https://unmai.in/images/magazine/2022/may/16-31/u11.jpg

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (101)

மகப்பேறு (PRAGNANCY) மரு.இரா.கவுதமன் விந்தணுக்கள் (Sperms): விந்தணுக்கள்தான் ஆண் இனப்பெருக்க அணுக்கள். ஆணிகளின் இரண்டு விரைகளிலும் இவை உற்பத்தியாகின்றன. உற்பத்தி ஆகும் விந்தணுக்கள், விந்தணு முதிர்ச்சிப் பையில் (Epididymes) வந்தடைந்த பின்பே முழு வளர்ச்சியடைந்த பக்குவமான விந்தணுக்களாக மாறும். இதை விரைகளில் உருவாகும் விந்தணுக்கள் கண்ணுக்குத் தெரியாத மிக, மிக, நுண்ணிய நிலையில் உருவாகும். இதையே “விந்தணு உருவாக்கம்’’ (Spermatogenesis) என்கிறோம். இயல்பான நிலையில் விந்தணுக்கள் அளவு 15 மில்லியனியலிருந்து, 200 மில்லியன் வரைக்கூட ஒரு மில்லி […]

மேலும்....

சிந்தனைக் களம் : வலிய இந்தி திணிக்கப்படுவதற்கு வடகிழக்கு மாநிலங்கள் எதிர்ப்பு!

சரவண ராஜேந்திரன் திரிபுரா பழங்குடியினர் எதிர்ப்பு திரிபுராவில் 56 பழங்குடியின அமைப்பு-களின் கூட்டமைப்பு, மாநிலத்தின் பெரும்-பாலான பழங்குடியினருக்கான மொழியான கோக்-போரோக்கின் எழுத்தாக இந்தி அறிமுகப்–படுத்தப்படுவதற்கான சாத்தியக் கூறுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏப்ரல் 2ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37ஆவது கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வடகிழக்கு மாநிலங்களில் ஒன்பது பழங்குடி சமூகங்கள் தங்கள் பேச்சு வழக்குகளை தேவநாகரிக்கு மாற்றியதாகவும், 8 மாநிலங்கள் 10ஆம் வகுப்பு வரை […]

மேலும்....

கவிதை : ஒன்றிய அரசின் ஒவ்வா வெறுப்பரசியல்!

பேராசிரியர் முனைவர் கடவூர் மணிமாறன் பெரும்பதவி வகித்தோர்கள் ஒன்றாய்ச் சேர்ந்து பெரும்பிழைகள் இழைக்கின்ற ஒன்றி யத்தார் வெறுப்பான அரசியலை நடத்தும் போக்கோ வெங்கொடுமை, சிறுமையென அறிக்கை விட்டார்! பொறுப்பினிலே உள்ளவரோ அமைதி காத்தல் புரட்சிக்கு வழிவகுக்கும் என்றும் கூறி அறிவுறுத்தி உள்ளமையைப் புரிந்து கொள்வீர்! அனைவருமே நிகரென்னும் உண்மை ஓர்வீர்! வெறுப்பான அரசியலோ மக்கள் ஆட்சி விதிமுறைக்கு முரணாகும்; பழியே சேர்க்கும் நெருப்பனைய நெஞ்சத்தார் வஞ்ச கத்தை நிழல்கூட மறக்காது; மன்னிக் காது பொறுப்புக்குப் பெருமையினைச் சேர்த்தல் […]

மேலும்....

முகப்புக் கட்டுரை : அறிவியல் அணுகுமுறையே அனைத்திற்கும் தீர்வு!

மஞ்சை வசந்தன் உலகில் உள்ள சிக்கல்கள், அழிவுகள், கேடுகள், இன்னல்கள், இழிவுகள், ஆதிக்கம், ஏற்றத்தாழ்வுகள், மோதல்கள், பாழ்படுத்துதல், அறியாமை, மூடநம்பிக்கைகள் என்று எதை எடுத்துக் கொண்டாலும் அதற்குக் காரணம் அறிவின் வழி சிந்திக்காது, மரபு வழி மந்தைகளாய் செயல்படுவதே காரணம் ஆகும்! கடவுள்: கடவுள் நம்பிக்கை பிறந்து வளரும் குழந்தைக்கு எப்படி வருகிறது? அதற்குப் பசி வருவதுபோல, தாகம் எடுப்பதுபோல கடவுள் பற்றிய எண்ணம், தானே வருகிறதா? வருமா? என்றால், இல்லை. அப்படி வராது. பின் எப்படி […]

மேலும்....

பெரியார் பேசுகிறார் : அறிவுக்கு ஒவ்வாத சடங்குகள் விலக்கப்பட வேண்டும்!

தந்தை பெரியார் “பேரன்புமிக்க தாய்மார்களே, தோழர்களே, நண்பர் நட்சத்திரம் அவர்களே! நாம் இங்கு கூடி இருப்பது நண்பர் திரு. நட்சத்திரம் அவர்களின் புதுமனை புகுவிழாவின் பொருட்டு குழுமி இருக்கின்-றோம். இப்படி புதுமனை புகுவது எல்லோரும் செய்கின்றார்கள். மற்றவர்கள் செய்வதற்கும் நண்பர் நட்சத்திரம் செய்வதற்கும் ரொம்ப வித்தியாசம் உள்ளது. சாதாரணமாக ஒரு புதுமனையில் வாசம் செய்ய முற்படுபவர்கள் இது மற்றவர்களுக்குத் தெரியும்படி செய்ய வேண்டியுள்ளது. இப்படிப்பட்ட நிகழ்ச்சி இல்லாமல் இருந்தால் ஜனங்கள், இவர் பழைய வீட்டில் இருப்பதாகத்-தான் எண்ணுவார்கள். […]

மேலும்....