பெரியார் பேசுகிறார் : சமுதாயத் தொண்டுக்கு எந்தப் பற்றுமே இருக்கக் கூடாது

தந்தை பெரியார் உலகில் வேறு எங்குமே இதுபோன்ற சமுதாயத்தில் மேல், கீழ், உயர்வு, தாழ்வு கிடையாது. காரணம் அவர்களிடையே புகுத்தப்பட்ட கடவுள், மத தருமத்தில் இதுபோன்ற இழிவு புகுத்தப்படவில்லை. அவர்கள் பின்பற்றுகிற மதம், கடவுள் கொள்கைகள் மனிதனைச் சமமானவனாக்கக் கருதும்படியானதால் அதில் ஏற்றத்தாழ்விற்கு இடமில்லாமலிருக்கிறது என்பதோடு இங்கு போன்று பார்ப்பனர்கள் அங்கு இல்லாததும் பெரும் காரணமாகும். உலகிலேயே எடுத்துக் கொண்டால் சமுதாயத்துறையில், ரொம்ப தீவிரமாக இருப்பவர்கள் கொல்லப்படுவதும் வழக்கம். சில வெளியே தெரியலாம். பல தெரியாமல் இருக்கும். […]

மேலும்....

தலையங்கம் : சமுகநீதி, சட்டம், கூட்டாட்சிக்கு எதிரானது புதிய கல்விக் கொள்கை

‘‘தேசிய கல்விக் கொள்கை – 2019 வரைவு அறிக்கை என்ற கஸ்தூரி ரங்கன் குழு அறிக்கை’’ மொத்தம் 484 பக்கங்களை (ஆங்கிலத்தில்) கொண்டதாக உள்ளது. இம்மாதம் முதல்நாள் இது, பிரதமர் மோடி அவர்களது ஆட்சி (ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. ஆட்சி) பதவியேற்று ஒரு வாரத்திற்குள் வெளியிடப்பட்டுள்ளது. இதுபற்றிக் கருத்துக் கூறுவோருக்கு கொடுக்கப்பட்டுள்ள அவகாசம் 30 நாள்கள் – ஒரு மாதம். அதாவது ஜூன் 30 ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்று கால அவகாசத்தை மிகவும் நெருக்கித் தந்திருப்பதன் நோக்கத்தை […]

மேலும்....

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்

நினைவு நாள்: 27.06.1962 தேவதாசிகள் குலத்தில் பிறந்து அக்குல மங்கையரின் ஏற்றத் தாழ்வுகளை அறிந்து அவர்களின் குறைநீக்க தன்னை ஒப்படைத்துக் கொண்டவர் மூவலூரார். தந்தை குடும்பச் சுமை தாங்காமல் ஓடிவிட்டார். தாய் குழந்தையை வளர்க்கப் போதுமான வருமானம் இல்லாததால் 10 ரூபாய்க்கும் ஒரு பழம் புடவைக்கும் ஒரு தாசிக்கு குழந்தை இராமாமிர்தத்தை விற்றுவிட்டார். இதுதான் அம்மையாருடைய இளமைக்கால வரலாறு. திண்ணைப் பள்ளிக்கூட கல்வியறியும், சமுதாயம் தந்த இழிநிலையும், புரட்சிகர சிந்தனைகளும், தந்தை பெரியாரின் நட்பும் அம்மையாரின் வாழ்க்கையில் […]

மேலும்....

சமூக நீதிக்காவலர் வி.பி.சிங்

மண்டல் குழுப் பரிந்துரைகளுள் ஒன்றான பிற்படுத்தப்பட்டவருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு என்பதை அமுல்படுத்தினார். அதற்காகப் பிரதமர் பதவியையே தூக்கி எறிந்தவர். பார்ப்பனர் அல்லாத – உயர் ஜாதி சமூகத்தில் – அதுவும் மன்னர் குடும்பத்தில் பிறந்து சமூக நீதிக்காகப் பதவியை இழந்த சமூக நீதிக்காவலர். வி.பி.சிங் பிறந்தநாள் 25-06-1931

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா?

பகத்சிங் தூக்கிலிடப்பட்ட போது – ஆங்கிலேய அடக்குமுறைக்கு அஞ்சி, “தேச பக்தர்கள்” வாய்மூடிக் கிடந்த போது – பகத்சிங் செயலை பகிரங்கமாக ஆதரித்து 1931 இல் கட்டுரை தீட்டிய தலைவர் பெரியார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....