பார்ப்பான் பிழைப்புக்கு – உயர்வுக்கே இந்து மதச் சடங்குகள்- தந்தை பெரியார்

எங்கள் கருத்து நம் மக்களுக்குப் புதுமையாகவும் தோன்றும்; சில சமயங்களில் கசப்பாகவும் இருக்கலாம். காதணி விழா என்பது காது குத்தி நகை போடுவதாகும். இந்தக் காதணி விழாவானது உலகிலேயே இந்துக்கள் என்று சொல்லப்படும் நமக்குத்தான் ஆகும். எந்த முறையில் நமக்கு இது சம்பந்தப்பட்டு உள்ளது என்றால், மத சம்பந்தமான கருத்தில்தான் ஆகும். உலகில் ஒவ்வொரு மதக்காரர்களுக்கும் ஒவ்வொரு அடையாளமுண்டு. ஆனால், கிறித்துவ மதக்காரர்களுக்குப் பார்த்ததும் கண்டுகொள்ளும் படியான அடையாளம் இருக்காது. இஸ்லாமியர்களுக்குச் சில அடையாளம் இருக்கின்றது. அதுபோலத்தான் […]

மேலும்....

ஒழுக்கம் உண்டாக கடவுளைப் புறக்கணி !- தந்தை பெரியார்

ஒரு குழவிக் கல்லுக்கு 1000 மனைவிகள் இருக்கலாம். 10,000 தாசிகளும் இருக்க லாம்; இருந்தாலும் அதைத் தெய்வம் என்று தொழுவார்கள். நமது முதன் மந்திரியார்(ராஜாஜி) அன்றாடம் போற்றிப் புகழ்ந்துவரும் ராமபிரானின்தந்தை தசரதருக்கோ ஒன்றல்ல ஆயிரமல்ல 60 ஆயிரம் மனைவியர்கள் இருந்தாலும் இராமாயணம் ஒரு பக்தி நூலாகக் கருதப்படும். கீதையை உபதேசித்த கிருஷ்ணனுக்கோ 10 ஆயிரம் மனைவியர்! 1 லட்சம் வைப்பாட்டிகள்.இவ்வளவு மோசமாக இருந்தாலும் கிருஷ்ணனு டைய நடத்தை, இதற்காக கீதை படிப்பவர் யாரும் வெட்கப்பட மாட்டார்கள். ஏன்? […]

மேலும்....

திராவிடர்களை இழிவுபடுத்தவே தீபாவளி!-தந்தை பெரியார்

தீபாவளிக் கதை பற்றி சுமார் 10 வருடங்களுக்கு மேலாக எழுதியும் பேசியும் வருகிறேன். ஆதலால் விரித்து எழுத வேண்டியதில்லை; என்றாலும் குறிப்பு கொடுக்கின்றோம். தீபாவளிக் கதை மிகவும் அதிசயமானதும், ஆபாசமானதும், இழிவும், ஈனத் தன்மையும் பொருந்தியதாகும். பார்ப்பனர் சாபமாம்! மகாவிஷ்ணுவுக்கு வாயில் காப்பாளராக இருந்த இரு காவலர்கள் உத்தரவின்றி உள்ளே விட மறுக்கப்பட்ட இரண்டு பார்ப்பனர்கள் சாபத்தால் இரணியன் – இரண்யாட்சன் என்ற இரண்டு ராட்சதர்களாகப் பிறந்து விஷ்ணுவால் கொல்லப்பட்டு சீக்கிரம் மோட்சமடைய வேண்டுமென்று ஏற்பட்டுவிட்டதற்கிணங்க மூத்தவன் […]

மேலும்....

மனிதன் முன்னேற்றத்திற்கு கடவுள் கொள்கையே தடை !- தந்தை பெரியார்

நான் பேசும் விஷயம் உங்கள் மனதிற்குத் திருப்தியாய் இருக்காது. ஆனாலும் உங்கள் மனதைப் புண்படுத்த வேண்டும் என்று நான் பேச வரவில்லை. ஆனால், இதன் பயன் என்ன என்று யோசித்துப் பார்க்கும்படி கேட்டுக்கொள்ளவே நான் சில விஷயங்களைப் பேசுகின்றேன். இன்றைய உற்சவமும், கொண்டாட்டமும் என்ன கருத்தைக் கொண்டது? சுப்பிரமணியசாமிக்கு கல்யாணம்; கல்யாணம் செய்து கொண்ட சாமி தேர்மீது ஊர்கோலம் வருகின்றார். இதற்காக இத்தனை ஆயிரம் ஜனங்கள் வீடு, வாசல், வேலை, வியாபாரம் முதலியவைகளை விட்டுவிட்டு வந்து இன்று […]

மேலும்....

எனது ஆதரவு இதன் அடிப்படையில்தான் – தந்தை பெரியார்

நான் 1920இல் காங்கிரசில் சேர்ந்தேன். அதற்கு முன்பு 1900 முதல் பார்ப்பனரல்லாதவர் நல உணர்ச்சி கொண்டவனாக இருந்து வந்தேன். நான் 1900-க்கு முன்னே கடவுள், மத, ஜாதி விஷயங்களின் நம்பிக்கை இல்லாதவனாகவே இருந்து வந்தேன். நான் அக்காலத்தில் சிறிது செல்வாக்குள்ள குடும்பத்தவனாகவும் வியாபார விஷயத்தில் ஈடுபடுபவனாகவும் இருந்து வந்ததால் யாரிடமும் தர்க்கமும், விவகாரமும் பேசுவதில் பிரியமும் உற்சாகமும் உடையவனாக இருந்து வந்தேன்; மாடு – எருமை கன்று போட்ட நேரங்களைக் குறித்து வைத்துக்கொண்டு ஜோசியர்களிடம் கொடுத்து ஜோசியம் […]

மேலும்....