எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (102)

பாவலரேறு பெருஞ்சித்திரனார் பார்வையில் பாரதி நேயன் பாட்டுத் துறையில் பாரதியார் ஒரு பார்ப்பனர் என்பதற்காகவே எப்படி அளவிறந்து போற்றப் பெறுகிறார் என்பதை கொஞ்சம் சொல்லித்தான் ஆகல் வேண்டும். அவர் பாட்டுத் திறமை மிகவும் பொதுவானதே. அவருக்கிருந்த கற்பனையாற்றலை வேண்டு-மானால் ஒருவாறு சிறப்பாகச் சொல்லலாம். ஆனால், கற்பனையாற்றல் இருப்பவர்-களெல்லாரும் பாத்திறன் பெற்றிருப்பார்-களென்று சொல்ல முடியாது. பாவலன் ஒருவனுக்கு இருக்க வேண்டிய திறமையுள் கற்பனைத் திறனும் ஒன்று. ஆனால் பாத்திறன் என்பது ஒருவன் கற்றுள்ள இலக்கிய நூல்களையும் அவனுக்குள்ள மொழிப் […]

மேலும்....

சுவடுகள்

சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் பிறந்த நாள் : 25.6.1931 விசுவநாத் பிரதாப் சிங் (வி.பி. சிங்) வெறும் 11 மாத காலமே பிரதமராக இருந்தவர். ஆனாலும், உண்மையான ஜனநாயகவாதியாக ஆட்சிப் பொறுப்பை நடத்திக் காட்டிய மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர் அவர். அவர் ஒரு சூத்திரத்தை, ஆட்சியின் இலக்கணத்தை உருவாக்கிக் கொடுத்தார். ”80 சதவிகித மக்களை ஜாதியின் பெயரால், சமூகத்தின் மய்ய நீரோட்டத்திலிருந்து ஒதுக்கி வைத்திருப்பதைவிட மிகப்பெரிய திறமைக்கு எதிரான ஒரு செயல் இருக்க முடியுமா?’’ என்ற […]

மேலும்....

சிந்தனை : நபிகள் நாயகம் குறித்த சர்ச்சைப் பேச்சும், விளைவுகளும்!

பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர்-களில் ஒருவரான நுபுர் சர்மா, 5.6.2022 அன்று ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கிடைத்தது பற்றிய தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்றார். அப்போது, முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறினார். இதை கண்டித்து கான்பூரில் நடந்த கடையடைப்பின் போது, இரு தரப்பினர் இடையே மோதல் வெடித்தது. இந்நிலையில், நுபுர் சர்மாவின் கருத்துக்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. இதன் காரணமாக, 6.6.2022 அன்று அவரை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி பாஜக தலைமை […]

மேலும்....

நாளும் செய்தியும் : ஒரு வரிச்செய்தி

27.5.2022 முதல் 10.6.2022 வரை 27.5.22 நீட் தேர்வு விலக்கு, ஒன்றிய அரசின் ஜி.எஸ்.டி. நிதி பங்களிப்பை அதிகரிக்க வேண்டும். சென்னையில் நடந்த விழாவில் பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை. 27.5.22 பிற்படுத்தப்பட்டோர் ஆணைய கூட்டத்தில் உள் ஒதுக்கீட்டை விவாதிக்கக் கூடாது – மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு. 27.5.22 மங்களூரு மசூதி கோயிலாக இருந்ததாக பஜ்ரங் தளம் போர்க்கொடி – 144 தடை உத்தரவு அமல். 28.5.22 ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 21 நாள் இலவச […]

மேலும்....

சிந்தனைக்களம் : கீழ்ப்பாக்கத்து இதழின் கீழ்மை!

எல்லாவற்றிலும் மேலோட்டமான பார்வையும் அரைகுறையாகத் தெரிந்து-கொண்டு பொருளற்ற வாதங்களை முன்வைப்பதும் மெய்ம்மையிலாக் கூற்றுகளை முன்மொழிவதும் இன்றைய இதழ்கள் பலவற்றின் போக்காக-வுள்ளது. கீழ்ப்பாக்கத்திலிருந்து வெளிவரும் அந்த இதழ் ஒருகாலத்தில் இந்திய நாட்டிலேயே மிகுதியாக விற்பனையாகும் இதழாகக் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தது. நூலிழையில் தமிழர் மேலாண்மையிலிருந்து தடம் மாறித் தமிழ், தமிழர் என்றாலேயே கசப்பும் காழ்ப்புணர்வும் வெளிப்படுத்து வோரிடம் தற்போது சிக்கிக்கொண்டுள்ளது. நேரடியாகத் தமிழின வெறுப்பை வெளிப்படுத்துவதுடன் மக்கள் மன்றத்தில் செல்வாக்குப் பெற்றுவிட்ட எழுத்தாளர்களின் வழுவும் பிழையும் மலிந்த கூற்றுகளை […]

மேலும்....