பெரியார் பேசுகிறார் : பகுத்தறிவு

தந்தை பெரியார் பகுத்தறிவு என்பது மனிதனுக்கு ஜீவநாடி (உயிர் நாடி)ஆகும். ஜீவராசிகளில் மனிதனுக்குத்தான் பகுத்தறிவு உண்டு. இதில் மனிதன் எவ்வளவுக்கு எவ்வளவு தாழ்ந்த நிலையில் இருக்கின்றானோ அவ்வளவுக்கு அவ்வளவு காட்டுமிராண்டி என்பது பொருள். மனிதன் எவ்வளவுக்கு எவ்வளவு பகுத்தறிவில் தெளிவு பெறுகின்றானோ அவ்வளவுக்கு அவ்வளவு பக்குவமானவன் என்பது பொருள். பகுத்தறிவு பெறும்படியான சாதனம் நமக்கு நீண்ட நாளாகவே தடைபடுத்தப்பட்டு வந்துள்ளது. நம்மை அடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்திய பார்ப்பனர்கள், நாம் பகுத்தறிவு வளர்ச்சி அடைய ஒட்டாமல் தடை செய்து […]

மேலும்....

தலையங்கம் : இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல் சட்டப்படி தவறானது!

இடஒதுக்கீடு என்பது சமுக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதுதான் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் நிலையாகும். இதில் பொருளாதார அளவுகோல் எங்கிருந்து வந்தது? இது இப்பொழுது மட்டுமல்ல _ தந்தை பெரியார் அவர்கள் கிளர்ச்சியாலும், காமராசர் போன்றவர்களின் ஒத்துழைப்பாலும் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டு வந்தபோதே, நாடாளுமன்றத்தில் பொருளாதார அளவுகோலையும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. அப்பொழுது பிரதமராக நேரு, சட்ட அமைச்சராக அண்ணல் அம்பேத்கர் ஆகியோர் இருந்தனர். […]

மேலும்....

கர்னல் ராபர்ட் இங்கர்சால்

நினைவு நாள் : 21.7.1893 மக்களைப் பீடித்துள்ள மதவெறி, மூடநம்பிக்கைகள், குருட்டு வழக்கங்கள் மண்ணோடு மண்ணாய் மடிய வேண்டும் என்று அரிய சொற்பொழிவுகளை நிகழ்த்தியவர். வழக்கறிஞராகவும், அட்டர்னி ஜெனரலாகவும் இருந்து ஈட்டிய பொருளை எல்லாம் பொதுப் பணிக்கே செலவிட்ட பெருமகன். இவருடைய நூல்களையும் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வெளியிட்டுள்ளது.  

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா?

நீதிக்கட்சி அமைச்சரவையில் சேருமாறு சுயமரியாதை வீரர் ராமச்சந்திரனாரை – அன்றைய முதல்வர் முனுசாமி அழைத்தபோது, தந்தை பெரியார் கருத்தை ஏற்று இயக்கப் பணியே ஆற்றுவேன் என்று கூறி அமைச்சர் பதவியை மறுத்தார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?  

மேலும்....

நுழைவாயில்

இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல் சட்டப்படி தவறானது! – கி.வீரமணி ஆண்டு முழுதும் அடுக்கடுக்காய் ஆரிய பார்ப்பன மூடச் சடங்குகள்! அவற்றால் பயன் கிடைத்ததா? – மஞ்சை வசந்தன் மலேசிய ‘தமிழ்நேசன்’ நாளேட்டில் கு.சா.பெருமாள் பதிவிட்ட பாராட்டுரை (அய்யாவின் அடிச்சுவட்டில்…) – கி.வீரமணி லைலா – மஜ்னு (சிறுகதை)  – ஏ.வி.பி.ஆசைத்தம்பி சுயமரியாதை எக்காளம் (கவிதை) – புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் இந்தியாவை பீடித்துக் கொண்டிருக்கும் நூற்றாண்டு கால நோய் சாதி – பொன்னீலன் விதையில்லா கனிகள் வேண்டாம்! தர்மபிரபு […]

மேலும்....