இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ்.மருத்துவப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை தமிழக அரசு மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.
இதில் 200 க்கு 200 மதிப்பெண் பெற்ற மாணவர்கள் 16 பேர். இவர்களில் 10 பேர் பிற்படுத்தப்பட்டவர்கள். இச்செய்தியை 26.6.2012 தினமலர் வேறுவழியில்லாமல் முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இட ஒடுக்கீடு என்றாலோ, சமூக நீதி என்றாலோ கரித்துக்கொட்டி வன்னெஞ்சத்துடன் எழுதும் தினமலர் உள்ளிட்ட பார்ப்பன ஏடுகள் இதற்குக் கூறும் பதில் என்ன? கல்வி வாய்ப்பைக் கொடுத்தால் பிற்படுத்தப்பட்டோரும், தாழ்த்தப்பட்டோரும், பழங்குடியினரும் வென்றுகாட்டுவார்கள் என்பதற்கு இதனைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும்?
கல்வியும், அறிவும் பிறப்பால் வருவது என்ற மனுதர்மச் சிந்தனையை இந்த மாணவர்கள் உடைந் தெரிந்து விட்டார்களே! இவர்கள் மட்டுமல்ல, கிருஷ்ணகிரி மாவட்டம் வள்ளிமலையைச் சேர்ந்த நரிக்குறவ சமூக மாணவன் ராஜபாண்டி இந்த ஆண்டு 12 ஆம் வகுப்புத் தேர்வில் 1200 க்கு 1167 மதிப்பெண் பெற்று சாதித்துள்ளான். பிறப்பால் வருவதே தகுதியும் திறமையும் என்பது மீண்டும் முறியடிக்கப்பட்டுள்ளது.