கட்டுரை : ‘விடுதலை’ வீழ்ந்தால் எவரே வாழ்வர்?

கி.வீரமணி நம் இனத்தின் மூச்சுக்காற்று தந்தை பெரியார் தந்த லட்சியங்கள் _ கொள்கைகள் என்றால், அவற்றை வென்றெடுக்க நாம் களத்தில் நின்று போராட நம் அறிவாசான் தந்த அறிவாயுதம்தான் ‘விடுதலை’ என்னும் முனை மழுங்காத போர்க் கருவி! கரோனா (கோவிட் 19) தொற்று உலகத்தையே அச்சுறுத்தி, பல லட்சம் உயிர்களுக்கு-மேல் பலி கொண்டு, 200 நாடுகளுக்குமேல் உலகமெங்கும் பரவியபோது, ஊரடங்கு-மூலம், ஒதுங்கி, தனி நபர் இடைவெளிமூலம் தன்னெழுச்சியான தனிமைப்படுத்திக் கொள்ளும் பாதுகாப்புமூலம்-தான் இதன் வீச்சிலிருந்து மனித குலம் […]

மேலும்....

நலவாழ்வு : மூளையை இளமையாக வைத்திருக்க உதவும் உடற்பயிற்சி!

நிவேதா மகேந்திரன் இன்றைய அறிவியல் உலகில் பல பேர் காலை நேரத்திற்கு எழுந்து கொள்வதே அதிசயமாக உள்ளது. இந்நிலையில் உடற்பயிற்சி செய்பவர்கள் எல்லாம் சிறிது குறைவாகவே காணப்படுகின்றனர். 40 வயதிற்குப் பிறகு, மூளையின் அளவு குறையத் தொடங்குகிறது. மூளை வழியாக குறைந்த இரத்த ஓட்டம், மற்றும் ஹார்மோன் மற்றும் நரம்பியக் கடத்தி அளவு குறைகிறது. வயதாவதால் புதிய பணிகளைக் கற்றுக் கொள்வது போன்ற சில செயல்பாடுகளில் தாமதத்திற்கு வழிவகுக்கிறது. அறிவாற்றல் முதுமை மூளையின் ஹிப்போகாம்பஸில் உள்ள நரம்பியல் […]

மேலும்....

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (105)

யார் புரட்சிக்கவி? பாரதியா? பாரதிதாசனா? என்ற தலைப்பில் ஜெ.இராமதாஸ் எம்.ஏ.பி.எல்., அவர்கள் விடுதலையில் எழுதியவை: நேயன் தந்தை பெரியாரின் படையில்… பெரியாரின் பெரும் படையில் பல திறத்தினர் பங்கு கொண்டனர். ஆண், பெண், முதியோர், இளைஞர், பாமரர், பணக்காரர், படித்தோர், படியாதோர் அனைவரையும் அவ்வியக்கம் தன்பால் ஈர்த்தது. கல்லூரி கண்ட பலபேர்களைத் தன்வயப்படுத்தியது. கவிஞர் பலரை உருவாக்கியது. அந்தப் படை வரிசையில் முன்னணியிலிருந்தவர்கள், தளபதியாகத் திகழ்ந்தவர்கள் அறிஞர் அண்ணாவும், பாவேந்தர் பாரதிதாசனும் இவர்கள் ‘உலா’வை ‘மூவர் உலா’ […]

மேலும்....

நினைவு நாள் : சுயமரியாதைச் சுடரொளி புலவர் கோ.இமயவரம்பன்

நினைவு நாள் : ஆகஸ்ட் 9 வை.கலையரசன் புலவர் கோ.இமயவரம்பன் அவர்கள் தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் வேளாண் குடும்பத்தில் பிறந்தவர். அந்த ஊரில் வசதி படைத்த மிராசுதார் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது மாமா திருவைகாவூர் பிச்சை பிரபலமான கம்யூனிஸ்ட் தலைவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ‘புலவர்’ பட்டம் படிக்க வந்தபோது, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பொருளாதார ஆனர்ஸ் வகுப்பில் இரண்டாம் ஆண்டு படித்துவந்தார். இருவரும் மிக நெருக்கமான நண்பர்கள் ஆயினர். ஆசிரியர் மூலம் தந்தை பெரியாருக்கு அறிமுகம் […]

மேலும்....

கட்டுரை : வீடுதோறும் விடுதலை வேண்டும்! ஏன்?

மஞ்சை வசந்தன் “விடுதலை’ பெரியார் தொடங்கிய நாளேடு! பெயருக்கு ஏற்ப, ஆரிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை! ஆணாதிக்கத்திலிருந்து விடுதலை! மூடநம்பிக்கை-களிலிருந்து விடுதலை! மத மவுடீகங்களிலிருந்து விடுதலை! ஜாதிப் பிணைப்பிலிருந்து விடுதலை! அறியாமை யிலிருந்து விடுதலை! அடிமைத் தளையிலிருந்து விடுதலை! ஆதிக்கம் எந்த வடிவில் வந்தாலும் அதிலிருந்து விடுதலை பெற வேண்டும்! அதற்கு என்ன வழி என்று ஒவ்வொரு நாளும் விழிப்பூட்டும், தீர்வு கூறும், வழிகாட்டும் ஏடு விடுதலை! சமூகநீதிக்கு எதிரானவற்றிற்கு எதிராய் சமர் புரிவது விடுதலை! சதிகாரர்களின் சதிகளை […]

மேலும்....