மனிதக் கழிவகற்றுவோர் மரணம் தமிழகம் முதலிடம்!

– கெ.நா.சாமி “செவ்வாய்க் கிரகத்திற்குச் சென்றுவரும் இக்காலகட்டத்தில் மனிதன் மலத்தை மனிதன் சுமப்பதா? தேவை இதற்கொரு முற்றுப்புள்ளி’’ என்ற தலைப்பில் 3.1.2018 அன்றைய ‘விடுதலை’ நாளிதழில் தமிழர் தலைவர், ஆசிரியர் வீரமணி அய்யா அவர்கள் மனித உரிமையை வலியுறுத்தி ஓர் அறிக்கை வெளியிட்டார். அன்றைய ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ ஆங்கில நாளிதழில் வெளிவந்திருந்த ஒரு செய்தியே அவருடைய உள்ளக் கொதிப்புக்குக் காரணமாகி அந்தக் கொதிப்பின் வெளிப்பாடே அந்த அறிக்கை. இந்தியா விடுதலை அடைந்து 70 ஆண்டுகள் நிறைவு […]

மேலும்....

நன்றி விழா! – பாசு.ஓவியச்செல்வன்

ஆடியில் விதைத்த நெல்மணிகள் தையொன்றில் பொங்கலாய் பொங்கி வழியும்!   மேழி பிடித்து காய்த்த கரங்கள் செங்கரும்பு பிடித்து ஆனந்தத்தில் திளைக்கும்!   வாயிற்படியில் செருகிய பூலாம்பூ கழனி வியர்வைக்கு விசிறி வீசும்!   வாசலில் பூத்த வண்ணக் கோலம் மாரி தந்த மேகத்திற்கு நன்றி நவிலும்!   நெற்கதிர்களுக்கு பிரசவம் பார்த்த களத்து மேடு கதிரவனைப் போற்றும்   வயலிலிறங்கி வதை பட்ட பாதங்களை வலியோடு வரப்புகள் நினைவு கூறும்…   பொங்கலிடும் புதுப் பானை […]

மேலும்....

உழைப்பை உயர்த்திப் பிடிக்கும் உன்னதக் கொண்டாட்டம்! – கோவி.லெனின்

  பெயரிலேயே கொண்டாட்டத்தைக் கொண்டிருக்கும் திருநாள், தமிழர் திருநாளும் திராவிடர் பெருநாளுமான பொங்கல். இன்பம் பொங்கும். மகிழ்ச்சி பொங்கும். உழைப்பின் பலன் பொங்கும். வியர்வையின் விளைச்சல் பொங்கும். எளிய குடிசையிலும் பொங்கல் பொங்கும். சாதி-மத-பொருளாதார பேதமற்ற சமத்துவம் பொங்கும். இதுதான் வேறெந்த பண்டிகைக்கும் இல்லாத, பொங்கலுக்கு மட்டுமே உள்ள சிறப்பு. உழைத்தப் பலனை மகிழ்ச்சியுடன் நுகரவும், ஓரிரு நாள்கள் ஓய்வும் உற்சாகமும் கிடைக்கவும் பொங்கல் போன்ற அர்த்தமுள்ள பண்பாட்டு விழாக்கள் பன்னெடுங்காலமாக நடைபெறு கின்றன. உழைப்பவர்களுக்கு ஓய்வும் […]

மேலும்....

பாவேந்தர் போற்றும் திராவிடர் திருநாள்

திராவிட நாட்டுக்குப் பொங்கல் வாழ்த்து எண்சீர் விருத்தம் அகத்தியனும் காப்பியனும் தோன்று முன்னர்! அரியதமிழ்த் தலைக்கழகம் தோன்று முன்னர்! மிகுத்தகடல், குமரியினை மறைக்கு முன்னர்! விண்ணுயர்ந்த பனிமலைதான் நிமிருமுன்னர்ப்! பகுத்தறிவின் துணையாலே அரசியற்றிப் பல்கலையின் ஒளியாலே உலகம் காத்துத் திகழ்பழைய தமிழகமே, இடைநாள் தன்னில் திராவிடநா டெனப்போற்றும் என்றன் அன்னாய்,   பத்தன்று; நூறன்று; பன்னூ றன்று; பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில் புத்தாண்டு, தைம்முதல்நாள், பொங்கல் நன்னாள், போற்றிவிழாக் கொண்டாடி உன்ந லத்தைச் செத்தவரை மறந்தாலும் […]

மேலும்....

மதக் கொண்டாட்டங்களும் மனிதச் சமூகமும்! – ஓவியா

  பொங்கல் மட்டும் நாம் ஏன் கொண்டாடலாம் அல்லது கொண்டா டுகிறோம்?.  அறிவு அரும்பத் துவங்கிய பருவத்தில் நாங்கள் கேட்ட கேள்வி இது.  வீட்டில் சொன்னார்கள், எல்லோரும் பண்டிகைகள் கொண்டாடுகிறார்கள் நமக்குப் பண்டிகை என்று ஏதாவது ஒன்று வேண்டுமய்யா என்று பெரியாரிடம் இயக்கத் தொண்டர்கள் விண்ணப்பித்தார்கள்.  அதனடிப்படையில் அய்யா அவர்கள் அப்படிக் கொண்டாடுவது என்றால் பொங்கலைக் கொண்டாடிக் கொள்ளுங்கள். அது ஒன்றுதான் மூடப் பழக்க வழக்கங்களுக்கு புராணக் கட்டுக் கதைகளுக்குத் தொடர்பில்லாத தமிழர்கள் பண்டிகை என்று அனுமதியளித்ததாகக் […]

மேலும்....