பெருந்தலைவர் காமராசர்!

கல்விக்கண் திறந்தவரே காமராசர்! கற்காத மேதையிவர்; கரும வீரர்; எல்லார்க்கும் இலவசமாய்க் கல்வி தந்தார்! இந்நாட்டின் மேன்மைக்கே உழைத்து வந்தார்! பண்பாளர் மூன்றுமுறை முதல்வர் ஆனார்! பகலுணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார்! ஒன்பதாண்டுச் சிறையினிலே கழித்தார்! நாட்டின் ஒப்பற்ற விடுதலைக்கே பாடு பட்டார்! அணைக்கட்டுப் பற்பலவும் அமைக்க லானார் அனைவரது பாராட்டும் புகழும் பெற்றார் இணக்கமுற வேளாண்மைத் தொழிலுக் காக ஏற்புடைய நீர்வளத்தைப் பெருக்க லானார்! எளிமைக்கும் நேர்மைக்கும் எடுத்துக் காட்டாய் என்றென்றும் திகழ்ந்தவரே காம ராசர்! […]

மேலும்....

பானகல் அரசர்

பன்னரும் புகழ்மிகு பானகல் அரசர் முன்னர் திராவிடர் கழகம் சேர்ந்து பின்னர் நீதிக் கட்சியில் இணைந்தார்! சென்னை மாநில இரண்டாம் முதல்வராய் ஆட்சியும் புரிந்தார்! நீதிக் கட்சிஉள் ளாட்சித் துறையில் அமைச்சரும் இவரே! பறையர் தலித்தென அழைத்தல் வேண்டா! நிறைவாய் ஆதி திராவிடர் என்னும் பெயரினைச் சட்டம் ஆக்கினார்! மகளிர் நயத்தகு வாக்கு உரிமை வழங்கினார்! இன்புற இந்திய மருத்துவக் கல்லூரி சென்னை நகரில் தொடங்கினார்; மருத்துவக் கல்வித் தகுதியில் சமற்கிரு தத்தை வல்லவர் நீக்கியே சட்டம் […]

மேலும்....

மான உணர்வும் ஒற்றுமையும் பார்ப்பனரல்லாதார்க்கு வேண்டும்! … குமரன் தாஸ் …

திராவிட இயக்கத்தை எதிர்த்துத் தாக்குதல் தொடுக்கும் நிலைக்கு வந்து விட்ட சூழலில், திராவிட இயக்கம் தற்காப்பு நிலை எடுக்க வேண்டியதாகிவிட்டது. அதேசமயம் ஆட்சிக் கட்டிலில் திராவிடச் சிந்தனை கொண்டவர்கள் (பார்ப்பனரல்லாதார்)100 சதவிகிதம் அமர்ந்து விட முடிந்தபோதும், அரசு அதிகாரிகளாகத் தங்களது மக்கள் தொகைக்கு ஏற்ப, உரிய எண்ணிக்கையில் முழுமையாக இதுவரை அமர முடியவில்லை என்பதோடு, அவ்வாறு அதிகாரத்தில் போய் அமர்பவர்களில் நமது தமிழ்ச் சமூகம் முதன்மையாகப் பார்ப்பனர் X பார்ப்பனரல்லாதார் எனப் பிரிந்து முரண்பட்டு இயங்கி வருவதை […]

மேலும்....

அறிவியல் வளர்ச்சியும் மதங்களின் வீழ்ச்சியும் !… சரவணா இராஜேந்திரன் .

ஆன்மிகம் தொடர்பான திரைப்படங்கள் உலகம் முழுவதும் அவ்வப்போது வெளி வந்துகொண்டே இருக்கின்றன. ஆன்மிகப் படங்களை எடுக்கக்கூட கடவுள் மறுப்புக் கொள்கையைக் கொண்ட அறிவியல் சாதனங்கள் தான் உதவுகின்றன என்பது அனைவரும் அறிந்ததே. திரைப்பட நெகடிவ் ஃபிலிம் சுருளில் சிறியதாக இருக்கும் உருவங்களைப் பெரிய திரையில் பெரியதாக விழச்செய்து அசையும் மெய்ப்பிம்பங்களாக மாற்றிக் காண்பிக்கும் கருவியான புரொஜெக்டரைக் கண்டுபிடித்த எட்வியர்ட் மைபிரிட்ஜ் கடவுள் மறுப்புக் கொள்கை கொண்டவர் தான். இங்கிலாந்தின் கிங்ஸ்டன் பகுதியில் பிறந்த அவர் சிறு வயதாக […]

மேலும்....

ஜெர்மன் அறிஞர்கள் கலந்துகொண்ட பகுத்தறிவாளர் கருத்தரங்கம்.-கி.வீரமணி

திராவிடர் கழகமும் சமூக நீதி மய்யமும் இணைந்து நடத்திய சமூக நீதிக் கருத்தரங்கு சென்னை பெரியார் திடலில் 8.5.2005ஆம் தேதி காலை 10 மணிக்குத் தொடங்கி நடந்தது. தேசிய சமூக நீதி மய்யத் தலைவர் சந்திரஜித் யாதவ் தலைமை வகித்தார். நாம் அனைவரையும் வரவேற்றுப் பேசினோம். பகல்பூர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதஞ்சலி, துணைத் தலைவர் எம்.கே. சைனி, கர்நாடக மாநில உயர்நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் ரவிக்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்நிகழ்ச்சியில் இந்தியா முழுவதிலுமிருந்து திரளான போராளிகள் கலந்து […]

மேலும்....