கலைஞர் நினைவு நாள் சிறப்புக் கட்டுரை

 திரைத்துறை வழி சமுதாய சீர்திருத்தம் செய்த கலைஞர் குமரன் தாஸ்  கலைஞர் தனது 24ஆவது வயதிலிருந்து 87ஆவது வயதுவரை கிட்டத்தட்ட 65 ஆண்டுகள் தொடர்ந்து கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு என ஈடுபட்டு வந்துள்ளார். அந்த வகையில் தனது சமூக, அரசியல் செயல்பாட்டின் ஓர் அங்கமாகவே சினிமா பங்களிப்பையும் கருதியுள்ளார் என்பதை அவரது தொடர் செயல்பாடும், ஈடுபாடும் நமக்கு உணர்த்துகின்றன. சிலர் கலைஞரை ஆட்சிக் கட்டிலில் இல்லாத காலகட்டங்களில் எழுத்து, சினிமா என இயங்கியவராகக் குறிப்பிடுவர். ஆனால், […]

மேலும்....

சிறுகதை : எரிதழல் கொண்டு வா

கவிப்பேரரசு வைரமுத்து அணைப்பட்டியில் செங்கற்சூளைத் தொழில் செய்யும் முள்ளுமூக்கன் விளாம்பட்டி காவல் நிலையத்துக்குள் சுற்றியடிக்கும் சூறாவளிபோல் புகுந்தான் _ தன் சுற்றம் சூழ. அவன் நெஞ்சு பதறியது; வாய் குழறியது. “அய்யா… இன்ஸ்பெக்டர் அய்யா… எம் மகளக் காணோம். எங்க வம்சத்துக்கே ஒரே ஒரு பொட்டப்புள்ள. காலேசுக்குப் போனபுள்ள வியாழக்கெழமையிலருந்து வீடுதிரும்பல. எங்கெங்க தேடியும் காங்கல. வீடே எழவு வீடாக் கெடக்கு. ஊரு எரியுது தீப்புடிச்சு. எங்க மானம் மருவாதி உசுரு எல்லாம் உங்க கையிலய்யா’’. பென்சிலால் […]

மேலும்....

இயக்க வரலாறான தன் வரலாறு(231) : அமெரிக்காவில் வெள்ளை மாளிகை முன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டேன்

அய்யாவின் அடிச்சுவட்டில்… கி.வீரமணி சென்னை பெரியார் திடலில் உள்ள, பெரியார் நகர குடும்ப நல மய்ய ஸ்டோர் கீப்பர் மற்றும் க்ளார்க்காகப் பணியாற்றி தற்போது பெரியார் மணியம்மை மருத்துவ மனையின் மேலாளராகப் பணியாற்றும் கோ.குணசேகரன்-சாந்தி வாழ்க்கை ஒப்பந்த விழா பெரியார் திடலில் 20.4.1988 அன்று நடைபெற்றது. விழாவில் நான் பங்கேற்று வாழ்க்கை ஒப்பந்தத்தை சிறப்பாக நடத்தி வைத்தேன். அப்போது, நான் உரையாற்றுகையில் ‘‘நல்ல உதாரணமாக, நம்பிக்கைக்கும், பொறுப்புணர்ச்சிக்கும் எடுத்துக்காட்டாக இருக்கக் கூடியவர் மணமகனாக அமைந்திருக்கின்ற அருமை குணசேகரன் […]

மேலும்....

சிந்தனை : சாதிகளை உருவாக்கிய சதிகாரர்கள்

கல்லப்பாடி க.பெ.மணி சாதியின் பெயரில் எத்துணை எத்துணை ஆணவக் கொடுமைகள் நாள்தோறும் நமது நாட்டில் நடந்து வருகின்றன என்பதை ஊடகங்கள் உலகத்தார்க்கு படம்பிடித்துக் காட்டிவருகின்றன. எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போன்று 30.4.2019 தேதியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் பக்கம் 6இல் கிராமங்களில் நிகழும் தீண்டாமையைப் பற்றிய செய்தி வெளியாகி உள்ளது. அதாவது தமிழ்நாட்டில் உள்ள சுமார் 20 மாவட்டங்களில் உள்ள 646 கிராமங்களில் தீண்டாமை மிகக் கொடூரமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்ற செய்தியைப் படிக்கும்போது நமது நாட்டின் முன்னேற்றம் […]

மேலும்....

செய்திச் சிதறல்கள்

மின்னல் தாக்குவதால் அதிக சேதங்களை அடிக்கடி சந்திக்கும் பகுதி அமெரிக்காவின் ஃபுளோரிடா. ****** தபால் தலை உலகின் முதல் தபால் தலையில் இடம் பெற்ற படம் விக்டோரியா ராணி. இதை வடிவமைத்தவர் ரோலண்ட் ஹில். 1840இல் வெளியான இதன் பெயர் பென்னி பிளாக். மதிப்பு ஒரு பென்னி. இந்தியாவில் 1834இல் முதல் தபால்தலை வெளியானது. அதிலும் விக்டோரியா ராணியின் தலைப்படமே இடம் பெற்றது. தபால் பில்லைகளில் தலைப்படமே இடம் பெற்று வந்ததால், அது தபால் தலை ஆயிற்று. […]

மேலும்....