தகவல்

ஒரு வரிச் செய்திகள் கலிபோர்னியாவில்தான் முதன்முதலில் ஜீன்ஸ் ஆடை தயாரிக்கப்பட்டது. நோபல் பரிசு வென்ற முதல் பெண்மணி, மேரி க்யூரி. கிளியைவிட மனிதர்கள் போன்று அதிகம் பேசக்கூடிய பறவை, மைனா. பெருங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும், இஸ்ரோ 1969ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தற்போது 16,000 ஊழியர்கள் இஸ்ரோவில் பணியாற்றுகின்றனர். வண்ணத்தேநீர் பங்காளதேஷ் நாட்டின் மௌல்வி பஜார் மாவட்டத்தைச் சேர்ந்தவர், ரோமேஷ் ராம் கௌர். இவர், 7 வண்ணங்களில் வெவ்வேறு சுவை அளிக்கும் தேநீர் தயாரிப்பதில் பிரபலமானவர். […]

மேலும்....

பெரியார் பேசுகிறார்: இது என்ன நியாயம்?

தந்தை பெரியார் தோழர் ஆச்சாரியார் அவர்கள் முதன் மந்திரியாக ஆனவுடன் மக்களுக்கு நீண்ட காலமாய்ப் பெருந் தொல்லையாக இருந்து வந்த உணவு கண்ட்ரோலை (கட்டுப்பாட்டை) எடுத்தார். நம்மைப் போன்றவர்களும் இது நல்ல காரியம் என்று ஆதரித்தோம். மக்கள் தங்களுக்கான கண்ட்ரோல்களை ஒழித்ததால் மகிழ்ச்சியடைந்தார்கள். நெசவாளிகளுக்குச் சில நன்மை செய்தார். தக்கப்படி செய்து  கொஞ்சம் பெயர் கிடைத்தவுடன் அவருடைய பதவியும் நிலைத்துகொண்டது என்று தெரிந்ததும் என்ன செய்தார்? இந்த நாட்டை மனுதர்மத்திற்குக் கொண்டு செல்லும் ஆச்சாரியார் அவர்கள்  மனதில் […]

மேலும்....

முகப்புக் கட்டுரை: அனைவருக்கும் கல்விக் கொள்கையா? ஆரியத்தின் காவிக் கொள்கையா?

மஞ்சை வசந்தன் 2014ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்தவுடன் சுப்பிரமணியன் குழு நியமிக்கப்பட்டு, குலக்கல்வியை  நினைவூட்டும் வகையிலான ஓர் அறிக்கையை அது அளித்தது. கடுமையான எதிர்ப்பால் அவ்வறிக்கை கிடப்பில் போடப்பட்டது.    தற்போது பா.ஜ.க. மோடி அரசு மீண்டும் ஒரு தேசியக் கல்விக் கொள்கையை விவாதத்துக்கு வைத்திருக்கிறது. இந்தியாவின் கல்விமுறையைச் சீர்திருத்துவதற்காக மத்திய அரசு, விண்வெளி அறிவியலாளர் கஸ்தூரிரங்கன் தலைமையில், ஒன்பது பேரைக் கொண்ட கமிட்டி ஒன்றை அமைத்தது. அது அளித்த அறிக்கை இது. முதல் நாளிலேயே இவ்வறிக்கை […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்.. இயக்க வரலாறான தன் வரலாறு(229) எம்.ஜி.ஆர் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு!

கி.வீரமணி இந்திய அரசு உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தியும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் சென்னையில் 06.11.1987 அன்று பாரிமுனையிலிருந்து – சைதாப்பேட்டை வரை பல்லாயிரக்கணக்கான மக்கள் கைகோர்த்து அணிவகுத்து நின்று மனிதச் சங்கிலி அறப்போர் நடத்தப்பட்டது. இந்த மனிதச் சங்கிலி அறப்போர் சுமார் 10 கிலோ மீட்டம் தூரம் சாலை முழுவதும் ஒலி முழக்கங்களுடன் 4.30 மணி முதல் 5.00 மணி வரை நடைபெற்றது இந்த அறப்போராட்டத்தில் பெண்கள், […]

மேலும்....

மருத்துவம்: கருவுற்ற பெண்களுக்கு ஏற்ற உணவுகள்!

கருவுற்றிருக்கும்போது இரத்த சோகை ஏற்படுவது இப்போது மிகவும் பரவலாக இருக்கிறது. இந்த இரும்புச்சத்து குறைபாடு காரணமாகவே குறைப் பிரசவம், கருக்கலைவது, குழந்தை இறந்து பிறப்பது உள்ளிட்டவையும் நிகழ்கின்றன. மைக்ரோ நியூட்ரியன்ஸ் என்று சொல்லக்கூடிய வைட்டமின் ஏ, ஜிங்க், ஃபோலிக் ஆசிட், அயோடின் சத்து இவையனைத்தையும் ஒரு கர்ப்பிணிப் பெண் சரியான அளவு எடுத்துக்கொண்டால், அவளுடைய பிரசவத்தில் எந்தவிதமான பிரச்னையும் ஏற்படாது! கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டியவை: பதப்படுத்தப்பட்ட குளிர்பானங்கள், கருவுற்ற முதல் நாளிலிருந்து முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். […]

மேலும்....