருளை புரட்சி நெருப்பு எரிக்கிறது.   இருட்டுக்கு அபாய அறிவிப்பு.   இருட்டை எதிர்க்கும் எங்கள் போரில் சிவப்பு ரத்தம் சிந்துகிறது.   கிழக்குக் கிளையில் எங்கள் வசந்தத்தை அறிவிக்கும் இரு வண்ணப் பூ மலருகிறது.   இரு வண்ணக் கொடி எங்கள் […]

மேலும்....

சிந்தனைக் களம் : அண்ணா நினைவு நாள் (பிப்ரவரி 3)அண்ணா நினைவு நாள் (பிப்ரவரி 3)

மனம் அண்ணாவைத் தேடுகிறது… சூரியா கிருஷ்ணமூர்த்தி   டிசம்பர் 3, 2016 அன்று மேனாள் அமைச்சர் கோ.சி.மணி அவர்களின் மறைவையொட்டி, முத்தமிழறிஞர் கலைஞர் நீண்டதொரு இரங்கல் கடிதத்தை எழுதினார். தன் உடன்பிறப்புகளில் ஒருவருக்கு, அவர் எழுதிய கடைசி இரங்கல் கடிதம் அதுதான். “ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில், அந்தக் காலத்தில் வடபாதிமங்கலம் தியாகராஜ முதலியார், பூண்டி வாண்டையார், குன்னியூர் சாம்பசிவம் அய்யர், உக்கடை அப்பாவுத் தேவர், நெடும்பலம் சாமியப்பா போன்ற பெயர்கள் மட்டுமே உடனடியாக நினைவுக்கு  வந்த காலம் […]

மேலும்....

முகப்புக் கட்டுரை : தந்தை பெரியார் தந்த தமிழர் தலைமகன் அண்ணா

மஞ்சை வசந்தன் “அண்ணா’’ எனும் இந்த மூன்றெழுத்து வெறும் சொல்லல்ல; பெயரல்ல. அது இந்தத் தமிழினத்தின் மூச்சு; தந்தை பெரியாருக்கே அது உயிர். தந்தை பெரியாரை அண்ணா சந்தித்த காலந்தொட்டு, ஈரோட்டு இல்லத்தில் தங்கி அண்ணா பணி செய்த காலம், திராவிடர் கழகம் என்று பெயர் அறிவிப்பு செய்து, திராவிடர் கழகச் செயல் வீரராய் சுழன்று சுழன்று தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்த காலம், கருத்து வேறுபாடு கொண்டு, தி.மு.கழகம் உருவாக்கி தனித் துச் செயல்பட்ட காலம் […]

மேலும்....

தலையங்கம் : உ.பி. தேர்தல்: ஏற்படும் நல்ல திருப்பங்கள்!

அடுத்த மாதம் (பிப்ரவரி 2022) அய்ந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடக்கவிருக்கின்றன. உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் நடைபெறும் அத்தேர்தல்கள் பா.ஜ.க.வுக்கு வெற்றிவாய்ப்பு குறைவாகவே இருக்கும் சோதனைமிக்க தேர்தல்களாக இருப்பதால், உ.பி.யில் _ அங்கேதான் 403 இடங்கள் _ அதிகமான இடங்கள் உள்ள சட்டமன்றம் என்பதால் அதனை ஏழு கட்டங்களாக நடத்திட அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். அது மட்டுமல்ல; இந்த அய்ந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகள் அந்தந்த மாநிலத்தை மட்டும் பொறுத்ததாக […]

மேலும்....

‘திராவிட மொழிஞாயிறு’ ஞா.தேவநேயப் பாவாணர்

பிறந்த நாள் : 07-02-1902 திராவிட மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் ஓர் ஊழி அறிஞர்; தனித்தமிழ் ஊற்று; செந்தமிழ் ஞாயிறு; இலக்கணச் செம்மல்; இலக்கியப் பெட்டகம்; வாராது வந்த மாமணி; தமிழ் மானங் காத்தவர்; தமிழ், தமிழர் நலம் காப்பதையே உயிர்மூச்சாகக் கொண்டவர். தமிழரின் தொன்மையை உலகுக்கு அறிவித்தவர்.

மேலும்....