தந்தை பெரியாரின் விந்தை உள்ளம்!

வ.க.கருப்பையா ”தர்மபுரி மாவட்டத்தில் நாகஅரசம்பட்டி,  கிருஷ்ணகிரி அணையிலிருந்து அரசம்பட்டி கால்வாய் ஓடும் கரைகளில் அமைந்துள்ள தர்மபுரி மாவட்டத்தின் நெற்களஞ்சியங்கள் எனக் கருதப்படும் பல ஊர்களுள் ஒன்று. இங்கு திராவிடர் கழகத்தில் முக்கியப் பங்கு கொண்டவரும், தலைவருமான திரு.சம்பந்தம் அவர்கள் இந்த ஊரில் பிறந்தவரே அத்தை அம்மாள் என்ற ஒரு மூதாட்டி இவ்வூரில் பிறந்தவர். தந்தை பெரியார் அவர்களுக்கு ஒரு மகளைப் போன்றவர். இவரும் வயது முதிர்ந்தவர். தந்தை பெரியார் அவர்களும் -_ மணியம்மையாரும் இவ்வூருக்கு வரும்போதெல்லாம் அவர்களின் […]

மேலும்....

வாசகர் மடல்கள்

பெரியார் கொள்கைகள் பரப்பப்பட வேண்டும்! என்ற தலைப்பில் ஆசிரியர் தீட்டிய தலையங்கங்கள் அருமை! பகுத்தறிவு படைத்த ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய பயனுள்ள செய்திகள்! பெரியார்! என்ற தலைப்பில் அன்று (1945) கலைஞர் தீட்டிய கவிதையை இன்று படித்தேன். ஒவ்வொரு வரிகளும் அற்புதம். இதில் ஈ.வெ.ரா. என்ற வார்த்தை இந்த நாட்டு ஆரியத்தின் அடிபீடம் ஆட்டுகின்ற சூறாவளியாம் என்ற வரி என்னை மிகவும் கவர்ந்தது. உடல் பருமன் தவிர்க்க என்ற தலைப்பில் மருத்துவப் பகுதியில் வெளிவந்த வழிமுறைகள் அனைத்தும் […]

மேலும்....

சிறுகதை: அகல்யை

புதுமைப்பித்தன் வேதகாலம் சிந்து நதி தீரத்திலே… இப்பொழுதுபோல் அல்ல. செழித்த காடுகள்; புல்வெளிகள்; இடையிடையே சிறு சிறு குடிசைகளில் மனிதக் கூட்டங்கள். எங்கெங்கோ, அதிக நெருக்கமாக, ஜாஸ்தியாக மனிதக் கூட்டங்கள் வசிக்கும் இடம் நகரம் என்ற ஹோதாவில் விளங்கும் _ அதில் அரசன் இருப்பான் _ அதனால் அது தலைநகர். இவ்வளவும் தாண்டி ஜன சஞ்சாரமே இல்லாத பாகம். சிந்து நதி ஹிமயத்தின் மடியைவிட்டுச் சமவெளிக்கு வர ஆரம்பிக்கும் இடம். மரமும் கொடியும் மனிதனின் வெற்றியைக் காணாதவை. […]

மேலும்....

இரட்டைமலை சீனிவாசன்

பிறந்த நாள்: 07.07.1860 தாழ்த்தப்பட்ட மக்களுக்காகத் தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட பெம்மான் இவர். தலித் சாகித்ய அகாடமி திவான் பஹதூர் இரட்டை மலை ஸ்ரீனிவாசன் அவர்களின் ஜீவிய சரித்திர சுருக்கம் என்ற 68 பக்கங்களைக் கொண்ட ஒரு சிறிய நூலை வெளியிட்டது (டிசம்பர் 1999). இந்நூல் அவரே எழுதிய சுயசரித்திரம் என்ற சிறப்புக்குரியது. 1893இல் பறையன் என்ற பெயரில் ஓர் இதழைத் தொடங்கினார். மூன்று மாதம் மாத இதழாகவும், அதன்பின் வார இதழாகவும் 7 ஆண்டு காலம் […]

மேலும்....

அஞ்சா நெறி

(குறும்படம்) கதைகளை சொல்லும் விதத்தில் இன்னும் ஆயிரமாயிரம் உத்திகள் இருப்பது போலவே தோன்றுகிறது. பெண்களின் பாதுகாப்பைப் பற்றிப் பேசுகின்ற இந்த அஞ்சா நெறி குறும்படம், கதையாடலை இல்பொருள் உவமை அணி என்ற புது உத்தியைக் கொண்டு சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது மனிதர்களை மிருகங்கள் என்றும், மிருகங்களை மனிதர்கள் என்றும் உவமித்து கதை சொல்லப்பட்டுள்ளது. தந்தையையிழந்த சிறு வயது பேத்திக்கு, மகனை இழந்த அவளது தாத்தா சொல்லும் கதை. வீட்டை விட்டு வெளியே சென்றுள்ள பெண்ணை மானாகவும், வக்கிரம் பிடித்த […]

மேலும்....