துரை.சக்ரவர்த்தி

தமிழர் தலைவர் ஆசிரியரால் பொதுச் செயலாளர் பொறுப்பில் அமர்த்தப்பட்டவர் மானமிகு துரை.சக்ரவர்த்தி. இவர் தஞ்சை மாவட்டம் வையச்சேரியில் 14.1.1948 அன்று பிறந்தவர். இவரது தந்தை துரைராஜ், தாயார் ரோஜாமிர்தம். கல்லூரியில் படிக்கும் காலம் முதல் கழக அமைப்பு மற்றும் பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டவர். திராவிடர் கழகத்தில் ஒன்றியச் செயலாளர், பிரச்சாரச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர், பொதுச் செயலாளர் என இயக்கத்தின் தலைமைப் பொறுப்பு வரை வகித்தவர். 2003ஆம் ஆண்டு தந்தை பெரியார் நினைவு நாளான டிசம்பர் […]

மேலும்....

கட்டுரை : மானுட வளர்ச்சிக்கு மதம் மாபெரும் தடை!

முனைவர். வா.நேரு  தந்தை பெரியாரை நினைக்கும் போதெல்லாம் பெருமிதமும் மகிழ்ச்சி யும் ஏற்படுகிறது. தந்தை பெரியார் அவர்கள் மறைந்து 48 ஆண்டுகள் முடிந்து போனது. வரும் டிசம்பர் 24,2022 அவரின் 49ஆம் ஆண்டு நினைவு நாள்.முன் எப்போதும் விட மிக வேகமாகவும் விரைவாகவும் பரவும் தத்துவமாக தந்தை பெரியாரின் தத்துவம்-,கடவுள்,மத மறுப்புத் தத்துவம்- விளங்குவதைப் பார்க்கிறோம்.அண்மையில் பஞ்சாப் மாநிலம் பர்னாலா நகரத்தில் நடைபெற்ற இந்திய நாத்திகக் கூட்டமைப்பு மாநாட்டில், மாநாட்டு விளம்பரங்களில் தந்தை பெரியாரின் படம், அண்ணல் […]

மேலும்....

நூல் மதிப்புரை: ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம்!

தமிழகத்தின் வரலாற்றை நன்கு அறிந்தவர்கள் _ ராஜாஜி 1953 இல் சென்னை மாகாணத்தை ஆட்சி செய்த போது வர்ணாசிரமக் கொள்கை அடிப்படையில், குலக்கல்வித் திட்டத்தை அறிவித்ததும், அதனால் மிகக் கடுமையாக பெரியார் பல போராட்டங்களை நடத்தியதையும், அதன் விளைவாக 1954இல் ராஜாஜி பதவி விலகியதால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டதையும் மறந்திருக்க மாட்டார்கள்! இதற்காகப் பழிவாங்கும் நோக்கோடு, பெரியாரையும் அவரது திராவிடக் கொள்கைகளையும் சிதைக்கும் குறிக்கோளில் ராஜாஜி தனது சீடர் ம.பொ.சியை தமிழ்த் தேசிய அமைப்பைத் தோற்றுவிக்கச் செய்து, […]

மேலும்....

கவிதை : இனமானப் பேராசிரியர் என்றும் வாழ்வார்!

-முனைவர் கடவூர் மணிமாறன் அறிவார்ந்த சிந்தனையர்! அய்யா அண்ணா அடிச்சுவட்டில் பிறழாமல் வாணாள் எல்லாம் அறியாமை இருள்கிழிக்க முழங்கி வந்த அன்பழகப் பேராசான்; எந்த நாளும் நெறிதவறா இலக்கணமாய்த் தமிழர் நெஞ்சில் நிலையாக இடம்பிடித்த நேர்மைக் குன்றம்! குறிக்கோளின் தடம்பற்றிக் கொள்கை காக்கும் குறளனைய இலக்கியமாய்த் திகழ்ந்து வந்தார்! மடைதிறந்த வெள்ளமெனப் பொழியும் கொண்டல்! மாற்றாரும் மதிக்கின்ற பொதிகைத் தென்றல்! தடைகளுக்கு முடங்காமல் உழைத்து வந்த தன்மான இனமான அறிவுத் தேனீ! படைமறவர் போலிருந்து கழகம் காத்த […]

மேலும்....

பெண்ணால் முடியும்

உலக அளவில் ஓவிய சாதனை புரிந்த பெண்! கோயம்புத்தூர், உள்ளிப்பாளையத்தைச் சேர்ந்தவர் மோனிஷா. எம்.பி.ஏ., பட்டதாரியான இவர் தற்போது அய்..டி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தாலும் இவரின் அடையாளம் ஓவியர் என்பதுதான். இவர் வரைந்த ஓவியம் கின்னஸ் சாதனையில் இடம் பெற்றுள்ளது. இவரின் ஓவியத் திறமையைப் பாராட்டி சென்னை கல்வி அமைப்பு இவருக்கு ‘டாக்டர்’ பட்டமும் அளித்துப் பாராட்டியுள்ளது. அவர் தன் சாதனைகளைப் பற்றி கூறுகையில்… ‘கல்வியைக் கற்பிக்க வேண்டும். […]

மேலும்....