மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (104)

மகப்பேறு (PRAGNANCY) மரு.இரா.கவுதமன் கருவுறுதல் நிகழும்பொழுது அறிகுறிகள் அனைத்துமோ அல்லது ஒரு சிலவோ மட்டுமோ தோன்றலாம். சில நேரங்களில் சிலருக்கு எந்த அறிகுறிகளுமே இல்லாமல், மாத விலக்கம் நின்று மட்டும் போகலாம். கருவுறுதல் ஆய்வுச் சோதனை செய்வதன் மூலம், கருவுற்ற நிலையை அறியலாம். இரும்புச் சத்து மாத்திரைகள், ஃபோலிக் அமில மாத்திரைகள், வைட்டமின் மாத்திரைகள் முதல் பருவ கருவுற்ற காலத்தில் சாப்பிடுவது நல்ல பலனைத் தரும். மருத்துவ அறிவுரைகளும், ஆய்வும், மருந்துகளும் முதல் பருவத்தில் உண்டாகும் தொல்லைகளைக் […]

மேலும்....

அறிவோம் : தமிழ்நாடு அரசின் சில உதவித்தொகைகள்!

பத்தாம் வகுப்பு முதல் முனைவர் ஆய்வு Ph.D., வரை… 1. ஈ.வெ.ரா. நாகம்மை உதவித்தொகை தமிழ்நாடு அரசால் மாணவிகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது இது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் முதுகலையில் கலை மற்றும் அறிவியல் பாடங்களைப் படிப்பவர்களுக்கு இந்த உதவித்தொகை கிடைக்கும். இதற்கு இளங்கலையில் குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்-பெண்ணுடன் தேர்வாகியிருக்க வேண்டும். இந்த உதவித்தொகை மதிப்பெண்ணைப் பொறுத்தும், படிக்க விருக்கிற பாடப்பிரிவைப் பொறுத்தும் மாறுபடும். 2. Ph.D.,, ஸ்காலர்ஷிப் ஆஃப் தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் […]

மேலும்....

நாளும் செய்தியும் :ஒரு வரிச்செய்தி

11.6.2022 முதல் 25.6.2022 11.6.22 ஆன்லைன் ரம்மி விளையாட்டின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு. 11.6.22 கேசினோ சூதாட்டப் புகாரால் புதுச்சேரிக்குச் செல்லாமல் திரும்பிய சொகுசுக் கப்பல். 11.6.22 நூபுர் சர்மா கருத்துக்கு எதிர்ப்பு. டெல்லி, உ.பி.யில் முஸ்லிம்கள் போராட்டம். 12.6.22 வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்றும் திட்டம்- யுஜிசி அறிவுறுத்தல். 12.6.22 இந்தியாவில் ஆன்மிக வளர்ச்சியும் அவசியம் – ஆளுநர் ரவி கருத்து. 12.6.22 உ.பி.யில் தெற்காசியாவின் பெரிய ராணுவ […]

மேலும்....

மூடநம்பிக்கை : ஜோதிடம் உண்மையா?

ஒளிமதி உலகில் நடைபெறுகின்ற மோசடிகள் அனைத்தும் மனிதனிடமுள்ள பலவீனத்தை அடிப்படையாக வைத்தே செய்யப்படுகின்றன. அவ்வாறே ஜோதிட மோசடியும் மனிதனின் இயல்பறிந்து செய்யப்படுகிறது. மறைக்கப்படுகின்ற எந்தவொன்றையும் காண வேண்டும் என்கிற ஆசை எழுவது மனிதனுக்கு இயல்பு. எனவே, நடக்கப் போவதை அறிவிக்கிறேன் என்று யாராவது கூறியவுடன் ஆவலோடு அங்குச் செல்கிறான். அதற்காகச் செலவிடவும் தயாராக இருக்கிறான். இந்த மனநிலையைப் பயன்படுத்திக் காசு பறிக்கக் கையாளப்படுகின்ற யுக்தியே ஜோதிடம். இவ்வாறு நாம் கூறியவுடன், “ஜோதிடம் என்பது மூடநம்பிக்கைகளைப் போல அல்ல; […]

மேலும்....

சிறுகதை : கொடுத்தது எது?

ஆறு.கலைச்செல்வன் தனக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்ததை நினைத்து மிகவும் மகிழ்ச்சியடைந்-தான் வீராச்சாமி. நீண்ட நாள்கள் வேலையின்றி இருந்த அவனுக்கு வெளிநாட்டு நிறுவனம் ஒன்றில் பணி கிடைத்தது. அவன் எதிர்பார்த்ததைவிட அதிக ஊதியமும் கிடைத்தது. அவனது தாய், தந்தை, ஒரே தங்கை இவர்களை இனிமேல் நல்ல முறையில் வாழ வைக்க முடியும் என நம்பினான். படித்துக் கொண்டிருக்கும் தங்கைக்கும் பிற்பாடு திருமணத்தையும் நடத்தி விடலாம் என நினைத்தான். மேலும் அவன் தங்கை மீராவுக்கு எப்படியாவது அரசுப் பணியில் சேர […]

மேலும்....