ஆவணக் காப்பாளர் ஆல்பர்ட்!- வி.சி.வில்வம்

ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்றாலும், இவரை ஆவணக் காப்பாளர் என்றே சொல்லலாம். அந்தளவிற்கு இலால்குடி மாவட்ட நிலப்பரப்பில், ஒவ்வொரு சதுரடியும் இவருக்கு அத்துப்படி. இவர் கால்படாத கழகத்தினர் வீடுகளே இல்லை. எந்த ஒரு நிகழ்வையும் ஆண்டு, மாதம், தேதி வரை கண நேரத்தில் கூறும் அபார நினைவாற்றல் கொண்டவர். வயது 85 என்பார்கள்.ஆனால் சுறுசுறுப்பின் சூறாவளி இவர். இவரின் டிவிஎஸ் 50 இருசக்கர வாகனம் தரையிலேயே பறக்கும் தன்மை கொண்டது. இப்போது தான் அது சற்று […]

மேலும்....

ஸ்வஸ்திக் தூய தமிழ் எழுத்து- மஞ்சை வசந்தன்

(கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூர் அய்யன் ஏரியில் அகழ்வின்போது குறியீடு எழுதப்பட்ட பானை ஓடு கிடைத்தது பற்றி, 02.08.2017 ‘இந்து தமிழ்திசை’ நாளிதழில் வந்த செய்தியை ஒட்டி எழுதப்பட்ட கட்டுரை] – ஸ்வஸ்திக்’ உலகில் பலப் பகுதிகளில் பலரால் பயன்படுத்தப்பட்டாலும் அதன் உரிமையாளர் தமிழர் என்ற ஆணித்தரமான உண்மை பெரும்பாலோர் அறியாதது என்பது மட்டுமல்ல, இதை அறியும்போது அவர்கள் வியப்பும் அடைவர். – இந்தக் குறியீடு “ஸ்வஸ்திக்” என்று பின்னாளில் அழைக்கப்பட்டாலும், இது இரண்டு தமிழ் எழுத்துகளின் […]

மேலும்....

அறிவியல் வளர்ச்சியும் மதங்களின் வீழ்ச்சியும் !… சரவணா இராஜேந்திரன் .

ஆன்மிகம் தொடர்பான திரைப்படங்கள் உலகம் முழுவதும் அவ்வப்போது வெளி வந்துகொண்டே இருக்கின்றன. ஆன்மிகப் படங்களை எடுக்கக்கூட கடவுள் மறுப்புக் கொள்கையைக் கொண்ட அறிவியல் சாதனங்கள் தான் உதவுகின்றன என்பது அனைவரும் அறிந்ததே. திரைப்பட நெகடிவ் ஃபிலிம் சுருளில் சிறியதாக இருக்கும் உருவங்களைப் பெரிய திரையில் பெரியதாக விழச்செய்து அசையும் மெய்ப்பிம்பங்களாக மாற்றிக் காண்பிக்கும் கருவியான புரொஜெக்டரைக் கண்டுபிடித்த எட்வியர்ட் மைபிரிட்ஜ் கடவுள் மறுப்புக் கொள்கை கொண்டவர் தான். இங்கிலாந்தின் கிங்ஸ்டன் பகுதியில் பிறந்த அவர் சிறு வயதாக […]

மேலும்....

சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் பிறப்பு : 01.06.1888

‘‘நமது உள்ளத் தோழரும் உற்ற துணைவரும் உள்ளும் புறமும் ஒன்றாய் உள்ளவரும் தமிழர் இயக்கத்தில் உறுதியான பற்றுக் கொண்டு அல்லும் பகலும் அயராது உழைத்து வந்தவரும் நம்மிடத்தில் களங்கமற்ற அன்பும் பற்றுதலும் விசுவாசமும் கொண்டிருந்தவரும் நினைத்தால் திடுக்கிடும்படி எதிரிகள் நெஞ்சில் எப்போதும் திகிலை உண்டாக்கிக் கொண்டிருந்தவர் அருமைப் பன்னீர்செல்வம்” – தந்தை பெரியார்

மேலும்....

நாஸ்திகர்மகாநாடு

— ஈ.வெ.கி. — சென்னையில் நாஸ்திகர் மகாநாடானது சென்ற டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி கூட்டப்பட்டது. இது நமது நாட்டிற்கே ஒரு புதுமையானதும், மக்களுக்கு ஒருவித புத்துணர்ச்சியை உண்டுபண்ணக் கூடியதுமாகும். நாஸ்திகமானது தற்காலம் இந்நாட்டிற் சிலருக்கு மட்டில் புதுமையெனத் தோன்றுமாயினும் இது தொன்றுதொட்டே இருந்து வந்திருப்பதாக நம்மவர்களின் புராண இதிகாசங்களால் விளக்கப்பட்டிருக்கிறது. உதாரணமாக இராமாயண காலத்திலும் நாஸ்திகம், கதாநாயகனான ராமனுக்கு உபதேசிக்கப்பட்டதாகவும், அவனால் மறுக்கப் பட்டதாகவும், அவன் மறுத்துவிட்டதையறிந்த உபதேசிகள் அதற்கு அவனின் இளமைப் பருவந்தான் காரணமென்றறிந்து […]

மேலும்....