ஆய்வுக் கட்டுரை: சமண, பெளத்த சமயச் சின்னங்களை அழித்தல்:இந்து உளவியலின் பொதுப்போக்கு

புலவர் செ.ராசு ஆழியாறு ஆதாளியம்மன் ஆழியாறு அருகில் சமணர் கோயில் இருந்து அழிந்துவிட்டது. கோயிலில் இருந்த சமண தீர்த்தங்கரர் சிலை மட்டும் தனியாக இருந்தது. யாரோ அதன் முகத்தைச் சிதைத்தனர். பின்னர் மார்பு, வயிற்றுப் பகுதியைச் சிறிது உடைத்தனர். பின்னர் முகப் பகுதியைப் பெண்போல் ஆக்கி மார்பில் பெண் உறுப்புக்களையும் பெரிதாக அமைத்து வர்ணம் பூசிப் பெண் உருவாக மாற்றியதுடன் அதற்கு ஆதாளியம்மன் என்று பெயரும் வைத்துவிட்டனர். அருகில் உள்ள சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் ஆதாளியம்மனுக்குத் […]

மேலும்....

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (39): அம்பேத்கரும் பெரியாரும் ஓரே நோக்கமும்,கொள்கையும் உடையவர்கள்!

நேயன் ஆரிய திராவிட வேறுபாட்டை அம்பேத்கர் ஏற்கவில்லை (தொடர்ச்சி) 10.3 ”பிராமணன் ஒப்புயர்வுற்றவனாக இருக்கும் காரணத்தாலும் அவனது உயர்ந்த பிறப்பின் காரணத்தாலும் (குறிப்பிட்ட) வரையறைக்குட்பட்ட விதிகளைப் பின்பற்றும் காரணத்தாலும், அவனது குறிப்பிட்ட புனிதத்தன்மை பெற்றிருக்கும் காரணத்தாலும், (எல்லா) சாதிகளுக்கும் தலைவனாயிருக்கிறான் 11:35 பிரமணன் உலகைப் படைத்தவனாகவும், தண்டிப்பவனாகவும், ஆசிரியனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளான். எனவே அவன் படைக்கப்பட்டவை அனைத்துக்கும் புரவலனாக விளங்குகிறான். அவனிடம் எந்த மனிதனும் அமங்கலமான எதையும் சொல்லவோ, கடுமையான சொற்களைப் பயன்படுத்தவோ கூடாது. பிராமணர்கள் மனம் கோணும்படியான […]

மேலும்....

பெண்ணால் மூடியும்: வாட்டும் வறுமையிலும் வான்வெளியில் சாதித்த பெண்!

அப்துல் கலாமின் கனவு காணுங்கள் என்னும் வாசகத்தால் ஈர்க்கப்பட்டு விஞ்ஞானத்தின் மீது ஆசை எற்பட விண்வெளி சார்ந்த புத்தகங்களைத் தேடிப் படித்தார் தேனி மாவட்டம் அல்லி நகரத்தைச் சேர்ந்த உதயகீர்த்திகா. வான்வெளி தொடர்பான அத்தனை போட்டிகளிலும் களம் இறங்கினார். எட்டாம் வகுப்பிலே அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை நடத்திய போட்டியில் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் கண்டுபிடிப்பை சமர்ப்பித்து இன்ஸ்பயர் விருதைப் பெற்றுள்ளார். தொடர்ந்து விண்வெளி ஆராய்ச்சி மய்யத்தை சுற்றிப் பார்க்கும் வாய்ப்பையும் சிறு வயதிலேயே பெற்றார். 2012ஆம் […]

மேலும்....

சிறந்த நூலிலிருந்து சில பகுதிகள்: கொஞ்சம் டார்வின் கொஞ்சம் டாக்கின்ஸ்!

நூல்: கொஞ்சம் டார்வின் கொஞ்சம் டாக்கின்ஸ்! ஆசிரியர்: மனநல மருத்துவர் ஷாலினி வெளியீடு: கருஞ்சட்டைப் பதிப்பகம், சென்னை – 87. கிடைக்குமிடம்: 122/130 என்.டி.ஆர் தெரு,    ரங்கராஜபுரம், கோடம்பாக்கம்,    சென்னை – 24.    தொலைபேசி: 044 – 42047162 விலை: 80. பக்கங்கள்: 132 திருமணம்: மனிதர்கள் காட்டுவாசிகளாய் இருந்த காலம் தொட்டே, இவர்கள் வாழ்நாள் முழுக்க ஒரே இணை எனும் மோனோகேமி முறையைத்தான் பின்பற்றி வந்திருக்கிறார்கள். இந்த மோனோகேமி என்பது மிகவும் அரிதான ஒரு மீம். […]

மேலும்....

கவிதை: பச்சைத் தமிழர்

ஜூலை 15 பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் மற்றும் கல்விப் புரட்சி நாள் ”பெருந்தலைவ; இன்றைக்கு உன்றன் பிறந்தநாள் – கொள்கைக் குன்றுக்கு எங்கணும் திருவிழா! விருதையில் பிறந்து வீரனாய் வளர்ந்தாய் சரிதையில் நிறைந்த தலைவனாய் நின்றாய்! சிறையின் கொடுமையும் சித்ரவதையும் சிரித்த முகத்துடன் ஏற்ற தியாகி ஆயிரம் உண்டு கருத்து மோதல் – எனினும் அழியாத் தொண்டு மறந்திடப்போமோ? தமிழ்நிலம் மணக்க வந்த திருவே! அமிழ்தெனும் பொதுப்பணியின் உருவே! கருத்திருக்கும் உன்றன் உடல் என்றாலும் – […]

மேலும்....