எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை 23

பிற்படுத்தப்பட்டோர் தலைவர்களை உயர்த்திப் பிடித்த தந்தை பெரியார், ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்டோர் தலைவர்களை பெரியார் மறைத்தார்; இருட்டடிப்புச் செய்தார் என்று சிலர் அறிந்தும், அறியாமலும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். ஆனால், இக்குற்றச்சாட்டு உண்மைக்கு எதிரான, பொய்யான குற்றச்சாட்டாகும். எடுத்துக்காட்டாக எம்.சி.இராஜா என்ற தாழ்த்தப்பட்டோர் தலைவரை பெரியார் தலைக்கு மேல் தூக்கி நிறுத்திக் கொண்டாடினார். “எம்.சி.ராஜா பேசி இருப்பதில் ஒரு சிறு எழுத்தையாவது எந்தக் காங்கிரஸ்வாதியோ, தேசியவாதியோ ஆட்சேபிக்க முடியுமா? என்று பந்தயம் கூறிக் கேட்கிறோம்.’’ (‘குடிஅரசு’ 24.05.1931) என்று கேட்டவர் […]

மேலும்....

தாலியில்லாமல் திருமணங்களை நடத்தும் ஊர்கள்!

  விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே கோட்டைபூண்டி பஞ்சாயத்து உள்ளது. இங்கு செக்கடி குப்பம், கோட்டுவன் குப்பம், அதியந்தல், கோவில்புறையூர் ஆகிய ஊர்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 5 ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். 50 வருடத்துக்கு முன்பு இந்த உலகளவில் திருமணத்தின்போது பெண்களுக்கு தாலி கட்டும் பழக்கம் இருந்து வந்தது. இந்நிலையில் மேல்மலையனூருக்கு பெரியார் வந்து பேசினார். அப்போது அவர் பெண்களை அடிமைகளாக நடத்தக்கூடாது. திருமணத்தின்-போது பெண்களுக்கு தாலி அணிவிப்பது அவர்களை அடிமைப்படுத்தும் செயலாகும். எனவே […]

மேலும்....

ஆசிரியர் உடையார்பாளையம் வேலாயுதம்

‘உடையார்பாளையம் வேலாயுதம்’ அவர்கள் செயங்கொண்ட சோழபுரத்தையடுத்த கரடிகுளத்தில் 1910ஆம் ஆண்டு ஜூலைத் திங்களில் பிறந்தார். எட்டாம் வகுப்புடன் பள்ளிப் படிப்பை முடித்துவிட நேரிட்ட அவர் ஆசிரியர் பயிற்சி பெற்றுத் தேர்ந்து தொடக்கப் பள்ளி ஆசிரியரானார். உடையார்பாளையத்தில் சுயமரியாதைக் கொள்கைகள் காட்டுத் தீயெனப் பரவிக் கொண்டிருந்த காலத்தில் ஆசிரியத் தொண்டுக்கு வந்த இவர் இயக்கத்தில் ஆழமான பற்றுக் கொண்டு அக்கொள்கைகளை மக்களிடத்திலும், வாய்ப்பேற்படும்போது மாணவர்களிடத்திலும் பரப்புவதைத் தம் கடமையாகக் கருதினார். ‘பெரிய மனிதர்களின் கண்ணும் கருத்தும் இயற்கையாய் இவர் […]

மேலும்....

சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்

தந்தை பெரியார்அவர்கள் வெய்யில் காலங்களில் ஏர்க்காடு வருவதனால் சிறு வாடகை வீடு அமர்த்திக் கொண்டுதான் தங்குவது வழக்கம். ஒரு தடவை மின் வசதி கூட இல்லாத வீட்டைப் பிடித்துத் தங்கினார்கள். தங்கி இருந்த வீட்டைச்சுற்றி, மிக்க ஏழ்மையில் உழலும் தாழ்த்தப்பட்ட மக்களே பெரிதும் சிறு, சிறு குடிசைகளில் வசித்தனர். அனேகமாக ஏர்க்காட்டில் அப்படிப்பட்ட மக்கள்தான் மிகுதியாக அன்று வசித்தார்கள். சிலர் மாடு கன்றுகளை வைத்துப் பால் கறந்து பிழைத்து வந்தனர். தந்தை பெரியார் அவர்கள் ஏர்க்காட்டில் வந்து […]

மேலும்....

ஏன் அவர் பெரியார்?

“பெரியார் பட்டம்’’ அளித்தவர்கள் பார்வையில்…. சென்னை பெரம்பூரில் பெண் தலைவர் ஒருவர் தலைமையிலும், பெரியார் முன்னிலையிலும் ஒரு சுயமரியாதைத் திருமணம் நடைபெறுகிறது. கடுமையான மழை, தாழ்த்தப்பட்டோர் வசிக்கும் பகுதி. ஒரே சேறும், சகதியுமாகி-விட்டது. திருமணம் முடிந்து சாப்பிட சொன்னபோது பலரும் சாப்பிட-வில்லை. ஆனால், பெரியார் என்ன செய்தார் தெரியுமா? மேலே இருந்த ஓலையைக் கீழே எடுத்துக் போட்டு அப்படியே உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்துவிட்டார். பெரியார் எந்தவித ஏற்றத்தாழ்வும் பார்க்க மாட்டார். இதைக்கண்ட பெண் தலைவர்கள் சிலர், காந்தியாருக்கு […]

மேலும்....