முற்றம் : வாசகர் மடல்

மானமிகு ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். சிந்தனைக்கு விருந்தளித்து, செயல்படுத்தத் தூண்டும் அரிய கட்டுரைகளைத் தாங்கி, பகுத்தறிவுக் கருவூலமாக வெளிவந்திருக்கும் ஜூலை 16-31 இதழில் படிப்போரின் சிந்தனையை முதலில் கவருவது, தங்களின் தலையங்கமே! வெறும் 3 விழுக்காடே உள்ள உயர்ஜாதியினருக்கு, 10 விழுக்காடு ஒதுக்கி இருப்பது மாபெரும் மோசடி. ‘இதுசமயம் தவறினால் மறுசமயம் வாய்ப்பது அரிது!’ என்று, காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள காரியமாற்றி வருகிறார்கள். அஞ்சல் துறைக்கான தேர்வை ஆங்கிலம், இந்தி மொழிகளிலேயே எழுத வேண்டுமென்கிற மத்திய […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள் : பொம்மலாட்டத்தின் புதுவகை இது!

கே:   கடந்த 30 ஆண்டுகளாக நடந்த மக்களவைத் தேர்தல்களைவிட 2019 மக்களவைத் தேர்தல் மிகவும் மோசமாக நடந்தது என்று மூத்த நீதிபதிகள் உள்பட பலர் கண்டனக் கருத்து தெரிவித்துள்ளது பற்றி தங்களின் கருத்து?                 – பெ.கூத்தன், சிங்கிபுரம் ப:     என் கருத்தென்ன? 64 ஓய்வுபெற்ற அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். அதிகாரிகளான பெருமக்களின் நீண்ட அறிக்கை, அது பெரிதும் ஊடகங்களில், ஏடுகளில் வராமல் _ பரவாமல் _ விவாதிக்கப்படாமலே இருட்டடிப்பும் செய்யப்பட்டதே! இதுதான் யதார்த்தம் புரிந்துகொள்வீர்! கே:  பெரியாரியவாதிகள், […]

மேலும்....

அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா? (49) : சாபத்தால் மனித முகம் குரங்கு முகமாகுமா?

சிகரம் முன்னொரு காலத்தில், நாரதரும் பர்வத மகரிஷியும் பூலோக சஞ்சாரம் செய்தனர். அப்போது அவர்களுக்குள் ஓர் உடன்பாடு ஏற்பட்டிருந்தது. அதாவது, தங்களுக்குள் ஒளிவு மறைவு எதுவும் இருக்கக் கூடாது என்பதுதான் அது. அவர்கள், சஞ்சயம் என்னும் நகரை அடைந்தனர். அவர்கள் அந்நாட்டு அரசனால் உபசரிக்கப்பட்டார்கள். மழைக்காலமாய் இருந்ததால் அவ்விருவரும் அரண்மனையிலேயே தங்கினார்கள். அவன், தன் மகளும் பேரழகியுமான தமயந்தி என்பவளை அவர்களுக்குப் பணிவிடைகள் செய்வதற்கு ஏற்பாடு செய்திருந்தான். நாரதரது வீணாகானத்தைக் கேட்டு இலயிப்புற்ற தமயந்திக்கு அவரிடம் ஈடுபாடு […]

மேலும்....

மருத்துவம் : உயிர் காக்கும் உப்பு, சர்க்கரைக் கரைசல்

நாம் பருகும் ஓஆர்எஸ் கரைசலில் சோடியம் குளோரைடு – 2.6 கிராமும், பொட்டாசியம் குளோரைடு – 1.5 கிராமும், ட்ரைசோடியம் – 2.9 கிராமும் உள்ளதாக மருத்துவ ஆய்வு வல்லுநர்கள் கூறுகின்றனர். பருகுபவர்களுக்கு எந்தவிதமான கெடுதலையும் உண்டாக்காதது ஓஆர்எஸ்; இது மருந்துக் கடைகளிலும், மருத்துவமனைகளிலும் கிடைக்கும். தூய்மையான முறையில் இந்த உப்பு மற்றும் சர்க்கரைக் கரைசலை நாமே தயாரிக்கலாம். ஓஆர்எஸ் தயாரிக்க 1 லிட்டர் சுத்தமான தண்ணீர், சர்க்கரை 6 தேக்கரண்டி (ஒரு தேக்கரண்டி – ஐந்து […]

மேலும்....

வரலாற்றுச் சுவடு : பெரியாரின் பேரறிவு

வ.க.கருப்பையா அது எப்படி சுத்தமாகும்? ஒரு சமயம், பெரியாரைப் பேட்டி காண வந்திருந்த ஒரு பத்திரிகை உதவி ஆசிரியருக்கு காபி கொடுக்கச் சொன்னார் பெரியார். காபியைச் சாப்பிட்ட உதவி ஆசிரியர், “இப்போது நான் உங்கள் வீட்டுக்கு வந்து, காபி சாப்பிடுகிறேன் பார்த்தீங்களா? போன தலைமுறையில் இப்படி நடந்திருக்குமா? நான் ஆசார பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவன்தான். இதற்கென்ன சொல்றீங்க?’’ என்றார் அந்த உதவி ஆசிரியர். அதற்குப் பெரியார், “இன்றைக்கு நீ என் வீட்டுக்கு வந்து காபி சாப்பிடுகிறாய் என்றால், […]

மேலும்....