அய்யாவின் அடிச்சுவட்டில்…இயக்க வரலாறான தன் வரலாறு (303)

சென்னை பெரியார் மய்யம் வி.பி.சிங் திறப்பு! கி.வீரமணி சமூகநீதியினை வேண்டி வலியுறுத்தும் பல்வேறு அமைப்புகளின் உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள் உட்பட மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த தலைவர்களைக் கொண்ட குழு சமூகநீதி மய்யத்தின் தலைவர் சந்திரஜித் அவர்கள் தலைமையில் 21.11.2000 அன்று மாலை 4:00 மணியளவில் இந்திய உள்துறை அமைச்சர் அத்வானி அவர்களை, சட்டமன்றங்களில் பெண்களுக்கான இடஒதுக்கீடு பற்றிய கோரிக்கையை வலியுறுத்த சந்தித்தது. அப்போது பெண்களுக்கான 33 சதவிகிதம் ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடும் […]

மேலும்....

பார்ப்பனத் துவேஷிகள் என்பதற்கு அண்ணாவின் பதில்!

நாங்கள் பார்ப்பனத் துவேஷிகள் என்று கூறப்படுகிறதே அது உண்மையானால் சங்கராங்சசாரியார் பார்ப்பனர் என்பதற்காக அவரை வெறுத்து, தம்பிரான் தமிழர் என்பதற்காக அவரை ஆதரித்து, சர் சி.பி. பார்ப்பனர் என்பதற்காக அவரைக் கண்டித்து, சர். ஷண்முகம் தமிழர் என்பதற்காக அவரிடம் சல்லாபம் செய்து, ஆச்சாரியார் பார்ப்பனர் என்பதற்காக அவரைக் கண்டித்து, அவினாசி தமிழர் என்பதற்காக அவரை ஆதரித்து, பி.ஸ்ரீ. பார்ப்பனர் என்பதற்காக அவரைக் கண்டித்து, டி.கே.சி. தமிழர் என்பதற்காக அவரை ஆதரித்து, கபிலர் பார்ப்பனர் என்பதற்காக அவரைக் கண்டித்து, […]

மேலும்....

அறிவியல் : கிரகணத்தைப் பார்த்தால் ஆபத்தா?

த.வி.வெங்கடேஸ்வரன் முதுநிலை விஞ்ஞானி, புதுடில்லி முந்தைய சூரிய சந்திர கிரகணங்களின் போது ஒவ்வொருமுறையும் உண்மையில்லாச் செய்திகள் பரப்பியது போலவே, அக்டோபர் 25ஆம் தேதி நிகழ்ந்த சூரிய கிரகணம் குறித்தும் பரப்பி வருகின்றனர். தவறான செய்திகளை சூரிய கிரகணம் ஏற்படும் என்பது பாரம்பரியப் பஞ்சாங்கம் கணித்தபடி நடக்கிறது, மேலும் கிரகணக் காலங்களை மிகச்சரியாக நம் பஞ்சாங்கங்கள் கணித்து உள்ளன என்றும் கூறிக் கொள்கின்றனர். கிரகணச் சமயத்தில் கர்ப்பிணிப் பெண்கள் வெளியே வரவேண்டாம் எனவும் வாட்ஸ்ஆப் செய்திகள் காட்டுத் தீ […]

மேலும்....

பெண்ணால் முடியும்!

மலேசியாவில் தங்கம் வென்ற இலக்கியா! மூட்டை தூக்கும் தொழிலாளி மகள்! இலக்கியா ஒரு தமிழ்ப்பெண். இவள் குடும்பம் மிகவும் வசதி குறைந்த குடும்பம். இவருடைய தந்தை சென்னை கோயம்பேடு மார்க்கட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளி. இல்லாமை இலக்கியாவின் முயற்சியை முடக்கிவிடவில்லை. அவர் மிகவும் முயன்று கராத்தே பயிற்சி பெற்றார். முயற்சி திருவினையாக்கும், என்பதற்கொப்ப இவர் மலேசியாவில் நடைபெற்ற பன்னாட்டு கராத்தே போட்டியில் கனடா வீராங்கனையை வீழ்த்தி தங்கம் வென்று தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார். வறுமையை வென்று திறமையில் […]

மேலும்....

சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள் : மொழி உரிமை

நூல்: மொழி உரிமை ஆசிரியர்: பெரியார் பேருரையாளர் பேராசிரியர் கு.வெ.கி.ஆசான், எம்.ஏ., பி.எல்., எம்.பில். வெளியீடு: திராவிடர் கழக (இயக்க) வெளியீடு, பெரியார் திடல், 84/1 (50), ஈ.வெ.கி. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை – 600 007. (044-26618163) பெரியார் மாளிகை, புத்தூர், திருச்சி-620 017 (0431-2771815) info@periyar.org www.dravidianbookhouse.com [பெரியார் பேருரையாளர் கு.வெ.கி.ஆசான் சிறந்த தமிழறிஞர், ஆதாரங்களைத் திரட்டித் தரும் ஆய்வறிஞர். அவரது படைப்புகளில் ஒன்றுதான் இந்நூல். இது இந்தித் திணிப்பு – தமிழ்மொழி […]

மேலும்....