பிரியங்கா கணிப்பு நூற்றுக்கு நூறு சரி-ஆசிரியர் பதில்கள்

1.கே: குறைந்த பட்ச செயல் திட்டங்களைக் கூட வரையறுக் காமல் பா.ஜ.க.வை அய்ந்து ஆண்டுகள் ஆள, நிதீஷ் அவர்களும் சந்திரபாபு நாயுடு அவர்களும் துணை நிற்பது அவர்களுக்கே கூட கேடாக முடியும் அல்லவா?  – எல். வேலாயுதம், குடியாத்தம். ப : அதை உணரவேண்டியவர்கள் நீண்டகாலம் காத்திருக்க வேண்டியதில்லை. வெகு விரைவிலேயே உணரும் நிலை ஏற்பட்டால் அது வியப்புக்குரியதாகாது! 2. கே: பா.ஜ.க.வை கட்டுக்குள் வைக்காமல், அய்ந்து ஆண்டுகள் முழுமையாக ஆளவிட்டால் மற்ற கட்சிகளை உடைத்து, குதிரை […]

மேலும்....

இயக்க வரலாறான தன் வரலாறு (341)- கி.வீரமணி

திருச்சி பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் பொன்விழா! சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் பயிலகம் சார்பாக, தமிழ்நாடு தொழில் கல்வி பயிற்சி வகுப்பு தொடக்கவிழா 26.3.2005 அன்று காலை அன்னை மணியம்மையார் மன்றத்தில் நடந்தது. பயிற்சி வகுப்பை நாம் தொடங்கி வைத்து உரையாற்றினோம். அப்போது “ஒவ்வொரு மாணவர்களும் கடுமையாக உழைத்துப் படிக்க வேண்டும். நல்ல நேரம் கெட்ட நேரம் என்று பாராது எல்லா நேரங்களிலும் கல்விக்கு முன்னுரிமை தந்து உழைக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டோம். கோயம்புத்தூர் […]

மேலும்....

நாடு முழுவதும் ஒன்றிணைந்து போராடுவோம்! கேடு தரும் ‘நீட்’ தேர்வை ஒழிப்போம்!

ஆரிய பார்ப்பனர்கள், சமூகநீதியை எப்படியெல்லாம் வளைத்து தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட, மற்ற மக்களின் உரிமைகளைப் பறிப்பர் என்பதற்கு நீட் தேர்வும், பொருளாதார அடிப்படையில் முற்பட்டோருக்கு இடஒதுக்கீடும் சரியான சான்றுகள் ஆகும். ஒன்றியத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோதே ஆதிக்கம் செலுத்தியவர்கள், தற்போது பி.ஜே.பி. ஆட்சியில் முழுமையாக தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தி வருகின்றனர். நீட் தேர்வைக் கொண்டு வந்த இந்த ஆதிக்கக் கூட்டம், பழியை தி.மு.க.வின்மீது போடும் மோசடியையும் தொடர்ந்து செய்து வருகின்றனர். காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தி.மு.க. […]

மேலும்....

தாழ்த்தப்பட்டோர் முன்னேற வழி

“ஆதிதிராவிட மக்களாகிய நீங்களும் மனிதர்களேயாயினும் சமூக வாழ்க்கையில் மிருகங்களைவிடக் கேவலமாகத்தான் நடத்தப்படுகின்றீர்கள் என்பதை நீங்களே ஒப்புக்கொள்வீர்கள் என்று நம்புகின்றேன். உங்களுக்குள் சிலர் ராவ்பகதூர்களாயும், ராவ்சாகிப்களாயும், மோட்டார் வாகனங்களிலும், கோச்சுகளிலும் செல்லத்தக்க பணக்காரர்களாயும் இருக்கலாம். மற்றும் உள்ளூர் ஞானமுள்ள அறிவாளிகளும், படிப்பாளிகளுமிருக்கலாம். எல்லாவற்றிருந்தாலும் அத்தகையவர்களையும் பிறந்த ஜாதியையொட்டித் தாழ்மையாகத்தான் கருதப்பட்டு வருகின்றதென்பதை நீங்கள் மறுக்கமாட்டீர்கள். அதற்கு ஒரே ஒரு காரணந்தான் இருக்கிறதென்று சொல்ல வேண்டும். அது ஜாதி வித்தியாசக் கொடுமையேயாகும். ஆதிதிராவிடர்கள் என்றால் கோயிலருகிலும் வரக்கூடாதென்கிறார்கள். இப்பொழுது ஒரு […]

மேலும்....

இந்தியா கூட்டணி லட்சியப் போரில் மக்களைத் திரட்டி வெல்ல வேண்டும் !

பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (பா.ஜ.க. – தெலுங்கு தேசம் – அய்க்கிய ஜனதா தளம் முதலிய இரண்டு பிரதான கட்சிகள் மற்றும் சில கட்சிகளின் உறுப்பினர்களைக் கொண்ட) புதிய அமைச்சரவை கடந்த 9.6.2024 அன்று பதவியேற்றுள்ளது. பா.ஜ.க., தேர்தல் பிரச்சாரத்தின்போது 400 இடங்களைப் பிடிப்போம்; 370 தொகுதிகளுக்குமேல் பா.ஜ.க. தனித்து வெற்றி பெறுவது உறுதி என்று மேடைதோறும் பேசினர். 2019 இல் பா.ஜ.க. பெற்ற இடங்கள் 303. 2024 இல் – தற்போதுள்ள […]

மேலும்....