மத்திய அரசிடம் அடமானம் வைக்கப்பட்ட தமிழக உரிமைகளை மீட்கவேண்டும்!

தமிழ்நாடு பெரியார் (திராவிட) மண் என்பது உறுதிப்படுத்தப்பட்டது! தமிழர் தலைவர் பேட்டி 25.5.2019 அன்று சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது, தமிழகம் பெரியார் மண் – திராவிட பூமி! திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில், நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில், இந்தியாவினுடைய மற்ற பகுதிகளிலிருந்து தமிழ்நாடு மாறுபட்ட ஒன்று. அதிலும் குறிப்பாக இது பெரியார் மண் _ திராவிட பூமி. இந்த  பூமியில் […]

மேலும்....

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள் தந்தை பெரியார் நினைவிடத்தில் மரியாதை

தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில், வெற்றி பெற்ற நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று (25.5.2019) காலை பெரியார் திடலுக்கு வருகை தந்து தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். முன்னதாக அவர்களை தமிழர் தலைவர் ஆசிரியர் வரவேற்று பயனாடை அணிவித்து பெரியார் நூல்களை வழங்கி சிறப்பித்தார். தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், 25.5.2019 காலை 10.30 மணியளவில் சென்னையில் […]

மேலும்....

சமூக நீதிக்கான சங்கநாதம் விடுதலை நாளேடு! இன உணர்வுக்கான இடியோசை விடுதலை நாளேடு! ஜாதி மத, மூடநம்பிக்கைகளை உடைத்துத் தள்ளி, பகுத்தறிவு சமநிலத்தைப் பாரில் நிலைக்க வைக்கும் புல்டோசர் விடுதலை நாளேடு! பொது உரிமை, பொதுவுடைமைக் கொள்கைகளை திசையெட்டும் சேர்க்கும்

கி.வீரமணி  சமூக நீதிக்கான சங்கநாதம் விடுதலை நாளேடு! இன உணர்வுக்கான இடியோசை விடுதலை நாளேடு! ஜாதி மத, மூடநம்பிக்கைகளை உடைத்துத் தள்ளி, பகுத்தறிவு சமநிலத்தைப் பாரில் நிலைக்க வைக்கும் புல்டோசர் விடுதலை நாளேடு! பொது உரிமை, பொதுவுடைமைக் கொள்கைகளை திசையெட்டும் சேர்க்கும் புதிய தூதுவன் விடுதலை நாளேடு! அடக்கு முறைகளைச் சந்தித்த ஏடு ஊமைகளாய், ஆமைகளாய் வாழும் மனிதர்களாம் நம் ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் போர்க் குரலாய் – உரிமை முழக்கமாய்த் திகழுவது நமது விடுதலை நாளேடு! பெண்கள் […]

மேலும்....

திராவிட இயக்கத்தின் முன்னோடி என்.வி. நடராசன்

என்.வி.நடராசன் பிறப்பு: 12.06.1912 இந்தி எதிர்ப்பு உணர்வு இவரைத் திராவிட இயக்கத்தின்பால் ஈர்த்தது. இவரது இணையர் புவனேசுவரி அம்மையார் 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கைக்குழந்தையுடன் (என்.வி.என். சோமுதான், அந்தக் கைக்குழந்தை  பிற்காலத்தில் மத்திய இணை அமைச்சராக இருந்தவர்) சிறைக்கோட்டம் சென்றவர். திராவிடன் என்னும் இதழை நடத்தி வந்தார். தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர், தலைமை நிலைய செயலாளர் என்னும் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நாளும் உழைத்தவர். இந்தி எதிர்ப்பு உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு சிறை பல சென்றவர். […]

மேலும்....

நிகழ்வுகள் : நினைவேந்தல் படத்திறப்பு

 தன் பெயரின் அடைமொழிக்கு ஏற்ப கடந்த 60 ஆண்டுகளாக தமிழ் பணியாக சிலப்பதிகாரத்தைப் பட்டிதொட்டியெல்லாம் அயராது அரும்பாடுபட்டு பரப்பி வந்தவர். 1975ஆம் ஆண்டு சிலப்பதிகாரம் பற்றி முழுமையான ஆய்வு நூலை எழுதி ‘சிலம்பொலி’ என்ற தலைப்பில் வெளியிட்டார். அதன் பின்னர் சிலம்பொலி செல்லப்பனாகிறார். அவருக்கும் பெரியார் இயக்கத்துக்குமான தொடர்பு நெடியது.  அவர் 6.4.2019 அன்று இறந்துபட்டார். அவருக்கு நினைவேந்தல் – படத்திறப்பு நிகழ்ச்சி 16.5.2019 மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு சிலம்பொலி செல்லப்பனார் […]

மேலும்....