வேண்டுதலும் படையலும் பக்தர்களுக்குத் தந்த பலன் என்ன ? – மஞ்சை வசந்தன்

கடவுளை வேண்டித் தவம் இருந்ததால் வரம் பெற்றான்; கடவுள் நேரே வந்து காட்சி தந்தது; நோய் தீர்த்தது; மழை பொழியச் செய்தது; விபத்தைத் தடுத்தது; இறந்தவர்களைப் பிழைக்கச் செய்தது என்பன போன்ற செய்திகள் எல்லாம் புராணங்களில்தான் கூறப்படுகின்றனவே தவிர, நடைமுறையில் நம் கண்முன் அதுபோன்ற நிகழ்வுகள் ஏதும் நடக்கவில்லை. அப்படியென்றால் அதன் உண்மையென்ன? இக்கதைகளில் எந்தவுண்மையும் இல்லை. இவையெல்லாம் மக்களைப் பக்தி மயக்கத்திலே இருக்கச் செய்ய, அவர்களைச் சிந்திக்க விடாமல், மூடநம்பிக்கைகளிலே மூழ்கிக் கிடக்கச் செய்யப்பட்ட சதிகள் […]

மேலும்....

‘டிபார்ட்மெண்டு’க்கு ஒரு கடவுளா ? மக்களை ஏமாற்றும் மகாமோசடி !-மஞ்சை வசந்தன்

இந்த மண்ணில் பிழைக்க வந்த ஒரு சிறு கூட்டம் இம்மண்ணுக்குரிய மக்களை இன்றளவும் அடக்கி, ஆதிக்கம் செலுத்திவருகிறது என்றால் அதற்கு ஒரே காரணம், கடவுள் என்ற மூடநம்பிக்கையை, சடங்கு சம்பிரதாயங்களை, கோயில்களை உருவாக்கி, அவர்கள் மூளைக்கு விலங்கிட்டதேயாகும். கடவுள்கள் மூலம் நாம் பல நன்மைகளைப் பெறலாம். சிக்கல்களுக்குத் தீர்வுகளைப் பெறலாம். அதற்கு அந்தந்தக் கடவுளுக்கு வேண்டுதல், பூசை, வழிபாடு போன்றவற்றைச் செய்ய வேண்டும் என்ற நம்பிக்கையை பெரும்பான்மை மக்கள் மத்தியில் பதித்து, அதன்வழியில் அவர்களைச் சுரண்டவும், சிந்தனையற்றவர்களாகவும் […]

மேலும்....

நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலித்த திராவிட -ஆரியக் குரல்கள் !- மஞ்சை வசந்தன்

இந்தியாவின் வரலாறு என்பதே திராவிட – ஆரியப் போராட்டம்தான். திராவிடம் என்பது எதைக் குறிக்கிறது? ஆரியம் என்பது எதைக் குறிக்கிறது என்ற வினாக்களும் அதற்கான விளக்கங்களும், அவ்விளக்கங்களுக்கு இடையேயான மோதல்களும் தொடர்ந்து வருகின்றன. திராவிடத்திற்கு எதிரான மோதல்கள், சுயநலத்தின் காரணமாக, உண்மைக்கு மாறாக எழுகின்றன. தமிழர்கள் திராவிடர்கள்தாம் – இம்மண்ணின் மக்கள்தாம் என்று நாம் கூறிவருவது மட்டுமல்லாது, உலக வரலாற்று, தொல்லியல் ஆய்வாளர்கள் ஆழமான, ஆதாரபூர்வமான ஆய்வுகளின் முடிவாகக் கூறுகின்றனர்.அதுமட்டுமன்றி, மறுபுறம் ஆரியர்கள் மத்திய ஆசியப் பகுதியிலிருந்து […]

மேலும்....

‘நீட்’ தேர்வில் மட்டுமா முறைகேடு ? ‘நீட்’ தேர்வே முறைகேடுதான் ! ‘நீட்’டை ஒழிப்பதே தீர்வு !

“கேஸ்லைட்டிங்” (Gaslighting) எனும் உளவியல் யுகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். நம் மீது, நாம் வைத்திருக்கும் நம்பிக்கையை, நாமே இழக்கும்படி செய்து, நம்மை யார் ஏமாற்ற நினைக்கிறாரோ, அவர்தான் நமக்கு நன்மை செய்கிறார் என்று நாம் நம்பும் அளவிற்கு, நம் மீது பாசமும் அக்கறையும் காட்டுவது போல் நடித்து, நமது அன்பையும் நம்பிக்கையையும் நமக்குத் துரோகம் இழைப்பவர் பெற்றுவிடுவார். நம்முடன் இருப்பவர்கள்- உண்மையில் நம்மீது அக்கறை உள்ளவர்கள்- சொல்வதை ஏற்க மறுக்கும் மனநிலைக்கு நாம் ஆளாக்கப்படுவோம். இந்த […]

மேலும்....

நாடு முழுவதும் ஒன்றிணைந்து போராடுவோம்! கேடு தரும் ‘நீட்’ தேர்வை ஒழிப்போம்!

ஆரிய பார்ப்பனர்கள், சமூகநீதியை எப்படியெல்லாம் வளைத்து தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட, மற்ற மக்களின் உரிமைகளைப் பறிப்பர் என்பதற்கு நீட் தேர்வும், பொருளாதார அடிப்படையில் முற்பட்டோருக்கு இடஒதுக்கீடும் சரியான சான்றுகள் ஆகும். ஒன்றியத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோதே ஆதிக்கம் செலுத்தியவர்கள், தற்போது பி.ஜே.பி. ஆட்சியில் முழுமையாக தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தி வருகின்றனர். நீட் தேர்வைக் கொண்டு வந்த இந்த ஆதிக்கக் கூட்டம், பழியை தி.மு.க.வின்மீது போடும் மோசடியையும் தொடர்ந்து செய்து வருகின்றனர். காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தி.மு.க. […]

மேலும்....