பரிதிமாற்கலைஞர்

பிறந்த நாள்: 06.07.1870 பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களில் குறிப்பிடத்தக்கவர் பரிதிமாற்கலைஞர். சூரியநாராயண சாஸ்திரியார் என்ற இயற்பெயர் பெற்ற இவர் பரிதிமாற் கலைஞர் எனப் புனைப்பெயர் கொண்டார். அந்தணர் குடும்பத்தில் பிறந்த இவர் ஆற்றிய தமிழ்த் தொண்டு குறிப்பிடத்தக்கது. முப்பத்திரண்டே ஆண்டுகள் வாழ்ந்த இவர், தமிழுலகில் பெருஞ்சாதனையைச் செய்தார். தனித்தமிழ் இயக்கம் தோன்றுவதற்கு முன்பே தன் பெயரைப் பரிதிமாற் கலைஞர் என மாற்றிக் கொண்டார். இவருடைய சங்கத்தமிழ் கண்டு வியப்புற்ற சி.வை.தாமோதரம் பிள்ளை, இவரைத் திராவிட […]

மேலும்....

நிகழ்வுகள்: நாடாளுமன்ற முழக்கங்கள் நமக்கு உணர்ததும் உண்மைகள்!

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்வு நாடாளுமன்றத்தில் நடந்தபோது,  தி.மு.கழக, கழகக் கூட்டணியில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தமிழில் உறுதிமொழி கூறி பதவி ஏற்றனர். பதவி ஏற்று முடிந்ததும் கழக உறுப்பினர்கள் _ தமிழ் வாழ்க, பெரியார் வாழ்க, கலைஞர் வாழ்க என்று முழக்கமிட்டனர். கூட்டணிக் கட்சியினரும் அவர்களுக்குரிய முழக்கங்களை முழங்கினர். ஜெய்பீம், அல்லாஹீ அக்பர், ஜெய்பெங்கால், இன்குலாப் ஜிந்தாபாத் போன்ற முழக்கங்கள் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டன. தி.மு.க உறுப்பினர்கள் மட்டுமல்ல; காங்கிரசைச் சேர்ந்த […]

மேலும்....

தலையங்கம் : ஒற்றைக் கலாச்சாரம், ஒரே நாடு என்பது அதிபர் ஆட்சி முறையைக் கொண்டுவரும் சூழ்ச்சியே!

“ஹிந்து ராஷ்டிரத்தைப் பற்றி நாம் கொண்டிருக்கும் கற்பனையின்படி, அது வெறும் அரசியல் மற்றும் பொருளாதார உரிமைகளைச் சேர்த்துக் கட்டிய ஒரு வெறும் மூட்டையல்ல. பண்பாடுதான் அதன் சாரமான தத்துவம். நமது தொன்மையான, மாண்புயர்ந்த பண்பாட்டு மூலங்கள் அதன் மூச்சுக் காற்றாகும்.’’ – கோல்வால்கர் (RSS தலைவர், ஞானகங்கை பக்கம் 33-34) “நமது தேசீய மொழிப் பிரச்னைக்கு வழி காணும் முறையில், சமஸ்கிருதம் அந்த  இடத்தைப் பெறும் வரையில், சவுகரியத்தை ஒட்டி, ஹிந்தி மொழிக்கு அந்த இடத்தை நாம் […]

மேலும்....

காமராசர்

பெரியாரால் பச்சைத் தமிழர் என்று பெருமையுடன் அழைக்கப்பட்டவர். கடையருக்கும் கல்வி வாய்ப்பு அளித்தவர். குலக் கல்வியை ஒழித்து சமூக நீதிக் காத்தவர்.  (காமராசர் பிறந்த நாள்: 15.07.1903)

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா?

தொலைத்தொடர்பும், அறிவியல் கண்டுபிடிப்புகளும் அதிகம் இல்லாத காலத்தில் வடஇந்தியாவில் ஆங்கிலத்தில் வெளிவந்த “நான் ஏன் நாத்திகன்?’’ என்ற பகத்சிங்கின் கட்டுரையை பெரிதும் முயன்று தேடி எடுத்து அதைத் தமிழில் மொழிபெயர்த்து தந்தை பெரியார் வெளிவிட்டார். பின்னாளில் ஆங்கிலத்தில் அதை மீண்டும் வெளியிட ஆங்கில மூலம் கிடைக்காதபோது, பெரியார் தமிழ்மொழியில் வெளியிட்ட நூலே பயன் பட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா?    

மேலும்....