தமிழ் 13,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது! ஜெர்மனியில் உள்ள மேக்ஸ் பிளாங் சொசைட்டி ஆய்வு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது!

ஜெர்மனி, நெதர்லாந்து, லண்டன், ஸ்வீடன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய ஆறு நாடுகளின் மொழியியல் அறிஞர்கள் ஓராண்டுக் காலம் ஆய்வு செய்து இந்த முடிவை அறிவித்துள்ளனர். சமஸ்கிருதம் தொன்மொழி, செம்மொழி என்பதெல்லாம் மோசடியானவை. சமஸ்கிருதம் எழுத்தற்ற பேச்சு மொழி. அதை எழுதாக்கிளவி என்றே அழைப்பர். தமிழிலிருந்துதான் சமஸ்கிருதத்திற்கு எழுத்து வடிவம் பின்னாளில் தரப்பட்டது. தமிழ்ச் சொற்களை மாற்றித்தான் சமஸ்கிருத சொற்களை உருவாக்கினர். சலம் என்ற தமிழ்ச் சொல்லை ஜலம் என்றும், சுரம் என்ற தமிழ்ச் சொல்லை ஜுரம் என்றும், […]

மேலும்....

இளவேனில் என்ற தமிழ்ப் பெண்ணின் இமாலய சாதனை!

– பண்பாளன் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற சர்வதேச ஜூனியர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார் பதினெட்டு வயதான தமிழச்சி இளவேனில். இளவேனிலின் சொந்த ஊர் கடலூர். சிறு வயதிலிருந்தே விளையாட்டில் மிகுந்த ஆர்வமுடையவர். தொடர் ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் என தடகளப் போட்டிகளில் சாதிக்க வேண்டுமென்பது அவரது லட்சியமாக இருந்தது. பள்ளி அளவிலான போட்டிகள் உட்பட சிறுசிறு போட்டிகளில் கலந்துகொண்டு தடகளத்தில் பதக்கங்களைக் குவித்து வந்த […]

மேலும்....

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

ஏன் அவர் புரட்சிக்கவிஞர் ?  புதுமையான, புரட்சியான கருத்துக்களை, மக்களை பகுத்தறிவுவாதிகளாக்கக் கூடிய கவிதைகளை எழுதியவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். அவரது கவிதைகள் மனிதனை சிந்திக்கத் தூண்டுகின்றன; முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்வதாகவும், முற்போக்கு சமுதாயத்திற்கு ஏற்றதாகவும் அவரது கவிதைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா?

1927இல் விதவைப் பெண்களின் மறுமணத்தை காந்தியார் ஆதரித்துப் பேசினார் என்பதற்காக ஆத்திரம் அடைந்த பார்ப்பனர்கள், அவர் சென்ற அடுத்த நாளே கும்பகோணத்தில் பொதுக்கூட்டம் போட்டுக் கண்டித்தார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....