ரோபோ டீ கடைக்காரர்

சீனாவில் ஷாங்காய் நகரில் முதன் முறையாக, மனிதர்கள் இல்லாமல் செயல்படும் தேநீர் கடை திறக்கப்பட்டுள்ளது. இந்தக் கடையில் ஒரு ரோபோ வாடிக்கையாளர்களுக்கு தேநீர் அளிக்கிறது. இங்கு டீ போன்ற பானங்களை வாங்க, அந்தக் கடையின் ஆப்பை பதிவுசெய்து, ஆர்டர் கொடுத்தால், அதற்கேற்ப தயாரித்துக் கொடுக்கும்.  

மேலும்....

சிறுகதை : திருந்திய திருமணம்

ஜூன் 30 விந்தன் நினைவுநாள் சிறப்புச் சிறுகதை விந்தன் கையிலிருந்த மூக்குக் கண்ணாடியைத் துடைத்துக் காதில் மாட்டிக் கொண்டு, சாளரத்துக் கீழே விழுந்து கிடந்த செய்தித்தாளை எடுத்துப் பிரித்தார் சிதம்பரம். “இந்தக் கதையைக் கேட்டீர்களா?’’ என்று அங்கலாய்த்துக் கொண்டே அவரை நோக்கி வந்தாள் அவருடைய மனைவி சிவகாமி. “ஊர்க் கதையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்க உனக்கு நான்தானா கிடைத்தேன்? போய் வேலையைப் பார்!’’ “இது ஒன்றும் ஊர்க்கதை இல்லை; உங்கள் வீட்டுக் கதைதான்!’’ “அது என்ன கதை?’’ “எல்லாம் […]

மேலும்....

பெண் யானைக்கும் தந்தம் உண்டு!

ஆசிய யானைகள் 11 அடி உயரம் கொண்டவை. ஆப்பிரிக்கா யானைகள் 13 அடி உயரம். ஆப்பிரிக்கா யானைகளில் ஆண், பெண் இரண்டுக்கும் தந்தம் இருக்கும். பெண் யானைகள் 15 – 20 வயதில் ஆரம்பித்து 55 வயதுவரை குட்டிகள் போடும். தனது வாழ்நாளில் 8 – 12 குட்டிகளை ஈன்றெடுக்கும். பிரசவ காலம் 18 – 22 மாதங்கள். பிறக்கும் குட்டி 90 – 125 கிலோ எடை இருக்கும். ஆண் குட்டி 9 அடி உயரமும், […]

மேலும்....

இயக்க வரலாறான தன் வரலாறு(228) : தம்மம்பட்டியில் என் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல்

அய்யாவின் அடிச்சுவட்டில்… கி.வீரமணி 25.08.1987 அன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்கூட்டத்திற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்திருந்தனர். ராஜிவ்_ஜெயவர்த்தனே ஒப்பந்தம் குறித்து பேச நான் சென்றிருந்தேன். என்றாலும், சங்கராச்சாரி ஓடிப் போனதுபற்றி மக்கள் அறிய ஆர்வங் காட்டியதால் அது குறித்து முதலில் பேசினேன். “காஞ்சி சங்கராச்சாரியார் பிரச்சினைக்கு மிகப் பெரிய முக்கியத்துவம் கொடுத்து பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இது என்ன அவ்வளவு முக்கியமான பிரச்சினையா? என்று கேள்வியை கேட்டுவிட்டு, பொதுமக்கள் கேட்ட கேள்விகளுக்கு விளக்கமளிக்கும் […]

மேலும்....

அறிவியலுக்கு அடிப்படை இந்துமதமா? (46) : வேதங்கள் மனித உருவங்கள் எடுக்குமா?

சிகரம் ‘‘கருணாமூர்த்தியான சூரியன் தன்னைத் துதிப்பவர்களுக்கெல்லாம் அருள் புரியும் தன்மையுடையவராவார். பலவித துக்கங்களினால் அவதிப்பட்டுத் தன்னை அடைக்கலம் அடைபவர்கட்கு அருள் பாலிக்கும் வள்ளல் அவர். அவரது கருணை மழை பொழியும் தன்மையை அசுரர்கள் பல விதமாகப் பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்தனர். கொடிய தவத்தினை மேற்கொள்வதால் தலைசிறந்து விளங்கும் அந்த வம்சத்தினர் பலமுறை கோர தவங்களைப் புரிந்து சூரியனிடம் அதியற்புதமான வரங்களைப் பெற்றுப் பின்னர் அந்த வரங்களின் மமதையினால் தங்களது பகைவர்களான தேவர்களை அடக்கியும், ஒடுக்கியும் மூவுலகங்களையும் வென்று முனிவர்களை […]

மேலும்....