விழாவும் நாமும் … தந்தை பெரியார் …

நம் நாட்டு விழாக்கள் இன்று பெரும்பாலும் அர்த்தமற்ற சடங்குகளாகவே இருந்து வருகின்றன. மேலும், இவைகள் பெரும்பாலும் எந்தக் காலத்திலோ, யாருடைய நன்மையைக் கருதியோ, யாராலோ, எதனாலோ ஏற்படுத்தப்பட்டவைகளாக இருக்கின்றனவே ஒழிய, பெரிதும் நம்முடைய முன்னேற்றத்திற்கு ஏற்றனவாக அமைந்திருக்கவில்லை. உதாரணமாக, ஒவ்வொரு விழாவும் மதச் சம்பந்தமானதாகவும், அவை பெரிதும் பார்ப்பான் மேன்மைக்கும் பிழைப்புக்கும் பயன்படத்தக்க ஒரே தத்துவத்தை அடிப்படையாக வைத்து ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவுமே நாம் காண்கிறோம். அந்தந்த விழாவையொட்டிய சடங்குகளும் பெரும்பாலும் துவக்ககாலம் தொட்டு ஒரே மாதிரியாக இருந்து […]

மேலும்....

இறப்பு எல்லைக்குச் சென்று மீண்டவர் !- வி.சி.வில்வம்

பா.தட்சிணாமூர்த்தி ! சென்னை மற்றும் பல மாவட்டத் தோழர்களில் இந்தப் பெயரை அறியாதவர்கள் இருக்க முடியாது! ஒருமுறை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள், “இயக்கத்திற்காக உயிரைக் கொடுப்பேன் என்று சிலர் சொல்வார்கள், உண்மையிலேயே உயிரைக் கொடுத்து, மீண்டு வந்தவர் பா.தட்சிணாமூர்த்தி”, என்று சொன்னார்கள்! இயக்க மகளிர் வாழ்க்கை குறித்து ‘விடுதலை’ ஞாயிறு மலரிலும், இயக்க ஆண்கள் குறித்து ‘உண்மை’ இதழிலும் கட்டுரைகள் வருவதைத் தோழர்கள் அறிவார்கள்! அந்த வகையில் தற்போது ஆவடி மாவட்ட […]

மேலும்....

தாழ்த்தப்பட்டோர் முன்னேற வழி

“ஆதிதிராவிட மக்களாகிய நீங்களும் மனிதர்களேயாயினும் சமூக வாழ்க்கையில் மிருகங்களைவிடக் கேவலமாகத்தான் நடத்தப்படுகின்றீர்கள் என்பதை நீங்களே ஒப்புக்கொள்வீர்கள் என்று நம்புகின்றேன். உங்களுக்குள் சிலர் ராவ்பகதூர்களாயும், ராவ்சாகிப்களாயும், மோட்டார் வாகனங்களிலும், கோச்சுகளிலும் செல்லத்தக்க பணக்காரர்களாயும் இருக்கலாம். மற்றும் உள்ளூர் ஞானமுள்ள அறிவாளிகளும், படிப்பாளிகளுமிருக்கலாம். எல்லாவற்றிருந்தாலும் அத்தகையவர்களையும் பிறந்த ஜாதியையொட்டித் தாழ்மையாகத்தான் கருதப்பட்டு வருகின்றதென்பதை நீங்கள் மறுக்கமாட்டீர்கள். அதற்கு ஒரே ஒரு காரணந்தான் இருக்கிறதென்று சொல்ல வேண்டும். அது ஜாதி வித்தியாசக் கொடுமையேயாகும். ஆதிதிராவிடர்கள் என்றால் கோயிலருகிலும் வரக்கூடாதென்கிறார்கள். இப்பொழுது ஒரு […]

மேலும்....

சிந்தித்து முடிவெடுங்கள்!

ஜாதி முறைகள் என்பவை எல்லாம் இந்து மதத்தினுடைய சிருஷ்டியேயாகும். இந்துக் கடவுள்கள் பெயராலும், சாஸ்திரங்கள் பெயராலுமேதான் அவை நிலை நிறுத்தப்படுகின்றன. பகுத்தறிவற்ற சில சமுதாய சீர்திருத்தக்காரர் என்பவர்கள் இப்படிப்பட்ட கடவுள் மத சாத்திரங்களுக்கும், இந்து மதத்திற்கும், வேதாந்தமும், தத்துவார்த்தமும் சொல்லி இதை ஏற்படுத்தினவர்களுக்கு நல்ல பிள்ளைகளாக ஆவதற்கு முயற்சிப்பார்கள். இந்த அறிவீனமும், மோசமும், தந்திரமும் ஆன காரியங்களால் தாங்கள் மாத்திரம் மரியாதையடையலாமே தவிர, சமுதாயத்தின் இழிநிலையைப் போக்க ஒரு கடுகளவும் பயன்படாது. ஆகையால், உங்களுக்கு முதலாவதாக நான் […]

மேலும்....

பிறப்புரிமை சுயராஜ்யமா ? சுயமரியாதையா ? – … தந்தை பெரியார் …

நமது நாட்டில் உள்ள பொதுமக்கள் ஒருவருக்கொருவர் தங்கள் சூழ்ச்சிகளாலும் தந்திரங்களினாலும் ஒருவரையொருவர் இழிவுபடுத்தியும் அடிமைப்படுத்தியும் கொடுமை செய்து வருவதன் பலனாய், அந்நிய அரசாங்கத்தின் கீழ் ஆளப்பட்டு துன்பமடைந்து வருகிறோம். இத்துன்பம் நமக்கு ஒழிய வேண்டுமானால் நாம் பிறரைச் செய்யும் துன்பம் ஒழிய வேண்டும். அந்நிய அரசாங்கத்தார் நம்மைச் செய்யும் கொடுமையை ஒரு தட்டில் வைத்து, நம் நாட்டில் சிலர் நமக்குச் செய்யும் கொடுமையையும் நம்மைக் கொண்டு மற்றவர்களைச் செய்யச் செய்யும் கொடுமையையும் ஒரு தட்டில் வைத்துத் தூக்கிப் […]

மேலும்....