பாபா சாகிப் டாக்டர் அம்பேத்கரின் பதினைந்தெழுத்து மந்திரம்

– வழக்கறிஞர் சு.குமாரதேவன்  பல்வேறு சமயங்களைக் கடைப்பிடிக்கும் பக்தர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் வழிபடும் கடவுள்களின் பெயரினைக் குறிக்கும் வகையில் மிகச் சுருக்கமாக சில மந்திரச் சொற்களை வைத்திருப்பார்கள். கிறிஸ்தவர்கள், ஏசுவே ஜீவன் என்றும்; இஸ்லாமியர்கள், பிஸ்மில்லா ஹிர் ரகுமான் இன் ரஹிம் என்றும்; சைவர்கள், அய்ந்தெழுத்து மந்திரம் என்று சொல்லி சிவாய நம என்றும்; ஓம் நமோ நாராயணா என்ற எட்டெழுத்து மந்திர சொல்லாக வைணவர்களும்; சமணர்கள், வந்தே ஜினவரம் என்றும் சொல்வார்கள். ஆனால் தந்தை பெரியார், […]

மேலும்....

காவிரி உரிமையில் தமிழகத்திற்கு மத்திய அரசு இழைக்கும் அளவற்ற அநீதி! உச்சநீதிமன்றம் உரிமை காக்க வேண்டும்!

– மஞ்சை வசந்தன்  கர்நாடகத்தில் உள்ள குடகு மலைதான் காவிரிப் பெண்ணின் பிறந்தகம். மேற்குத் தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்திலிருந்து 1,276 மீட்டர் (4,186 அடி) உயரத்தில் அது புறப்படும் இடத்துக்குத் தலைக்காவிரி என்று பெயர். ஓட்டமும் நடையுமாக கர்நாடகத்தில் 320 கி.மீ., தமிழ்நாட்டில் 416 கி.மீ. பயணிக்கும் காவிரி, பூம்புகாரில் வங்கக் கடலில் கலக்கிறது. இரு மாநில எல்லையில் 64 கி.மீ. என்பதையும் சேர்த்தால், காவிரி ஆற்றின் மொத்த நீளம் கிட்டத்தட்ட 800 கி.மீ. காவிரிக் […]

மேலும்....

நான் ஏன் தமிழைப் போற்றுகிறேன்?

– தந்தை பெரியார்   தோழர்களே! நான் தமிழில் நிரம்பவும் பரிச்சயம் உள்ளவன் என்பதைக் கேட்டபோது நான் வெட்கமடைந்தேன்.  நான் பள்ளியில் படித்ததெல்லாம் மிக சொற்ப காலமேயாகும்.  திண்ணைப் பள்ளிக்கூடத்தில் 3 வருஷமும், ஸ்கூல் பள்ளிக் கூடம் என்னும் ஆங்கில முறைப் பள்ளிக் கூடத்தில் 2,3 வருஷமும்தான் படித்தவன்.  என்னை என் வீட்டார் படிக்க வைக்கக் கருதியதெல்லாம் வீட்டில் என்னுடைய தொல்லை பொறுக்கமாட்டாமல் என்னை பள்ளியில் வைத்துக் கொண்டிருப்பதற்காகவே ஒழிய, நான் படிப்பேன் என்பதற்காக அல்ல என்பதை […]

மேலும்....

காவிரிப் பிரச்சனை வெறும் நீர்ப் பிரச்சனையல்ல! மாநில உரிமை, வாழ்வாதாரப் பிரச்சனை!

உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும், கருநாடக மாநில சட்டப் பேரவைத் தேர்தலை மனதிற்கொண்டு, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் ஸ்கீம் என்ற வார்த்தை விளையாட்டில் ஈடுபட்டு, தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் வகையில், திட்டமிட்டு மத்திய பி.ஜே.பி. அரசு செயல்பட்டு வருகிறது. இதற்குத் தமிழ்நாடு அரசும் துணைபோய்க் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு வடிகால் நிலப் பகுதியா? காவிரி கருநாடகத்தில் உற்பத்தியாகிறது என்பதற்காக மட்டும், தானடித்த மூப்பாக கருநாடகம் நடந்துகொள்ள முடியுமா? முடியாது என்பதுதான் சட்டத்தின் நிலை. ஆனால், நடப்பது என்ன? தமிழ்நாட்டை […]

மேலும்....

தீண்டாமைச் சுவர்

   – துறையூர் க.முருகேசன்   எனக்கு சாதிமேல, மதத்து மேல நம்பிக்கை இல்லை. இருந்தாலும், எனக்கு ஊர் நாட்டாண்மைங்கிற பொறுப்பை கொடுத்திருக்குற ஊர் சனங்களுக்கு துரோகம் செய்ய மாட்டேன். தயவுசெய்து இந்தப் பிரச்சினையை இதோட விட்டுட்டு அவுங்க அவுங்க பொழப்பை பார்த்துக்கிறதுதான் நல்லது என்ற நாட்டாண்மை நல்லசிவத்தின் பேச்சில் யாருக்கும் நம்பிக்கை ஏற்படவில்லை. இரு பாட்டன் தலைமுறைக்கு முன்னால், யாரோ ஒரு வழிப்போக்கன் ஏற்படுத்திய பிரச்சினை, இன்னமும் தீர்ந்த பாடில்லை. இதற்கு மேலும் தீரப்போறதும் இல்லை, […]

மேலும்....