மூடநம்பிக்கை : பக்தியால் தலையில் தேங்காய் உடைப்பது சரியா?

ஒளிமதி வாயில் சூடம் போட்டு விழுங்குவதைக்-கூடச் சிலர் பக்தியால், அருளால் என்று எண்ணுகின்றனர். எரிகின்ற சூடத்தை நாக்கில் போட்டு உடனே வாயை மூடிக்கொள்வார்கள். பார்க்கின்றவர்கள் நெருப்பை விழுங்கி விட்டதாக எண்ணுவார்கள். ஆனால், உண்மை அதுவல்ல; வாயை மூடியவுடன் சூடம் அணைந்துவிடும். காற்று இருந்தால்தான் நெருப்பு எரியும். எனவே, வாயை மூடியதும் சூடம் அணைந்து விடுவதால் வாயைச் சுடுவதில்லை. எனவே, தீ மிதிப்பதும், அலகு குத்திக் கொள்வதும் மேற்கண்ட அறிவியல் காரணங்-களினாலே தானே தவிர, கடவுள் அருளாலோ அல்லது […]

மேலும்....

சமத்துவம் : நல்லிணக்கம் காக்கும் கொடிக்குளம்!

மக்களை மதம், இனம், ஜாதி, நிறம் என்னும் பெயர்களால் சிலர் பிரித்தாளும் நிலை பரவலாகக் காணப்படுகிறது. மக்களும் வேறுபாடுகளைப் புறந்தள்ளி இணக்கமாக வாழ முன்வரும் நிலை பெரும்பாலும் இல்லை. அப்படிப்பட்ட நிலையில், தங்களிடையே உள்ள வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையாக வாழும் ஊர் தமிழ்நாட்டில் உள்ள கொடிக்குளம். தமிழ்நாடு அரசு இந்த ஊருக்கு, இந்த ஆண்டு ரூ.10 இலட்சம் பரிசாக அளித்துள்ளது. மதுரையிலிருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தூரத்தில், உசிலம்பட்டி தாலூகா, செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் இவ்வூர் […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்… : இயக்க வரலாறான தன் வரலாறு (294)

பெரியார் நினைவு சமத்துவபுரம் கி.வீரமணி பிகாரில் ‘பூமிகார் பிராமணர்’ குண்டர் படையின் தொடர் வன்முறையைக் கண்டித்து 12.2.1999 அன்று அறிக்கை வெளியிட்டேன். “பிகாரில் ஜெகனாபாத் பகுதியில் ரண்வீர்சேனை என்ற ‘பூமிகார் பிராமண’ நிலப் பிரபுக்களின் ஏவல் பட்டாளம் மீண்டும், பல தாழ்த்தப்பட்ட பெண்களையும் ஆண்களையும் குழந்தைகளையும்கூட, இரவு நேரத்தில் அந்த அப்பாவி விவசாயத் தொழிலாளிகள் நன்றாக உறங்கிக் கொண்டிருக்கிறபோது, திடீரென்று, மின்னல்போல் தாக்கி, சுட்டுக் கொன்றுவிட்டு ஓடிவிட்டனர். சில வாரங்களுக்கு முன் நடந்த படுகொலைகளின் பச்சை ரத்தம்கூட […]

மேலும்....

கவிதை : உறுபழி சேர்க்கும் ஒன்றிய அரசு!

– முனைவர் கடவூர் மணிமாறன் மதவெறி கொண்டே மனிதம் மாய்த்திடும் மானுடப் பற்றிலா மரநெஞ்சர் உதவாக் கொள்கை உயர்த்திப் பிடித்தே உறுபழி சேர்த்தார் ஆட்சிக்கே! நாட்டின் நலன்கள் நன்றாய்க் காப்பதாய் நவின்றே மக்களை ஏய்க்கின்றார்! கூட்டணி அமைத்துக் குழப்பம் விளைத்தே கொடுமை பற்பல இழைக்கின்றார்! வடபுலத் தவர்க்கே வாய்ப்பை வழங்க வஞ்சக வலையை விரிக்கின்றார்! மடமைச் சேற்றுள் அழுந்திக் கிடப்பவர் மதிப்பை விலைக்கே விற்கின்றார்! நாணம் இன்றித் தனியார் சிலர்க்கே நாட்டை அடகும் வைக்கின்றார்! கோணல் மனத்தினர் […]

மேலும்....

முகப்புக் கட்டுரை : பகுத்தறிவைப் பரப்பி மூடச் செயல்களை முறியடிப்போம்!

மஞ்சை வசந்தன் உலகில் அறிவார்ந்த வாழ்க்கை வாழ்ந்த இனம் தமிழினம். அவர்கள் செயல்கள் ஒவ்வொன்றும் அறிவியல் அடிப்படையில் அமைந்தவை. தொன்மைத் தமிழரிடம் கடவுள் நம்பிக்கையில்லை, மூடச் செயல்கள் இல்லை, ஜாதிப் பிரிவுகள் இல்லை, பெண்ணடிமை நிலை இல்லை, சடங்குகள் இல்லை. தமிழரின் செயல்கள் ஒவ்வொன்றும் காரணம் உடையவையாய் இருந்தன. அவர்களது வாழ்வியல் இயற்கை சார்ந்தும், அறிவு அடிப்படையிலும் அமைந்தன. பயன்படு பவற்றைப் போற்றும், மதிக்கும் மாண்பு அவர்களிடம் மிகுந்து காணப்பட்டது. நிலத்தலைவர், வீரர், உயர்குணப் பெண்டிர், கற்றோர், […]

மேலும்....