ஆய்வுக் கட்டுரை: புத்தம் பெரியாரியம் இந்துத்துவம்

தஞ்சை பெ. மருதவாணன் 4. இந்தியக் குடியரசு நாள் 26.1.1950இல் தொடங்குவதற்கு முதல் நாள் (25.1.1950) அன்று ஆர்.எஸ்.எஸ் ஏடாகிய ஆர்கனைசரில் (Organizer) சங்கர் சுப்பையா அய்யர் ஓய்வு பெற்ற பார்ப்பன நீதிபதி எழுதிய கட்டுரையில் மனுஸ்மிருதியை இந்த நாட்டின் சட்டமாக்க வேண்டும் என்று எழுதினார். (‘விடுதலை’ 29.11.2015) 5. திருச்சியில் 1984-இல் அசோக்சிங்கால் தலைமையில் நடந்த விசுவ ஹிந்து பரிஷத்தின் வழக்குரைஞர் மாநாட்டில் இந்திய அரசமைப்புச் சட்டத்தை எடுத்துவிட்டு அந்த இடத்தில் மனு தர்மத்தை அரசியல் […]

மேலும்....

கட்டுரை: உணவுமுறை குறித்து பெரியாரின் பார்வை!

வி.சி.வில்வம் கடவுள் இல்லை என்று மட்டுமே சொன்னவர் பெரியார்”, எனச் சிலர் நினைக்கின்றனர். அது அவர்களின் தவறில்லை; பார்ப்பன ஊடகங்களின் சதி! கடவுள், மதம், ஜாதி, புராணம், இதிகாசம், மூடநம்பிக்கைகள் என அனைத்தையும் அறிவியல் பூர்வமாகப் ஆய்வு செய்து கருத்து கூறியவர். தவிர பொருளாதாரம், தொழில் வளர்ச்சி, சமதர்மம், கல்வி, பெண்ணுரிமை, வாழ்க்கை ஒப்பந்தம், தொழிலாளர் நலன், தமிழ் வளர்ச்சி, கிராம முன்னேற்றம், மனிதர்களின் பொது நலம், சுயநலம், மனித வாழ்க்கை, கலை, இசை, நாடகம், தமிழக […]

மேலும்....

முகப்புக் கட்டுரை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சமூக நீதிக்கான கி.வீரமணி விருது!

மஞ்சை வசந்தன் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 90ஆவது வயது தொடக்க விழா 02.12.2022 அன்று காலை முதலே உலகத் தமிழர்கள் வாழும் இடமெல்லாம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. குறிப்பாக அன்று காலை பெரியார் திடலில் தமிழ்நாடு மற்றும் உலகின் பல பகுதிகளிலிருந்தும் வந்திருந்த பெரியார் தொண்டர்கள், பற்றாளர்கள், ஆசிரியரைச் சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்து விடுதலை சந்தா வழங்கினார்கள். அன்று மாலை 5:30 மணியளவில் சென்னை கலைவாணர் அரங்கில், தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்து […]

மேலும்....

பெரியார் பேசுகிறார்! பகுத்தறிவும், புரட்சியும்

தந்தை பெரியார் இன்றைய சமுதாய மக்கள் இரண்டு தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதாவது ஒன்று, பகுத்தறிவு (Rational), மற்றொன்று புரட்சி (Revolutional) என்ற இரண்டையும் அடிப்படையாகக் கொண்டு வாழ்கிறார்கள். ஆனால், நான் முதன்முதலில் 1925-இல் சுயமரியாதை இயக்கத்தை ஏற்படுத்தியபொழுது அதிக எதிர்ப்புகள் இருந்து வந்தன. கூட்டங்கள் நடக்கும் இடங்களில் எல்லாம் கற்களை வீசியும் கலகம் செய்தும் தொல்லைகள் பல கொடுத்து வந்தனர். அப்படி இருந்தும் இன்றைய தினம் அப்பொழுது எவைகளை எடுத்துக் கூறினேனோ, அதை எடுத்துரைக்கும் […]

மேலும்....

தலையங்கம் : இமாச்சலப் பிரதேசத்திலிலும், இடைத்தேர்தல்களிலும் பெற்ற தோல்வியை பி.ஜே.பி. மறைப்பானேன்?

அண்மையில் குஜராத், இமாச்சலப்பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று, 8.12.2022 அன்று முடிவுகள் வெளியாகியுள்ளன. குஜராத்தில் நடைபெற்ற தேர்தலில், தொடர்ந்து ஏழாவது முறையாக பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. 156 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை 7 ஆவது முறையாக அமைக்கும் வாய்ப்பை அங்கு பா.ஜ.க. பெற்றிருக்கிறது. இமாச்சல் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி, பா.ஜ.க.வை ஆட்சி பீடத்திலிருந்து அப்புறப்படுத்தி, நல்லதொரு வெற்றியைப் பெற்று சாதனை படைத் துள்ளது. மொத்தம் 68 இடங்களில் 40 […]

மேலும்....