பெண்ணால் முடியும்! : மன வலிமையால் சாதனை படைத்த இல்லத் தலைவி

சாதனை புரிய வயதோ, வலிகளோ தடையில்லை என்பதை மீண்டும் மீண்டும் பெண்கள் நிரூபித்து புதிய சாதனைகளைப் படைத்து வருகின்றனர். ஒவ்வொருவரும் அவரவர் லட்சியத்தில் உள்ள உறுதிக்கு ஏற்ப சாதனைகளை எளிதில் படைத்து விடுகின்றனர். அதுபோன்ற சாதனைப் பெண் சங்கீதா. அவர் கடந்து வந்த பாதை பற்றிக் கூறுகையில், “நான் திருச்சி மாவட்டத்தில் உள்ள மீனாட்சிபுரம் என்ற கிராமத்தில் வசிக்கிறேன். எனக்கு 40 வயது ஆகிறது. எனது கணவர் அய்யப்பன் தற்காப்புக் கலை பயிற்சியாளர். கராத்தே பயிற்சிப் பள்ளிகளை […]

மேலும்....

வரலாறு : பார்ப்பனர்களால் திருடப்பட்ட பழனி மலைக்கோயில்

பழனி முருகன் கோயில் தமிழர்களிடமிருந்து பார்ப்பனர்கள் கைக்கு மாறியது எப்படி? பழனி முருகன் கோயிலில் உள்ள நவபாஷாண உருவச் சிலை சித்தர் போகர் என்பவரால் செய்யப்பட்டது. அவருடைய மரபில் வந்த புலிப்பாணி மற்றும் இதர தமிழ் ஜாதிகளைச் சார்ந்தோர் அக்கோயிலில் பூசை செய்து வந்தனர். முக்கியமாக அவர்கள் சைவ பண்டார இனத்தவர்களாக இருந்தனர். 15ஆம் நூற்றாண்டு காலத்தில் திருமலை நாயக்கருடைய தளவாய் ராமப்பா அய்யன் மற்றும் நாயக்கர் படைப்பிரிவு வடுகப் பள்ளர்கள் பழனிக்கு வந்தனர். ராமப்பா அய்யன் […]

மேலும்....

வரலாறு : அயோத்திதாச பண்டிதரின் ஆய்வு நுட்பமும் அறிவு நுட்பமும்

திருக்குறளில் உள்ள கருத்துகளை எடுத்து அர்த்தசாஸ்திரத்திலும் சுக்கிர நீதியிலும் எழுதியுள்ளனர். அர்த்த சாஸ்திரம் கி.பி.நான்காம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்று மேலைநாட்டு ஆய்வாளர்களின் கூற்று உறுதி செய்கிறது. மேலும் அர்த்த சாஸ்திரம் ஒரு தொகுப்பு நூல் மட்டுமே. இதற்கு முன்னிருந்தோர் கூறிய கருத்துகளைத் தொகுத்து உருவாக்கப்பட்டது இது என்பதும் ஆய்வின் மூலம் புலப்படுகிறது. இதன்படியும் மேற்கண்ட கருத்து உண்மையாகிறது. “சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை” என்ற வள்ளுவர்தம் குறளின் அடிப்படையில் தான் அர்த்த சாஸ்திரத்தில் […]

மேலும்....

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (100)

பாரதியின் வழக்குரைஞர்கள்! நேயன் பாரதி பிறப்பதற்கு முன்பே, மராட்டிய மாநிலத்தில் கோலோச்சிய ஆரிய பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராய் மகாத்மா ஜோதிராவ் பூலே (1827_1890) உறுதியுடன் தீவிரமாகப் போராடினார். ஆரிய பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்ததுபோலவே, அவர்களுடைய புராணங்கள், சாஸ்திரங்கள், சனாதன தர்மங்கள், சடங்குகள் போன்றவற்றையும் கடுமையாக எதிர்த்தார். ஜாதி ஒழிப்பு, பெண்ணுரிமை, கல்வி வளர்ச்சி, உழைப்பாளர் உரிமை போன்றவற்றிற்கு அவரும் அவருடைய துணைவர் சாவித்திரியும் களத்தில் இறங்கி தொண்டாற்றி, வெற்றியும் பெற்றனர். பாரதி காலத்திலே, கேரளாவின் திருவிதாங்கூர் பகுதியில், […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (292)

எம்.ஆர்.ராதா மன்றம் அடிக்கல் நாட்டு விழா கி.வீரமணி டிசம்பர் 5ஆம் நாள் அன்று புதுடில்லியில் நான் தங்கியிருந்த இந்தியா இண்டர்நேஷனல் சென்டரின் இணைப்பகத்தின் 78ஆம் அறையில், இந்திய சமூகநீதி மய்யத்தின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான சந்திரஜித், பெரியார் மய்யத்தின் கவுரவ இயக்குநரான முன்னாள் மத்திய கல்வி அமைச்சர் டி.பி.யாதவ், புதுடில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர் திரு.எம்.கே.ஷைனி, புதுடில்லி பிரபல கட்டடக்கலை நிபுணர் (Architect) திரு.ராவ் மற்றும் அசோசியேட்ஸ் நிறுவனம் நடத்தும் கஜேந்திர சிங் ராவ், பேராசிரியர் […]

மேலும்....