ஆசிரியர் பதில்கள் : வாழ்வாதாரத்தை உறுதி செய்ய இலவசங்கள் வேண்டும்!

கே: ‘திருவரங்கம் கோயில் முன் பெரியார் சிலை இருப்பது ஆத்திகர்களைப் புண்படுத்தும்’ என்ற கருத்துப் பற்றி? – ம.கோபாலகிருஷ்ணன், தாம்பரம் ப: யாரோ ஒரு அனாமதேயம், விளம்பரம் தேடிட இப்போது உளறியுள்ளது; உச்சநீதிமன்றம் வரை பார்ப்பனர்கள் படையெடுத்து தோற்றோடிய பழைய செய்தி, இந்த உளறுவாயனுக்கு ‘ஒளிந்து திரியும் வீராதி வீரனுக்கு’ இது தெரியாது போலும்! சிலையே காவியை மிரட்டுகிறது! கே: ‘இலவசத் திட்டங்கள் கூடாது’ என்று ஒன்றிய பா.ஜ.க. அரசும், பி.ஜே.பி. கட்சியினரும் கூறுவது ஏற்புடையதா? – […]

மேலும்....

ஆரிய மாயை : திராவிடரும் ஆரியரும்

அறிஞர் அண்ணா ”ஆரியராவது! திராவிடராவது! எப்பொழுதோ எழுதி வைத்த பழைய சரித்திரத்தைப் பேசுவதற்கு இது காலமா? இப்பொழுது ஆரியர் இன்னார் என்று யாரால் குறிப்பிட முடியும்? இரு சமூகமும் எவ்வளவோ ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாகக் கலந்து-விட்டனர். மறந்து போன இனப்பிரிவை உயிர்ப்பிக்க முனைவது நாட்டுக்கு நலமன்று; அரசியல் முன்னேற்றத்திற்கும் அடுக்காது” என்று ஒருசாரார் கூறுகின்றனர். இவர்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டு நம்மவர்களிலும் சிலர் ‘ஆமாம்’ போடுவர். தங்கள் பகுத்தறிவுக்குச் சிறிதும் வேலை கொடுக்காமல், ஆரியர்கள் _ பார்ப்பனர்கள் சொல்லுவதை […]

மேலும்....

சுயமரியாதைச் சுடரொளி: சாஸ்திரங்களைத் தோலுரித்த சாமி கைவல்யம்!

வை.கலையரசன் தந்தை பெரியார் ‘குடிஅரசு’ ஏட்டைத் தொடங்கி வைதிகத்தின் தூண்களாக விளங்கிய புராண இதிகாசங்களைத் தோலுரித்து அறிவுத் தீயைக் கொளுத்தினார். புராண இதிகாசங்-களில் அதுவரை புனிதமாக, திருவிளை-யாடலாக, கன்னத்தில் போட்டுக் கொண்டு கேட்கப்பட்ட கதைகள் விமர்சனங்களுக்கு உள்ளாயின. அதே கதைகள் அயோக்கியத்தனம், ஆபாசம், மோசடி என்று பேசப்பட்டன. இத்தகைய பணியில் ‘குடிஅரசு’ ஏட்டில் எழுதிய அய்யாவின் அறிவுப்படைக்கு முன் நின்றவர்களில் ஒருவர் சாமி கைவல்யம். சாமி கைவல்யம் 22.8.1877 அன்று கேரளத்தைச் சேர்ந்த கள்ளிக்கோட்டையில் பிறந்தவர். இவரது […]

மேலும்....

வரலாற்றுச் சுவடு: புஷ்யமித்திரனின் பவுத்த ஒழிப்பு!

“புஷ்யமித்திரனின் புரட்சி பவுத்தத்தை ஒழித்துக் கட்டுவதற்காகப் பார்ப்பனர்களால் தூண்டப்பட்ட அரசியல் புரட்சியாகும். வெற்றி பெற்ற பார்ப்பனீயம் என்ன செய்தது என்று கேட்டால், அந்த அடாவடிச் செயல்கள் ஏழு வகைப்படும். 1. பார்ப்பனர்களுக்கு ஆட்சி செய்யும் உரிமையையும் அரசர்களைக் கொலை செய்யும் உரிமையையும் வழங்கிற்று. 2. பார்ப்பனர்களைச் சிறப்பு உரிமை பெற்ற மக்களாக ஆக்கியது. 3. ‘வர்ணம்’ என்பதை ‘ஜாதி’ என்று மாற்றியது. 4. பல்வேறு ஜாதிகளுக்கிடையில் பூசலையும் விரோத பாவத்தையும் தோற்றுவித்தது. 5. சூத்திரர்களையும் மகளிரையும் இழிவு-படுத்தியது. […]

மேலும்....

பெண்ணால் முடியும்! : தங்கம் வென்ற தமிழ்ப் பெண்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த விவசாயியின் மகளான பரணிகா தேசிய அளவிலான போல்வால்ட் (Polewalt) போட்டியில் அதிக உயரம் தாண்டி சாதனை படைத்துள்ளார். மாநிலங்களுக் கிடையேயான 61ஆம் தேசிய மூத்தோர் பிரிவு வாகையர் (சீனியர் சாம்பியன்) போட்டிகள் ஜூன் 10ஆம் «தி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டரங்கில் தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் நடைபெற்றது. இப்போட்டிகளில் கோல் ஊன்றி உயரம் தாண்டும் (Polewalt) போட்டியும் ஒன்று. இதில் தமிழ்நாடு, கேரளா, கருநாடகா உள்ளிட்ட […]

மேலும்....