சாமி ஊர்வலம்

வழிநெடுகிலும் வைக்கப்பட்டிருந்த பதாகைகளைப் பார்த்து, கடும் எரிச்சலுடன் தனது இரு சக்கரவண்டியை ஓட்டியபடியே மேலூரைக் கடந்து தனது ஊரான கீழூரை நோக்கி வந்துகொண்டிருந்தான் குமார். மேலூரில் சாமி ஊர்வலத்திற்காக வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகைகளைப் பார்த்துதான் கோபம் கொண்டான் குமார். ‘‘நாம் மேலூர் காரன்களைவிட உயர்ந்த ஜாதி. நம்மைவிட இவனுங்க பெரிசா சாமி ஊர்வலம் நடத்துவதா? விடக்கூடாது. இவனுங்களைவிட நம்ம ஊரில் சிறப்பா செய்யணும்’’ என்று எண்ணியவாறே ஊரையடைந்தான் குமார். வந்தவுடனே அவன் தனது நண்பர்கள் சிலரை அழைத்தான். […]

மேலும்....

இறுதி ஆசை- இரா. அழகர்

இங்க உயர்ஜாதிக்காரங்களுக்கு பிரச்சனைன்னா நம்மை தமிழரா ஒன்னு சேத்து போராடக் கூப்பிடுவாங்க. அதுவே நமக்கு பிரச்சினைனா யாரும் தமிழரா இல்லாம ஜாதியா பிரிஞ்சுடுவாங்க. தனது தாத்தா வீட்டில் நுழைவதைக் கண்ட விக்னேஷ் துள்ளிக் குதித்து ஓடி வந்தான். விக்னேஷ்க்கு வீட்டில் அப்பா, அம்மா, தம்பியைவிட தாத்தாவை ரொம்பப் பிடிக்கும். காரணம், சிறு வயதில் இருந்தே தாத்தாவின் அரவணைப்பிலேயே வளர்ந்ததே காரணம். தன் பேரனின் உற்சாகத்தைக் கண்ட சுடலை என்கிற சுடலையாண்டி வாங்கி வந்த தின்பண்டக் கவரை பேரனிடம் […]

மேலும்....

மனிதப் பற்று…- ஆறு.கலைச்செல்வன்

‘‘பணவெறி இன்னும் உன்னை விட்டுப் போகவே இல்லையா? ஏன் இப்படி காசு காசுன்னு அலைஞ்சுகிட்டு இருக்க. சம்பாதிக்கிற பணத்தை வைச்சிக்கிட்டு நிம்மதியா இருக்கக் கூடாதா?’’ என்று தனது நண்பர் நீதிராஜனிடம் கேட்டார் பாலுசாமி. ‘‘எனக்கு உன்னைப் போன்ற நிலைமை இல்லையே! உன்னோட மூன்று மகன்களும் வெளிநாட்டில் வேலை செய்றாங்க. அதனால உனக்குப் பணக்கஷ்டம் எதுவும் இல்லை. ஆனால், என் நிலைமை அப்படி இல்லையே! என் இரண்டு பிள்ளைகளும் இங்கேயே வேலை செய்துகொண்டு சுமாரான சம்பளத்தில்தானே பணியில் இருக்காங்க. […]

மேலும்....

எதிரொலி- நாத்திகன்

டும் டும் டும்… என்ற பறைஓசை சத்தத்துடன்… இதனால் ஊர்ப் பொது மக்களுக்கு ஓர் அறிவிப்பு என்னவென்றால், வருகின்ற ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணியளவில் மந்தைவெளி அம்மன் கோவில் தர்மகர்த்தா, கோவில் பூசாரி, சிவன் கோவில் அர்ச்சகர் ஆகியோர் தலைமையில், ஆடி மாதம் மூன்றாவது வாரம் அம்மனுக்குக் காப்பு கட்டுதல், கூழ் ஊற்றுதல், மற்றும் தீ மிதித்தல் விழா சம்பந்தமாக கோவில் அருகில் உள்ள வேப்ப மரத்தடியில் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற இருப்பதால் ஊர் பொதுமக்கள் கலந்துகொள்ளுமாறு […]

மேலும்....

பிறந்த நாள் பரிசு – ஆறு. கலைச்செல்வன்

“ஏங்க, பென்ஷன் பணம் வந்துடுச்சா? பேத்தியோட பொறந்த நாள் வருது. துணிமணியெல்லாம் எடுக்கணும். எப்ப போறது?” ஓய்வு பெற்ற அரசு அலுவலரான கோபாலிடம் கேட்டார் அவரது இணையர் சரோஜா. “பென்ஷன் வந்துடுச்சி. ஆனா, போன மாசம் வாங்கின கடனைக் கொடுக்கணுமே. அதோட இந்த மாசம் திருச்செந்தூர் வர்றதா வேண்டிக்கிட்டு இருக்கேன். எதுக்கும் பணம் பத்தாது. இந்த மாசமும் கடன் வாங்க வேண்டியதுதான். இந்த லட்சணத்தில் பேத்திக்கு எப்படி நல்ல துணிமணியெல்லாம் எடுக்கிறது?” என்று சலிப்புடன் சொன்னார் கோபால். […]

மேலும்....